ஒரு விளங்காத சத்தம் An Uncertain Sound 61-03-15 1. “நன்றி, சகோதரர் சாலிவன். நீங்கள் உட்காரலாம். இன்று இரவு இந்தக்கூடாரத்தில் மீண்டும் இங்கே வருவதற்காக தேவனுக்கு நான் எவ்வளவு நன்றியுள்ள வனாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்கு எனக்கு வார்த்தைகள் போதவில்லை. கடந்த முறை இங்கே சகோ. சாலிவன் ஜனங்களை சந்தித்ததையும் மற்றும் இந்த சபையில் எப்படியாக கர்த்தர் எங்களை ஆசீர்வதித்தார் என்பதையும் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந் தேன். அது ஒரு ஞாயிறு காலையாக இருந்தது. 2. சில நிமிடங்களுக்கு முன் நான் உள்ளே வந்தபோது, ஜனங்கள் “என் இருதயத்தில் சந்தோஷம், என் மனதில் சமாதானம்” என்று பாடிக் கொண்டிருந்ததை கேட்டேன். அதுதான் கிறிஸ்தவர்கள் பாடுவது; கிறிஸ்தவர்கள் பேசக் கூடியது அதுதான். அவர்களுடைய இருதயத்தில் சந்தோஷ மும், மனதில் சமாதானமும் இருப்பது. அதை செய்யக் கூடியவர் தேவன் ஒருவர் தவிர வேறு எவரும் அதை செய்ய முடியாது. 3. கலிஃபோர்னியாவின் புகைமூட்டத்திலிருந்து வெளியே வந்து, ஒருசில நேரங்களாவது ஆழமாக சுவாசிக்கக்கூடிய இந்த இடத்துக்கு மீண்டும் வருவது மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்குரிய பங்காகிய அந்த கலிஃபோர்னியா முழுவதையும் அவர்கள் வைத்துக் கொள்ளட்டும். அங்கேயுள்ள மக்களை நான் விரும்பு கிறேன்; ஆனால் அந்த பள்ளத்தாக்கில் இருக்கும் அந்த புகைமூட்டத்தை மட்டும் எனக்கு பிடிக்கவில்லை. 4. நான் கென்டக்கியில் உள்ள இந்த மலைத்தொடர் களில் ஒன்றில் பிறந்தவன்; அதிலிருந்து நான் விலகி இருக்க முடியவில்லை என்பது, நீங்கள் அறிந்ததே. மற்றவர்கள் விரும்பினால் எல்லோரும் அங்கே ஓடிச் செல்லலாம்; ஆனால் என்னைப் பொறுத்தவரை, குறைந்தது சுவாசிக்கக்கூடிய இந்த இடத்திலேயே இருக்க நான் விரும்புகிறேன். அங்கே இருந்தபோது என் கண்களில் எரிச்சல் கண்டது, என் தொண்டையும் சிவந்துவிட்டது. 5. மேலும். நான் உங்களுக்குச் சொல்லுவது என்ன வென்றால், பாவம் நாகரிகத்தோடு பயணிக்கிறது என்று நான் நம்புகிறேன். அது எப்போதும் பயணித்துக்கொண்டே இருக்கிறது; நாகரிகம் எங்கு சென்றதோ அங்கு பாவமும் சென்றுள்ளது. பாவம் எப்போதும் நாகரிகத்தின் மூலம் தான் வருகிறது. மேற்கில் வெள்ளையர்கள் வருவதற்கு முன், அங்கு இந்தியர்கள் மட்டுமே இருந்த காலத்தில், அவர் களுக்குள் பாவம் இருந்ததில்லை; அவர்கள் அமைதியான நல்ல வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். சில சமயங்களில் பழங்குடியினர் சண்டைகளால் சிறிய சிக்கல்கள் இருந் திருக்கலாம்; ஆனால் பாவம் என்பது நாகரிகம் வந்தபோது, வெள்ளை இனத்தோடு வந்தது. அவர்கள் பெண்கள், மதுபானம், சூதாட்டம், கொலை ஆகியவற்றையும் கொண்டு வந்தார்கள். 6. சூரியன் கிழக்கிலிருந்து மேற்குத் திசைக்கு செல்வது போல, நாகரிகமும் அதனுடன் பயணிக்கிறது. அது இன்னும் அப்பால் சென்றால் மீண்டும் கிழக்கே திரும்பி விடும் என்பதால், மேற்கு கடற்கரையில் கர்த்தர் ஒரு பெரிய “ரேடார் திரை” வைத்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது அதற்கு எதிராகத் தங்கி, ஒரு அலையைபோல் மீண்டும் திரும்பிவிடுகிறது. நிச்சயமாக நாம் மிகவும் மோசமான காலத்தில் வாழ்கிறோம். மிகவும் மோசமான காலம். இது மேற்கு கடற்கரைக்கு மட்டும் பொருந்தும் என்று நான் சொல்லவில்லை; இங்கே இருக்கும் இந்த “Buckeyes, Hoosiers, and corn-crackers” (ஓஹியோ, இந்தியானா, கென்டகி பகுதிகளில் வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் பெயர்) பற்றி வீண் பெருமை பாராட்ட ஏதுமில்லை. இங்கும் அதே நிலைதான் உள்ளது; ஆனால் அங்கிருப்பதைக் காட்டிலும் அதிக மாகவே காணப்படுகிறது. 7. “இப்போது ஓஹியோவில் நாம் பெற்றிருக்கும் இந்த ஐந்து இரவுகள்... நாளை இரவு அவர்கள் ஏதோ ஒரு பெரிய அரங்கில் கூட்டத்தை நடத்தப் போகிறார்கள் என்று நினைக்கிறேன்; ஆனால் நான் சபைக்கு வர முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், எனக்கு சபை மிகவும் பிடிக்கும். ஆம். சகோதரர் சாலிவனுடனான, பயணங்களில் நான் கவனித்தபோது, சிறந்த கூட்டங்கள் எப்போதும் சபை களில்தான் நடைபெறுகின்றன என்று நான் நினைக் கிறேன்.” 8. “நான் மூடநம்பிக்கையுள்ளவனாக இருக்கக் கூடாது என்று நம்புகிறேன்; நான் அப்படியாக இருந்தால் அது எனக்குத் தெரியாது. ஆனால் பொழுதுபோக்குகள், சூதாட் டம், நடனங்கள் போன்றவை நடைபெறும் இடங்களுக்கு நீங்கள் செல்லும்போது, எல்லா இடங்களிலும் சிறிய பிசாசுகள் உட்கார்ந்து இருப்பது போல எனக்குத் தோன்று கிறது. அவை அவர்களுடைய வாசஸ்தலமாக இருப்பது போல; அங்கேயே தங்கி விடுகின்றன. அப்படிப்பட்ட இடங்களில் நீங்கள் சென்று, கூட்டம் சரியாக ஆரம்பிக்கும் படி அவற்றை வெளியேற்றுவதற்கு சுமார் ஐந்து இரவுகள் பிரசங்கிக்க வேண்டிவருகிறது.” 9. ஆனால் சபை வீட்டில், பரிசுத்தர்கள் ஒன்று கூடுவ தால், தேவனுடைய தூதர்கள் சுற்றிலும் முகாமிட்டு இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அது தேவன் தமது ஜனங்களை வந்து சந்திக்கும் இடமாகும். அதனால் சபையில் இருப்பது எனக்கு எப்போதும் மிகவும் நன்றாகத் தோன்றுகிறது. அங்கே இருப்பதை வீட்டில் இருப்பது போல உணர்கிறோம். பொதுவான காரியத்தை உடையவர் களாய், நாம் ஒன்றுகூடி ஐக்கியம் கொள்ளும் ஸ்தலம் அதுவே. சகோதரர் சல்லிவனுடன் மீண்டும் இங்கே நாங்கள் வருவதற்கு கிடைத்த வாய்ப்பில் நான் நிச்சயமாக மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். 10. கடந்த வாரம் இங்கே அண்டை மாநிலமான விர்ஜீனியாவிலும், ரிச்மண்ட் நகரத்திலும் இருந்தேன்; அங்குள்ள தெற்கு மாநில மக்களுடன் அது மிகவும் மகிழ்ச்சியான நேரமாய் இருந்தது. அதை “நாட்டின் பிறப் பிடம்” என்று அவர்கள் அழைக்கிறார்கள். அங்குள்ள அந்த நல்ல பழைய தெற்கத்தியர்கள், கர்த்தரை உண்மை யாகவே நேசிக்கிறார்கள்; நாங்கள் அங்கே அற்புதமான நேரத்தை கொண்டிருந்தோம். ஆனால் மீண்டும் இங்கே, நம்முடைய வீட்டிற்கு திரும்பி வந்து, கொஞ்ச நேரம் ஒன்றாக ஆராதிக்க வேண்டும் என்று நான் ஆவலுடன் இருந்தேன். 11. இங்கே மேல்மாகாணத்திலிருந்து வந்துள்ள என் நண்பர்களை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சார்லி, நீங்கள் இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள்? எவ்வளவு தூரம் மேலே வாழ்கிறீர்கள்? (அந்த சகோதரர் எழுபது மைல் என கூறுகிறார்) சுமார் எழுபது மைல். (“இந்தியானா மாநில எல்லைக்குப் பக்கத்தில்.”) இந்தியானா மாநில எல்லைக்குள் தான். ராட்னியும் மற்றவர்களும்... (மீண்டும்: “இந்த பக்கம்.”) என்ன? இந்த பக்கம்? இந்தியானா மாநில எல்லையின் இந்தப் பக்கம். அவர் கிருபைக்குள் வந்து விடத்தான் இருந்தார், ஆனால் கொஞ்சம் தவறிவிட்டார். மாநில எல்லையிலேயே கொஞ்சம் தவறிவிட்டார். 12. இப்போது நீங்கள் கென்டக்கிக்கு வந்திருந்தால் சரியாக இருந்திருக்கும். இங்கே கென்டக்கியை சார்ந்த வர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ஓஹ்! (யாரோ ஒருவர் சகோதரர் பிரன்ஹாமிடம் பேசுகிறார்.) நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! ஒரு முறை நான் சொன் னேன்... (சகோதரர் சாலிவன் பேசுகிறார்.) மன்னிக்கவும்? (சகோதரர் சாலிவன்: “அவர்கள் என்னுடன் என்ன செய் வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”) எனக்கு தெரியவில்லை, சகோதரர் சாலிவன். 13. என் தாய் ஜெஃபர்சன்வில்லில் ஒரு தங்கும் இல்லத்தை நடத்தினார்; அங்கே எனக்கும் இதற்குச் சமமான ஒரு கூடாரம் (சபை) உள்ளது. ஒரு இரவு நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, “கென்டக்கியிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எழுந்து நில்லுங்கள்” என்று சொன்னேன். எவரும் உட்கார்ந்திருக்கவில்லை. எல்லோரும் எழுந்து நின்றார்கள். நான் சொன்னேன், “சரி, கென்டக்கி ஜனங்களும் மற்றும் வளை அணில்களும் (Ground Hogs) எந்த ஒரு துப்பாக்கி சுடுதலும் இல்லாமல் இந்த நாட்டை கைப்பற்றிவிட்டார்கள். அவர்கள் நேராக வந்து அதை எடுத்துக்கொண்டார்கள். எங்கோ இருந்து சில மிஷனரி களை இங்கே அனுப்ப வேண்டியதாயிற்று...” இப்போது நான் ஓஹியோவைப் பற்றி பேசவில்லை; ஒரு நிமிடம் காத்திருங்கள். நான் இந்தியானாவைப் பற்றி பேசுகிறேன், இந்தியானா மாநிலத்தில்.” 14. உலகம் முழுவதும் எங்கே சென்றாலும், தேவனு டைய ஜனங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். நான் ஆப்பிரிக்காவிலும், நான் சென்ற பிற நாடுகளிலும் கவனித்தேன். அந்த மக்களில் சிலருக்கு வலது கை எது, இடது கை எது என்பது கூட தெரியாது. ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் போது என்ன நடக்கிறது தெரியுமா? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும்போது எப்படி செய்கிறீர்களோ, அதே போலவே அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவார்கள்.” 15. அவர்கள் தங்களுடைய சொந்த மொழியில் பேசும்போது, நீங்கள் கேட்பீர்களானால் மிகவும் வியப்பாக இருக்கும். அவர்கள் பேசும்போது நாவால் “கிளிக்' போன்ற ஒலி எழுப்புவார்கள். அது லட்ர்ள்ஹ மொழி என்று நினைக்கிறேன். “லட்ர்ள்ஹ” என்று சாதாரணமாகச் சொன்னால் சரியாக இருக்காது; அந்த கிளிக் ஒலியுடன் சொல்ல வேண்டும் “லட்ர்ள்ஹ” போல. அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அந்த ஒலி இருக்கும். ஆனால் அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசத் தொடங்கும்போது, சில சமயங்களில் ஆங்கிலத்திலும் பேசுவார்கள். பாருங்கள்? அந்த அந்நிய தேசங்களில் உள்ள ஜனங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும்போது, அவர்கள் எங்கிருந்தாலும் மற்றவர்களைப் போலவே நடந்துகொள்கிறார்கள். அது இந்த வரம் “யாருக்கேனும் விருப்பமிருக்கிறதோ அவர் வரலாம்” என்பதற்குரியது என்பதை காட்டுகிறது. 16 “இப்போது நம்முடைய சகோதரர்கள் பலர் நின்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களுக்கு உட்காரும் இடத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் அது நம்மிடம் இல்லை அதனால் நான் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக பேசமாட்டேன் என்று நினைக்கிறேன். சற்றே நகைச்சுவைக்காக கூறு கின்றேன். கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார் என்றும், ஆனால் இயன்றவரை சீக்கிரமாக “போதும்” என்று உணரும்வரை மட்டும் பேசுவோம்; அதன்பிறகு கூட்டத்தை முடிப்போம். ஆனால் இங்கே இப்படியாக ஒன்றுகூடி ஐக்கியமாக இருக்கும் இந்த நேரம் மிகவும் அற்புதமானது; எங்கு தொடங்குவது என்று கூட தெரியவில்லை. இது மிகவும் மகிழ்ச்சியான நேரம்.” 17. “நான் முன்பு சொன்னதுபோல, மேற்கு கடற் கரையில் பெரிய கூட்டங்கள் நடந்தன. இந்த முறை கர்த்தர் மகத்தான ஆசீர்வாதத்தை பொழிந்தார். விசாலியா, பேக்கர்ஸ்ஃபீல்ட், ஃப்ரெஸ்னோ போன்ற இடங்களில், அந்த பள்ளத்தாக்குகளில் இருக்கும் ஜனங்கள் உண்மையாகவே தேவனுடைய வார்த்தைக்காக பசிதாகமுள்ள இருதயத்துடன் இருந்தார்கள். தேவன் தமது சபையை ஒன்றாகச் சேர்த்து, தேவனுடைய வார்த்தையில் விருந்துண்ணச் செய்கிறார் என்பதால்தான் அந்த பசி இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.” 18. “இப்போது நாம் ஆரம்பிப்பதற்கு முன், அவரு டைய வார்த்தையை வாசிப்பதற்கு முன், அந்த வார்த் தையை ஆக்கியோனிடம் முதலில் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்களும் அப்படித்தான் நினைக் கிறீர்களா? ஆகவே, இப்போது நம்முடைய தலைகளைத் தாழ்த்தி, சிறிய குழந்தைத்தனமான எல்லா காரியங்களையும் ஒதுக்கி வைத்து, மிகவும் பரிசுத்தமான அந்த வார்த்தையை நோக்கி மனதைத் திருப்புவோம்.” 19. “எங்கள் பரலோகப் பிதாவே, இன்று இரவு உம்மு டைய நாமத்தால் அழைக்கப்பட்ட இந்த சபையில் நாங்கள் ஒன்றுகூடியிருக்கிறோம்; இங்கே கூடிவந்துள்ள ஜனங்கள் உம்முடைய நாமத்தால் அழைக்கப்பட்டவர்கள். “என் நாமத் தால் அழைக்கப்படும் ஜனங்கள் ஒன்று கூடி ஜெபித்தால், நான் பரலோகத்திலிருந்து அதை கேட்பேன்” என்று உம்முடைய நித்திய வார்த்தையில் ஒரு வாக்குத்தத்தத்தை நீர் கொடுத்துள்ளீர். அது உம்முடைய வாக்குத்தத்தம்; உம்முடைய ஜனங்களுக்கு நீர் கொடுத்த எல்லா வாக்குத் தத்தங்களையும் நீர் நிறைவேற்றுகிறீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த சபைக்காகவும், இங்கே பிரதி நிதித்துவப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு நபருக்காகவும், ஒவ்வொரு சபைக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்மை விசுவாசிக்கும் பிள்ளைகளாகிய எங்களை நீர் ஒன்றாக ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.” 20. “இன்று இரவு, விசேஷமாக எங்கள் கனிவான, நம்பிக்கைக்கு பாத்திரமான சகோதரர் சல்லிவனை நீர் அளவின்றி மிகுதியாய் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்; உமக்கு சேவை செய்யவும், உமக்காக ஏதாவது செய்யவும், தன்னுடைய ஒவ்வொரு நேரத்தையும் ராஜ்யத்திற்காக பயனுள்ளதாக்கவும் அவருடைய இருதயத்தின் வாஞ்சை யின் நிமித்தம் அவரை ஆசீர்வதியும். நகரத்திற்குள் பல்வேறு ஊழியங்களைக் கொண்ட பல்வேறு ஊழியக் காரர்களை அழைத்து வந்து, அவர்கள் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றும்படி, பரிசுத்த ஆவியானவர் அவரை கண்காணியாக நியமித்து அந்த மந்தையை போஷித்து வருகிறார். இதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.” 21. இப்போது, நாங்கள் விரும்பியவண்ணம், அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்கள் இங்கே இந்த மந்தையைப் போஷிக்க உமக்கு சித்தமானால், பரிசுத்த ஆவியானவர் இந்த ஆடுகளுக்கான ஆகாரமான வார்த்தையை தந்து, அதை பரிசுத்த ஆவியின் ரூபகாரப்படுதலோடும், வல்லமையோடும் வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகிறோம். நாங்கள் உம்மை எதிர்பார்த்து காத்திருக் கும்போது எங்களை ஆசீர்வதியும். இரட்சிக்கப்பட வேண்டிய எல்லாரையும் இரட்சியும், ஆண்டவரே; பரிசுத்த ஆவியைப் பெற பொறுமையாகக் காத்திருக்கும் விசுவாசி களை நிரப்பியருளும். இன்று இரவு இங்கே அந்த நிலையில் இருக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட்ட வர்களாகவும், ஆவியால் நிரப்பப்பட்டவர்களாகவும் மகிழ்ச் சியுடன் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்படி அருள்புரிய வேண்டுகிறோம். 22. ஆண்டவரே, வியாதியஸ்தர்களை சுகமாக்கும். “நகரத்திற்குள் சென்று அவ்விடத்திலுள்ள பிணியாளிகளை சொஸ்தமாக்கி தேவனுடைய இராஜ்ஜியம் உங்களுக்கு சமீப மாய் வந்திருக்கிறது” என்று அவர்களுக்கு சொல்லுங்கள் என்று நீர் எங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறீர். தேவனே, உம்முடைய ஊழியக்காரர்களாகவும், தூதுவர்களாகவும் இருக்கும் எங்களுக்கு இந்த காரியங்களை அருளிச் செய்யும்படி வேண்டுகிறோம்; ஏனெனில் ராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஜனங்கள் அவைகளை கண்டு உம்மை விசுவாசித்து, அந்த வார்த் தையை ஏற்ற முறையில் வெளிப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும். எல்லாருக்கும் வரப்போகும் அந்த கணக்கு ஒப்புவிக்கும் நாளில், இப்போது நாங்கள் செய்ய முயற் சிக்கும் இந்த முயற்சிகளின் காரணமாக, இரத்தத்தினால் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் அங்கே நிற்பார்களாக. 23. பிதாவே, நாங்கள் ஒன்றுகூடும் போது சிறு பிள்ளை களைப்போல பேசுகிறோம், மகிழ்ச்சியாக இருக்கிறோம். இப்போது அவற்றை ஒதுக்கி வைத்து, ராஜ்யத்தின் பணிக்குள் வந்து, பரிசுத்த ஆவிக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்க எங்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டு கிறோம். இதை இயேசுவின் நாமத்திலும், அவர் நிமித்த மாகவும் ஜெபிக்கிறோம். ஆமென். 24. இப்போது சிறிய பின்னணியாக, 1 கொரிந்தியர் 14ஆம் அதிகாரம் 8ஆம் வசனத்திற்குத் உங்கள் கவனத்தை திருப்ப விரும்புகிறேன்: அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? 25. நாம் நிச்சயமற்ற காலத்தில் வாழ்கிறோம். இன்று நாம் பார்க்கும் யாவையும் கிட்டத்தட்ட நிச்சயமற்றதாகவே இருக்கிறது. உறுதியானது என்று எளிதில் சொல்லக்கூடிய ஒன்றைக் கூட இன்றைக்கு காண முடியாத காலத்தில் நாம் வாழ்கிறோம். நமது தேசிய பாதுகாப்பே மிகவும் நிச்சய மற்றதாக உள்ளது; ஏன், உண்மையில் சர்வதேச பாதுகாப் பும் கூட அப்படியே உள்ளது, ஏனெனில் நாம் யுகத்தின் முடிவில் இருக்கிறோம். 26. சில நாட்களுக்கு முன்பு, கலிபோர்னியா, கிளிப்டன் உணவகத்தில் நடந்த வர்த்தகர் கூட்டத்திற்கு பிறகு, ஒரு பாப்டிஸ்ட் போதகர் என்னுடைய கரங்களை குலுக்க வரும்போது, ஒரு தகவல் கிடைக்கப் பெற்றது. அவர் என் கரங்களை குலுக்க ஆரம்பித்த போது, அவர் அந்நிய பாஷையில் பேச ஆரம்பித்தார். அவர் திரைப்பட நட்சத்திரமான மர்லின் மன்றோவின் சகோதரன், அவ்வாறு தான் நினைக்கிறேன். அப்போது அங்கே லூசியானாவி லிருந்து வந்திருந்த ஒரு பெண் இருந்தாள்; அவளுக்கு பிரெஞ்சு மொழி தெரிந்ததால், “அவர் பிரெஞ்சு மொழியில் பேசினார்' என்று சொன்னாள்.” “எனக்கு பிரெஞ்சு மொழியில் ஒரு வார்த்தையும் தெரியாது” என்று அவர் சொன்னார், 27. அந்தப் பெண் அவர் சொன்னதை விளக்கமாக மொழிபெயர்த்தபோது, ஐக்கிய நாடுகள் சபையில் மொழி பெயர்ப்பாளராக இருந்த ஒருவர் அங்கே இருந்தார்; அவர் அந்தப் பெண்ணிடமும் வியாபாரிகள் சங்கத்தினரிடமும் வந்து, “அந்தப் பெண் மிக சரியாக மொழிபெயர்த்தார்” என்றார். அவர் ஐக்கிய நாடுகள் சபையில் மொழிபெயர்ப் பாளராக இருப்பவர். அது எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு செய்தியாக இருந்தது. 28. பின்னர், ஒரு மாநிலத்தின் மேலவை உறுப்பினராக இருந்த ஒருவர் சகோதரர் ஷகரியனுடன் பேசிக் கொண்டிருந்தார். கிரீன்லாந்தில் இருந்து இந்த நாடு அணு ஆயுதங்களால் பூமியை அழிக்கத் தயாராக இருக்கிறது; ஒரு பொத்தானை அழுத்தினாலே எந்த நாட்டையும் பூமியில் இருந்து முற்றிலும் அழிக்க முடியும். இன்னின்ன குறிப்பிட்ட காரியங்களை செய்யும் வெடிகுண்டு வகை களை நாம் பெற்றிருக்கிறோம் என்று கூறப்படுவதை மாத்திரம் நாம் கேள்விப்படுகிறோம்; ஆனால் அதைவிட பெரியவை அவர்களிடம் இருக்கின்றன. தேசிய விஷயங் களில் இருக்கும் எல்லா ரகசியங்களையும் அவர்கள் வெளிப்படுத்த மாட்டார்கள். 29. இந்த மனிதர் ஜøலை மாதத்தில் மியாமி நகரத் திற்கு வருகிறார்; அங்கே ப்ளோரிடாவிலே நான் ஒரு கூட்டம் நடத்த இருக்கிறேன். ஒரு சமயத்தில், கண்காணிப்பு திரையில் ஒரு ஏவுகணை அல்லது தாக்குதல் சிக்னல் தோன்றியது. அந்த மனிதருக்கு ஒரு லீவரை இழுக்கும்படி உத்தரவு கொடுக்கப்பட்டது; அவர் அதை இழுத்திருந்தால் உடனே பல பெரிய ராக்கெட்டுகளும் குண்டுகளும் ஏவப்பட்டிருக்கும், போர் ஆரம்பமாகியிருக்கும். ஆனால் அவர் சொன்னதாவது தன்னால் அந்த லீவரை இழுக்கவே முடியவில்லை. ஏதோ ஒன்று அவரைத் தடுத்தது. அது தேவனாக இருக்குமோ என்று நான் எண்ணுகிறேன் இன்னும் இங்கே இரட்சிக்கப்பட வேண்டிய யாரோ ஒருவர் இருப்பதால், அது நடைபெற வேண்டிய நேரம் இன்னும் வரவில்லையோ? இது நாம் அந்த இறுதி நேரத்திற்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. 30. தேவ தூதன் லோத்திடம், “நீ இங்கிருந்து வெளியேறு; நீ வெளியேறும் வரை நான் எதையும் செய்ய முடியாது” என்று சொன்னான். அவர் அதைக் குறித்து ஏதாவதொன்றை செய்வதற்கு முன்பாக, அவன் வெளியேற வேண்டியதாயிருந்தது. 31. பல வருடங்களுக்கு முன்பு பெரிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தின. சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பெரிய கப்பல்களும் பெரிய படைகளும் கொண்ட நாடுகள். ஆனால் இப்போது அது அப்படியில்லை; எந்தச் சிறிய நாடும் கூட முழு பூமியையும் அழிக்க முடியும். ஆகவே இப்போது அது நாட்டின் அளவைப் பொறுத்தது அல்ல; அது தன் நேரம் வருவதற்காக காத்திருக்கிறது. 32. “இப்போது, இதை நாம் மிகவும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். “ஓ” என்று நீங்கள் சொல்கிறீர்கள், “சகோதரர் பிரன்ஹாமே, இப்படிப்பட்ட காரியங்களை நான் முன்பே கேட்டிருக்கிறேன்.” அது எனக்குத் தெரியும் என்கிறீர்கள்; ஆனால் ஒருநாள் நீங்கள் இதைக் கேட்பது கடைசி முறையாக இருக்கும். மற்ற எல்லா காரியங்களும் இவ்வளவு அருகில் இருப்பதால், நான் எப்பொழுதும் அதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி இருக்கும் இந்த நேரத்தில் நாம் எப்படிப்பட்ட ஜனங்களாக இருக்க வேண்டும்? பாவி இரக்கத்தை வேண்டி கூக்குரலிட வேண்டும்; கிறிஸ்தவன் தேவனை துதித்து ஆர்ப்பரிக்க வேண்டும். சரிதான். 33. ஒருவர் ஒருமுறை “சகோதரர் பிரன்ஹாமே, இயேசு வெகு சீக்கிரம் வருகிறார் என்று சொல்வதால் நீங்கள் மக்களை பயமுறுத்துகிறீர்கள் என்று கூறினார். நம்முடைய உலகம் முடிவுக்கு வருகிறது என்று நினைப் பதே பயங்கரமான காரியம் அல்லவா?” 34. நான் சொன்னேன்: “கிறிஸ்தவருக்கோ அது அப்படியல்ல; அவன் மனதில் இருக்கக் கூடிய மிக மகிமை யான காரியம் அதுதான். நம்முடைய கர்த்தர் எந்நேரமும் வரலாம் என்று நினைப்பதுதான். அப்போது எல்லாம் மாறி விடும்; எல்லாம் முடிவடையும். ” 35. சமீபத்தில் கர்த்தர் எனக்குக் கொடுத்த அந்த தரிசனத்தைப் பற்றிய வியாபாரிகள் சங்கத்தினர் அச்சிட்ட ஒரு சிறிய புத்தகம் இங்கே இருக்கிறது என்று நினைக் கிறேன்; நீங்கள் அதை வாசிக்க முடிந்தால் நல்லது. 36. ஆம், பவுல் “நல்ல போராட்டத்தைப் போராடி னேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியா கிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளு வார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” என்று கூறுகிறார். ஓஹ்! நீங்கள் கர்த்தரை நேசிக்கும்போது, எல்லா பயமும் அகன்றுவிடும். நீங்கள் அவரைச் சந்திக்கப் போகிறீர்கள். 37. சமீபத்தில், என் பழைய நண்பரான டாக்டர் ஊ. ஊ. போஸ்வொர்த் மியாமியில் மரிக்கும் தருவாயில் இருந்த போது, அவரை பார்க்க நான் அங்கே சென்றேன். அவர் சுமார் தொண்ணூறு வயதுக்கு அருகில் இருந்தார். நான் அவரிடம் “சகோதரர் பாஸ்வர்த் அவர்களே, உங்கள் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நேரம் எது? நீங்கள் ஐம்பத்தைந்து அல்லது அறுபது ஆண்டுகளாக சுவிசேஷம் பிரசங்கித்து வருகிறீர்கள்.” என்று கேட்டேன், “இது தான் நான் வாழ்ந்த மிக மகிமையான நேரம்.” என்று அவர் கூறினார். “ஏன் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அந்த முதிர்ந்த பரிசுத்தவானை கேட்டேன். 38. அதற்கு அவர் “சகோதரர் பிரன்ஹாமே, நான் இளைஞனாக இருந்த காலத்திலிருந்து நான் வாழ்ந்தது முழுவதும் இயேசு கிறிஸ்துவுக்காகத்தான்” என்றார். மேலும், அவர் “எந்த நேரத்திலும் அவர் கதவின் வழியாக வந்து என்னைத் தம்முடன் அழைத்துச் செல்லுவார் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” என்று அவர் கூறினார். மேலும் “இது மிகவும் மகிமையான தருணம்! நான் எண்ணக்கூடிய மிக உயர்ந்த விசுவாசம் என்னவென்றால், விரைவில் நான் என் ஆண்டவரின் கரங்களில் அவருடன் என்றென்றும் இருப்பேன் என்பதே.” அதுவே உண்மையான கிறிஸ்தவனின் மரணம், உண்மை யான கிறிஸ்தவனின் மரணம் என்றல்ல, ஒரு உண்மையான கிறிஸ்தவன் அவரோடு இருப்பதற்காக பயணப்படுவதாகும். 39. லாஸ் ஏஞ்சலஸில், பால் ரேடர் மரிக்கும் தருவாயில் இருந்தபோது நாம் மரணம் என்று அழைக்கும் அந்த நேரத்தில், அவர் தனது சகோதரர் லூக்காவை அழைத்து, “இதைக் நினைத்துப் பார், லூக்கா, நாம் நீண்ட காலமாக ஒன்றாக இருந்தோம். ஆனால் இன்னும் ஐந்து நிமிடங்களில், நான் இயேசு கிறிஸ்துவின் சந்நிதியில், அவருடைய நீதியின் ஆடையை தரித்து நிற்பேன்,” என்று சொன்னார். அவர் தனது சகோதரரின் கையை இறுக்கமாகப் பிடித்து, கர்த்தரை சந்திக்கச் சென்றார். ஓ, அது லாங்ஃபெல்லோவின் வாழ்க்கையின் சங்கீதம் (A Psalm of Life) என்னும் கவிதையை நினைவூட்டுகிறது. மகத்தான மனிதர்களின் வாழ்க்கைகள் நமக்கு நினைவூட்டுகின்றன, நாம் நமது வாழ்க்கையை மேன்மையாக மாற்ற முடியும், பிரிவுகளின் போது, காலத்தின் மணலில் பாதச்சுவடுகளை விட்டுச் செல்கிறோம். அது கிறிஸ்தவனை எவ்வளவாய் ஊக்கப்படுத்துகிறது! 40. பாவிகளும் பரிசுத்தர்களும், உலகை விட்டு சென்ற பெரிய மனிதர்களின் கடைசி வார்த்தைகள் பற்றிய ஒரு புத்தகம் என்னிடம் இருந்தது. அது என் வீட்டில் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதில் ட்வைட் மூடியின் வார்த்தைகளும், உலகை விட்டு சென்ற பல பெரிய பரிசுத்தர்களின் வார்த்தைகளும் இருந்தன. மூடி மரணத்தை எதிர்கொண்டபோது, அவர் “இதைக் நீங்கள் மரணம் என்று அழைக்கிறீர்களா?” “இது என் கிரீடம் சூடும் நாள்.” என்று அவர் சொன்னார், 41. மேலும், இங்கிலாந்தின் ஒரு ராணி மிகக் கொடிய வளாக இருந்தவள், தன் வாழ்க்கையில் இன்னும் பதினைந்து நிமிடங்கள் கிடைத்தால், அதற்கு ஈடாக தனது ராஜ்யத்தையே கொடுத்து விடுவேன் என்று கூறினாள். பாருங்கள், பாதையின் இறுதிக் கட்டமானது அதை அதைக் கூறுகிறது. மேலும், அங்கேதான் நாம் இருக்கிறோம், பாதையின் முடிவில். 42. இப்போது தேசிய பாதுகாப்பிலும் எந்த நிச்சயத் தன்மையும் இல்லை. ஏனெனில், அவர்கள் உங்களை அழிக்க முடியாத அளவுக்கு நீங்கள் பூமிக்குள் அவ்வளவு ஆழம் தோண்டி பதுங்க முடியாது. ஒன்றும் செய்ய முடியாது; நாம் பாதையின் முடிவில் வந்துவிட்டோம். அதேபோல் மற்ற பல விஷயங்களிலும் நிச்சயத்தன்மை இல்லை. எதிலும் உறுதி இல்லை 43. நான் இங்கே வரும்போது ஓர் செய்தி ஒலி பரப்பைக் கேட்டேன். அது, வேலை இழந்தவர்கள், ஹெர்பட் ஹøவர் (Herbert Hoover) அவர்களின் ஆட்சி காலத்திலிருந்த மந்தநிலைக்காலத்தை விட இப்போது அதிகமாக உள்ளனர். மேலும் 1930-களில் இருந்ததை விட இப்போது வேலை இழந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். 44. அந்த காலத்தை அனுபவித்த நம்மில் பலர் அதை நினைவில் வைத்திருக்கிறோம். அப்போது, தோல் கூட நீக்காமல் சிறிது உருளைக்கிழங்கை சாப்பிடுவோம். அதுவும் சில நேரங்களில் மட்டுமே கிடைக்கும். அதையே காலை, மதியம், இரவு உணவாக எடுத்துக்கொள்வோம். அது எவ்வளவு கடினமாக இருந்தது. இப்பொழுது, அவர்கள் அதை கூறுகிற காரணத்தால், அன்று இருந்த ஜனத்தைக் காட்டிலும் ஐக்கிய நாடுகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஜனம் அதிகமாக இருக்கிறது. 45. சமீபத்தில் ரிச்மண்ட், லூயிவில் மற்றும் பல இடங்களில் பார்த்தபோது, இது நம்முடைய தலைமையின் காரணமாகவே வருகிறது என்று நான் நினைக்கிறேன். தெருவோரங்களில் பெண்கள் போலீஸôக இருப்பதை பார்த்தேன். ஒரு பெண் போலீஸôக இருந்து மதுவில் மயங்கியவர்களுடன் போராடுவது அது என்ன வேலை? அது ஆண்கள் செய்ய வேண்டிய வேலை. இந்த பெண்களில் சிலரை அவர்களுக்குரிய இடமான சமையல் அறைக்கு திரும்ப அனுப்பினால், ஆண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால்... இது அப்படிப் பட்ட காலம் தான் வேலை இல்லை, நேரம் இல்லை, எதுவும் இல்லை போல உள்ளது. எல்லாவற்றையும் சரி செய்ய ஆண்டவரின் வருகை மட்டுமே உள்ளது. தொழில்கள்! 46. குடும்ப வாழ்க்கை நிச்சயமற்றதாகிவிட்டது. சமாதான காலத்தில் இவ்வளவு அதிகமான விவாகரத்துகள் ஏற்பட்டது போன்ற காலம் முன்பு எங்களுக்கு இல்லை. நமது குடும்ப வாழ்க்கை சிதைந்து போயுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, சபைக்குச் செல்லும் நேரத்தைத் தவிர, தாய் மற்றும் தந்தை இருவரும் இரவில் வீட்டிலேயே இருப்பார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை தெருக் களில் சுற்றித் திரியவோ, இரவு முழுவதும் வெளியே இருக்கவோ அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இப்போது அது ஒரு சாதாரணமான விஷயமாகி விட்டது போல தெரிகிறது. 47. ஓ, இன்று இருக்கும் நவீன குடும்பத்தை பாருங்கள். அப்பா வேகமாக பந்தய போட்டி அறைக்கு செல்கிறார். பையன்கள் மேஜை விளையாட்டுகளிலும், அல்லது பந்து விளையாட்டுகளிலும்,அல்லது அதுபோன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர். அம்மாவும் கூட. சகோதரி எங்கோ உணவகத்திலும், வேறெங்காவது ராக் அண்டு ரோல் விருந்து நிகழ்ச்சியிலும் இருக்கிறாள். இளசுகள் சிறிய பந்தய கார்களில் எத்தனை பேர்களை இடித்து தள்ள முடியும் என்று பார்க்க செல்கின்றனர். இதுதான் இன்றைய குடும்ப வாழ்க்கை. வேதாகமம்? ஓ, அது ஒரு மகத்தான புத்தகம் தான், ஆனால் பாஸ்டர் அல்லது யாராவது வரும்வரை அது எங்கோ ஒரு அலமாரியில் வைக்கப் பட்டிருக்கும். நாம் முன்பு கொண்டிருந்த குடும்ப வாழ்க்கை இப்போது இல்லை. குடும்ப வாழ்க்கை மிகவும் நிச்சயமற்றதாகிவிட்டது. 48. இன்றைய காலத்தில், ஒருவன் திருமணம் செய்யும் போது, இளைஞர்களே, நீங்கள் நீண்ட நேரம் ஜெபித்து, தேவன் உங்களுக்கு சரியான துணையை கொடுக்கும்படி கேளுங்கள். இளம் பெண்களும் அதேபோல் செய்ய வேண்டும். ஏனெனில் இது மிகவும் நிச்சயமற்றதாகிவிட்டது. கலிபோர்னியாவில் நான் அறிந்ததாவது, கடந்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் சீர்கேடு மற்றும் ஒழுக்கக் கேடான வாழ்க்கை நடத்தும் மக்களின் எண்ணிக்கை பதினைந்து அல்லது இருபது சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஓ, இது மிகவும் பயங்கரமானது! குடும்ப வாழ்க்கை நிச்சயமற்றதாகிவிட்டது. 49. அரசியலில் நிச்சயமில்லை. இனி அரசியலில் எந்த நிச்சயத்தன்மையும் இருக்கப்போவதில்லை. கட்சிகளுக்குள் ளும் நிலைத்தன்மை இல்லை; அவர்களுக்குள் நேர்மையும் இல்லை. யாராவது சொல்லலாம், “நீங்கள் மேடையில் அரசியலைப் பற்றி பேசக்கூடாது.” அது உண்மை. ஆனால் ஒழுக்கமும் கிறிஸ்தவமும் மேடையில் பேசப்பட வேண்டும். அது சரி. நான் அரசியல்வாதி அல்ல; நான் ஒரு கிறிஸ்தவர். இரு தரப்பும் ஊழலாகிவிட்டன. 50. சமீபத்திய ஜனாதிபதி தேர்தலிலும் கூட, அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை மீண்டும் பரிசோதிக்க வேண்டியிருந்தது. ஏனெனில், நீங்கள் ஒருவருக்கு வாக் களிக்கும்போது, மற்றொருவருக்கு வாக்களித்ததாக பதிவு செய்யப்படுமாறு அதை அமைத்திருந்தனர். நேர்மை இல்லை. யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது தெரி வதில்லை, அவர்கள் இனி சொல்லவும் முடியாது; அவர் களை வாக்குகளை என்னும்படி வைக்கிறோம். ஆனால். வாக்குகளை எண்ணும்படி சிலர் அதை முறைகேடாக எண்ணும் அளவுக்கு ஊழலில் இருக்கிறார்கள். கட்சிகள் தங்களது மனுஷரை முன்னிலைப்படுத்தி விடுகின்றனர். நேர்மை இல்லை. 51. இப்போது, திரு. கென்னடி ஒரு குடியரசுக் கட்சியினராக இருந்தாலோ அல்லது ஜனநாயகக் கட்சியினராக இருந்த திரு. நிக்சன் இருந்தாலோ அது முக்கியமில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாக வாக்களிக்கும்படி அமைக்கப்பட்டிருந்தால், அதுவே தவறு. எஃப்.பி.ஐ. அதைப் பற்றி நிரூபித்தது, ஆனால் அவர்கள் அதற்காக எதையும் செய்யவில்லை. பாருங்கள்! ஏன் இப்படிப்பட்ட விஷயங்கள் மக்களிடையே நடக்கின்றன என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அது ஏன் நடக்கிறது? ஏனெனில் இவை எல்லாம் நடக்க வேண்டியவையே. நாம் இறுதி காலத்தில் இருக்கிறோம். இவை அப்படிதான் இருக்க வேண்டும். இந்த மனிதன்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நாம் இறுதி காலத்தில் இருக்கிறோம். நீங்கள் இரண்டு மற்றும் இரண்டு சேர்த்து நான்கு ஆகும் என்று கணக்கிட முடியும் போல, நாம் இறுதி காலத்தில் இருக்கிறோம் என்பதை அறியலாம். இந்த இயந்திரங்கள் எவ்வளவு ஊழலாக இருப்பதை நிரூபித்தாலும், அவை அப்படியாகத்தான் இருக்க வேண்டும். 52. ஒருநாள், என் அடுத்த கூட்டங்களில் ஒன்றை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவராக இருந்த ஒரு போதகர் என்னை அழைத்து, “நீங்கள் எங்கள் சபையில் உள்ள சகோதரிகள் தலைமுடியை வெட்டுவது, குறுகிய உடைகள் அணிவது போன்றவற்றை எதிர்த்து அதிகமாக பிரசங்கிக் கிறீர்கள் என்று கேள்விப்படுகிறேன்” என்றார். “ஆம், நான் அப்படியே செய்கிறேன்” என்று நான் சொன்னேன். “நீங்கள் அதை கேட்க விரும்பவில்லை என்றால், என்னை அழைக்க வேண்டாம்.” என்றேன். “நீங்கள் அதை ஒருநாள் நிறுத்துவீர்களா?” என்று அவர் கேட்டார், “இல்லை. நீங்கள் பாவத்தை ஒருநாள் நிறுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?” என்று நான் கேட்டேன். “முடியாது” என்று அவர் சொன்னார், 53. “அப்படியானால், நீங்கள் அதற்கு எதிராக என்ன பிரசங்கிக்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். பாருங்கள்! தவறு என்பது தவறுதான். அதற்கு எதிராக யாரோ ஒருவர் குரல் கொடுக்க வேண்டும். அது சரி. உண்மையைச் சொல்லுங்கள்; ஏனெனில் தேவனுடைய கோபம் ஊற்றப்படும் போது, பின்னர் உங்களுக்கு எந்த காரணமும் சொல்ல முடியாது. ஆம், அரசியல், வேலைவாய்ப்புகள், தேசிய பாதுகாப்பு எல்லாமே நிச்சயமற்றதாகிவிட்டன. 54. இப்போது நாம் சபையை குறித்துப் பார்ப்போம். “சபை” என்று அழைக்கப்படுவது கூட நிச்சயமற்றதாகி விட்டது. அமெரிக்காவில் மட்டும் இப்போது சுமார் தொள்ளாயிரம் பிரிவுகள் உள்ளன, ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு எதிராக உள்ளது. அப்படியானால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எப்படி அறிந்து கொள்வீர்கள்? நாம் இறுதி காலத்தில் இருக்கிறோம்; பாதையின் முடிவை எட்டிவிட்டோம். 55. இங்கே ஒரு மெத்தடிஸ்ட், அங்கே ஒரு பாப்டிஸ்ட், இங்கே ஒரு பிரெஸ்பிடீரியன், இவ்வாறு நாடு முழுவதும் இருக்கட்டும்; அவற்றில் ஒவ்வொன்றையும் நான் மதிக் கிறேன். அது நல்லதே. குறைந்தபட்சம், சட்டவிரோத இடங்களும் அசுத்த ஸ்தலங்களும் இருப்பதற்குப் பதிலாக, பதிலாக, அவை எங்கே இருந்தாலும், அறம் சார்ந்த சிறு அமைப்பாக இருக்கும்வரை, அது ஒரு பொருட்டல்ல, ஒருவர் சொன்னது போல யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்கிறேன் “எந்த வெளிச்சமும் இல்லாமல் இருப்பதற்குப் பதிலாக, ஒரு “காம்பெல்லைட்” (Campbellite - சீர்திருத்த சபை கொள்கையில் நம்பிக்கை கொண்டவனாக) ஆக இருப்பதே மேல்.” அது ஒரளவுக்கு உண்மையே. எதுவாக இருந்தாலும், அது கொஞ்சமாவது நன்மை செய்கிறது. நமக்கு அவை எல்லாம் தேவையே. 56. ஆனால் அது தேவனுடைய திட்டம் அல்ல; சபைகளையும் ஸ்தாபனங்களையும் உருவாக்குவது அது நமது திட்டம். இதை நாம் ஏதேன் தோட்டத்திலேயே முயற்சி செய்தோம்; அது ஏதேன் காலத்திலிருந்தே உள்ளது. “மதம்” என்றால் “மூடுதல்” என்று பொருள். ஆதாம் தனக்கென்று ஒரு சொந்த பாதையை உண்டாக்க லாம் என்று, தன்னை (தன் நிர்வாணத்தை) மறைக்க முயற்சித்தான். ஆனால் அது கிரியை செய்யவில்லை. 57. தேவன் மனிதனை சந்திக்கும் ஒரே இடம் இருக் கிறது அது அவனுடைய கல்வியிலும் இல்லை, அவனு டைய ஸ்தானத்திலும், அவன் எதில் இணைந்துள்ளான் என்பதிலும் இல்லை; அது இரத்தத்தின் கீழ் மட்டும் தான். தேவன் மனிதனை சந்தித்ததும், சந்திப்பதும், சந்திக்கப் போகிறதும் ஒரே இடத்தில் தான் அது இரத்தத்தின் கீழ். அதுவே அந்த இடம். சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் தேவன் ஏதேன் தோட்டத்திலேயே அந்த திட்டத்தை நிறுவினார். 58. தேவன் ஒருமுறை ஒரு தீர்மானம் எடுத்தால், அதை அவர் ஒருபோதும் மாற்றமாட்டார். ஏனெனில் அவர் பரிபூரணமானவர்; அவர் செய்கிறதும், பேசுகிறதும் எல்லாம் பரிபூரணமானதே. ஆகையால், உலகம் இருக்கும் வரை, பாவி இருக்கும் வரை, அவர் தமது திட்டத்தை மாற்ற முடியாது. ஏதேன் தோட்டத்தில் பாவம் முதன்முதலாக நிகழ்ந்த காலத்திலிருந்து, கடைசி பாவம் நிகழும் வரைக் கும், மீட்பிற்கான ஒரே வழி மட்டுமே உள்ளது அது சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் தான். வேறு எதுவும் செயல்படாது. நமது மரபுக் கோட்பாடுகள் (Creeds), ஸ்தாபனங்கள் (Denominations) மற்றும் பல விஷயங்கள் தங்கள் பங்கை செய்துள்ளன. நல்ல பங்கையும் செய்துள்ளன. ஆனால், அது தேவனுடைய திட்டம் அல்ல. அவருடைய திட்டம் இரத்தத்தின் வழியே தான். 59. ஆகையால், சபைகளிலும் நிச்சயமற்ற சத்தங்கள் உள்ளன. ஒன்றில், “அற்புதங்களின் நாட்கள் முடிந்து விட்டன” என்று சொல்லப்படுகிறது. அது வேதாகமத்திற்கு மிகவும் முரணானது. மற்றொருவர், “விசுவாச அறிக்கை யினை (Creed) ஒப்பிக்க வேண்டும், இதைச் செய்ய வேண்டும், அதைப் செய்ய வேண்டும்” என்று கூறு கிறார்கள். இவை அனைத்தும் நிச்சயமற்றவை; ஏனெனில் அவை மிகவும் அதிகமாக உள்ளன, ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று எதிராக பல விதமான கருத்துகளை உருவாக்குகின்றன இது அதற்கு எதிராக, அது இதற்கு எதிராக அவற்றில் சுமார் தொண்ணூற்று ஐந்து சதவீதம் வேதாகமத்திற்கு முரணானவை. 60. ஆகையால், சபைகளில், அரசியலில், குடும்ப வாழ்க்கையில் எங்கும் நிச்சயமற்ற சப்தங்களே தொனிக்கிறது. எல்லாமே நிச்சயமற்றதாகத் தோன்றுகிறது. 61. இப்போது, வேதாகமம் இங்கே, 2 தீமோத்தேயு 3:7-ல், இந்த நாட்கள் வரும் என்று கூறுகிறது. அவர்கள் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் இருப்பார்கள் என்று அது கூறுகிறது. இது முற்றிலும் உண்மை. தொலைக்காட்சி வீடுகளுக்குள் வந்து, மக்களை ஜெபக் கூட்டங்களிலிருந்து விலக்கி வைத்திருக்கிறது. அதற்கு ஒரு ஈர்ப்பு உள்ளது அது கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிறது. 62. எல்லா நிகழ்ச்சிகளும் நல்லதல்ல என்று நான் சொல்லவில்லை; அதில் சில நல்லவை இருக்கலாம். ஆனால், அதில் பெரும்பாலானவை நல்லதல்ல என்பது நமக்கு தெரியும். தொண்ணுற்றொன்பது சதவீதம் சரியான தாக இருப்பதில்லை. ஒரு சதவீதம் நல்லது என்று நாம் சொல்லலாம். ஆனால் அந்த ஒரு சதவீதத்திற்காக, நீங்கள் உயிருள்ள, நூறு சதவீதம் சரியான இடமாகிய தேவனுடைய சபையை விட்டுவிடுவீர்களா?. புதன்கிழமை ஜெபக் கூட்டங்களை விட்டுவிட்டு அதற்காக தங்குவீர்களா? 63. ஆனால் பாவம் எப்படியிருந்தாலும் கவர்ச்சி யானதே. மனிதனுக்கு பாவம் கவர்ச்சியாக இருக்கும், ஏனெனில் நாம் வீழ்ந்த மனிதகுலத்தின் ஒரு பகுதியாய் இருக்கிறோம். சாத்தான் அதை கவர்ச்சியாக மாற்றுவது எப்படி என்று நன்றாக அறிவான்; அவன் தனது வேலை யில் ஒரு வல்லுநன். உலக விஷயங்களில் அவனால் அதைச் செய்ய முடியாவிட்டால், அவன் அதை நேராக சபைக்குள் கொண்டு வந்துவிடுவான் நம்முடைய ஸ்தலத்தி லேயே செயல்படுத்துவான். அதனால் தான், சகோதரர்களே சகோதரிகளே நாம் அவனை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இப்போது சபை ஆவிக்குரிய விதத்தில், விழித்தெழ வேண்டிய நேரம். தேவனை, விசுவாச அறிக்கையை ஒப்பித்தல் அல்லது ஸ்தாபனங்கள் (Denominations) மூலம் அல்ல, பரிசுத்த ஆவியால் நிரப்பப் பட்டவர்களாக, அனுபவத்தின் மூலம் அறிய வேண்டும். 64. சில நாட்களுக்கு முன்பு, காலிபோர்னியாவில், பியூமோன்ட் மற்றும் பல இடங்களில் கூட்டங்கள் நடத்தி முடித்து வெளியே வந்திருந்தேன். அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது உங்கள்மேலும், நம்மில் மற்றவர்கள்மேலும் வருவது போல என்மேல் மிகுதியாய் இருந்தது. நீங்கள் தெருவில் நடக்கும்போதும் அந்த ஒரு அழுத்தத்தை உணர முடியும். அந்த அபிஷேகம் உங்கள்மேல் இல்லையென்றால், அதை நீங்கள் கவனிக்க மாட்டீர்கள்; சாதாரணமாகச் சென்று விடுவீர்கள். சபையே, கேளுங்கள், சிலர் நான் அவர்களிடம் மிகவும் கடுமையாக இருககிறேன் என்று நினைப்பதற்குக் காரணம் இதுதான். அது அப்படியல்ல; நான் ஜனங்களிடம் கடுமையாக இருக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தை உணரக்கூடிய அளவுக்கு அந்த அபிஷேகத்தின் கீழ் இருக்கையில், பாவம் நிறைந்த சூழலுக்குள் செல்ல நேர்ந்தால் அது உங்களை நிலைகுலையச் செய்து விடும். நீங்கள் அமைதியாக இருக்க முடியாது; ஏதாவது சொல்ல வேண்டியதாகிவிடும். அதுவே பரிசுத்த ஆவியின் அபிஷேகம். 65. நீங்கள் ஜனங்களிடம், “நீங்கள் கிறிஸ்தவரா?” என்று கேட்டால், அவர்கள் உடனே, “நான் இந்த ஸ்தாப னத்தை சேர்ந்தவன்,” அல்லது “அந்த பிரிவை சேர்ந்தவன்” என்று சொல்லிவிடுவார்கள். அதில் அவர்கள் திருப்தி அடைகிறார்கள். அவர்கள் நினைப்பது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் சேர்ந்திருப்பதே போதும், அதுவே அவர்களுக்கு தேவையான அனைத்தும் என்று. முன்பு நாம் இப்படிப்பட்டவர்களை “குளிர்ந்த, சம்பிரதாய பாப்டிஸ்ட்கள்” அல்லது “மெத்தடிஸ்ட்கள்” என்று அழைத் தோம். ஆனால் இப்போது அதே நிலை “குளிர்ந்த, சம்பிரதாய பெந்தெகோஸ்தேயினர் என்ற நிலைக்கு வந்து விட்டது. பெந்தெகொஸ்தே சபையிலேயே, ஒவ்வொரு வரும் “நான் இதைச் சேர்ந்தவன்,” அல்லது “நான்...” என்று சொல்ல விரும்புகிறார்கள். அது சரி நான் அதை குற்றம் சொல்வதில்லை; அது இருக்கட்டும். ஆனால் நீங்கள் பெந்தெகொஸ்தே என்று சொல்லிக்கொள்வீர்களானால், பெந்தெகொஸ்தே என்பது ஒரு அனுபவம். ஒரு ஆண் அல்லது பெண், சிறுவன் அல்லது சிறுமி, மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியின் பெந்தெகொஸ்தே அனுபவத் தால் நிரப்பப்படுவது தான். 66. நீங்கள் அந்த அனுபவத்தை பெற்றவுடன், முழு உலகும் உங்களை அழுத்துவது போல தோன்றும். ஓ, நீங்கள் உங்களை கிறிஸ்துவோடு இணைத்துள்ளீர்கள் (Yoked). அந்த உலகம் அந்நாளில் பாவத்தில் மூழ்கியிருந்த போது, அது அவருடைய கண்களில் கண்ணீரையும், அவருடைய சரீரத்துக்கு துயரத்தையும், மரணத்தையும் கொண்டு வந்தது. அப்படியானால், இன்று அது என்ன செய்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 67. நான் ஒருமுறை அங்கே, அது ஏதென்ஸ் என்று நினைக்கிறேன், நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் என்ற ஒளிப்பதிவு அல்லது படக்காட்சியைப் பார்த்தேன். (Three Minutes to Midnight) நாம் வாழ்வது நள்ளிரவின் மூன்று நிமிடங்களில்தான் என்று விஞ்ஞானம் கூறுகிறது. அது மூன்று, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டது. ஆனால் இப்போது, அது விநாடிகளாகக் குறைந்துவிட்டது போல எனக்கு தோன்றுகிறது நேரம் துடித்துக்கொண்டே செல்கிறது. நான் தவறாக இருக்கலாம், ஆனால் அது அப்படித்தான் எனக்கு தெரிகிறது. அவர்கள் கிறிஸ்துவின் ஒரு படத்தை வைத்திருந்தார்கள். ஒரு படச் சட்டத்தில் அவர் பூமியை நோக்கி பார்க்கும்போது, அவரது முகத்திலிருந்து கண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. 68. இது நோவாவின் நாட்களைப் போல இருக்கிறதா என்று நான் யோசிக்கிறேன். அப்போது, தேவன் மனிதனை சிருஷ்டித்ததற்காய் மனஸ்தாபப்பட்டார் என்று சொல்லப் பட்டது. இன்று மீண்டும் அதே நிலைக்கு வந்துவிட்டதா? அவர் உருவாக்கிய மனிதன் அவனுக்காக தன்னை அர்ப் பணித்தவர் அவனை மீட்க அவர் தன்னையே கொடுத் தார். ஆனால், அவன் அவருடைய முகத்தின் முன்பாகவே அவரை மறுதலிக்கின்றான். 69. நாம் வாழும் இந்த பயங்கரமான காலம், சபையில் சேர்வது மட்டும் தான் என்று நினைக்கும் நிலையில் உள்ளது. நீங்கள் ஒரு பாவ அறிக்கையை செய்து, சபையில் சேர்ந்து கொண்டதினிமித்தம் நான் ஒரு கிறிஸ்த வனாகி விட்டேன் என்று நினைத்தால், அதனால்தான் இன்று ஜனங்கள் எழுப்புதலில் (Revival) ஆர்வம் காட்டு வதில்லை. உலகத்திற்கும் அது தேவையற்றதாகிவிட்டது. அது ஒரு நிச்சயமுள்ள சத்தமாயிருந்தது, தேவன் அவர்கள் மத்தியில் இருந்தார் என்பதற்கான ஒரு சான்றாக அது இருந்தது. 70. இன்று நாம் நீண்ட கூட்டங்களையோ அல்லது ஒன்று கூடுதலையோ நடத்தும்போது, அந்த உண்மையான நிச்சயமான சத்தத்தை பெறுவதில்லை. ஆனால், பெந்தெ கொஸ்தே நாளில் எழுப்புதல் ஏற்பட்டபோது, பரலோகத் திலிருந்து ஒரு நிச்சயமான சத்தம் வந்தது. அது ஒரு பலத்த காற்று வீசுவது போல இருந்தது; அவர்கள் இருந்த வீட்டை முழுவதும் நிரப்பியது. ஒரு உறுதியான சத்தத்தை, அதற்கு ஒரு நிச்சயமான சத்தத்தை நாம் உடையவர்களாய் இருக்க வேண்டும். 71. இன்றைய சபை, ஏதேன் தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த நிலையைப் போல உள்ளது. அங்கே காயீன் ஒரு பலிபீடத்தை கட்டினான்; யேகோவாவின் நினைவாக அதை அமைத்தான். அவன் ஒரு நாத்திகன் அல்ல. அவன் பலிபீடம் கட்டி, பலியையும் வைத்து, தன்னை அதில் அர்ப்பணித்து, தேவனை அழைத்தான். ஆனால் தேவன் அவன் அழைப்பை ஏற்றுக்கொள்ள வில்லை. ஏனெனில் அதில் சரியான சத்தம் இல்லை. அங்கே மரணம் இல்லை; தேவனை சமாதானப்படுத்தும் எந்தபலியும் இல்லை. பாவத்திற்க்கான பரிகாரம் மரணத்தின் மூலம் செலுத்தப்பட வேண்டும். “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்”. ஆனால் அவன் பூக்களை வைத்து அதை அழகாக செய்தான்; அங்கே, மரித்துக் கொண்டிருக் கின்றதான, கூக்குரலிடுகிற, எந்த ஒன்றும் அங்கில்லை. ஆனால் ஆபேலின் பலிபீடத்திலிருந்து ஒரு ஆட்டுக் குட்டியின் கதறல் எழும்பினது, அங்கே தண்டனைக்கான பரிகாரமாக மரணம் இருந்தது, இரத்தம் சிந்தப்பட்டிருந்தது. 72. தேவன் காயீனிடம் பேசின அந்த நாளைப் போன்றே சரியாக இன்றும் காணப்படுகிறது. அவன் மனமுடைந்தவனாய், “என்னால் செய்ய முடிந்த சிறந்த ஒன்று இதோ இங்கே இருக்கிறது. நீர் அதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். இதைக் குறித்து உம் விருப்பம் என்னவோ அதை நிறைவேற்றுங்கள். ஆனால் இந்த விஷயத்தில் என்னால் செய்ய முடிந்த அனைத்தும் இவ்வளவுதான்” என்றான். 73. அதுவே இன்று நவீன கிறிஸ்தவர் ஆராதிக்கும் முறை: “நான் சபைக்குச் செல்கிறேன், போதகர்களுக்கு உதவுகிறேன், தசமபாகம் கொடுக்கிறேன், நான்... நான்... அவர்கள் சபையில் நிகழ்ச்சிகள் வைத்தால் அதற்கும் என் பங்கை செய்கிறேன்; அவர்கள் மிஷனரி காணிக்கை கேட்டால் அதற்கும் உதவுகிறேன்.”அவை நல்லவையே; ஆனால் தேவன் கேட்பது அது அல்ல. அவர் மரணத்தின் சத்தத்தை கேட்க வேண்டும். தேவனுக்கு ஸ்தோத்திரம்! 74. இன்று தேவன் விரும்புவது, நீங்கள் மரிக்க வேண்டும்; உலக காரியங்களுக்கும், உங்களுக்கே நீங்கள் மரிக்க வேண்டும். “கர்த்தாவே, நான் இருக்கும் வண்ண மாகவே என்னை ஏற்றுக்கொள்ளும்! ” என்று ஒரு கதறலை அவர் கேட்க விரும்புகிறார். அதுவே தேவன் விரும்புவது. அவர் மரணத்தின் சத்தத்தை விரும்புகிறார் பழைய ஆதாமின் சாகும்படியான அந்த மரணக்குரல், மரித்துக் கொண்டிருக்கிறதின் குரல்; அப்பொழுது அவர் வந்து தம் இடத்தை எடுத்து, உங்களை ஆளுகை செய்து, உங்கள் ஆண்டவராக இருப்பார். ஆஹா, நாம் என்னே ஒரு காலத்தில் வாழ்கிறோம்! 75. இப்போது, தேவன் காயீனிடம் கூறினதை நாம் காண்கிறோம்: “உன் சகோதரன் ஆபேல் ஆராதனை செய் தது போல நீயும் ஆராதனை செய்; அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும். அவன் செய்வது போல செய்; அதுவே உனக்கு சரியானதாக இருக்கும்.”ஆனால் அவன் அப்படிச் செய்யாவிட்டால், பாவம் வாசலில் படுத்திருக் கும். இன்றும் அதே நிலைதான். ஆகையால், சபை என்று அழைக்கப்படும் அமைப்பில் உறுதியான சத்தம் எதுவும் இல்லை என்பதை நாம் காண்கிறோம். 76. இப்போது, நாம் இன்று “சபை” என்று கூறுவது ஒரு அமைப்பாகிவிட்டது; “நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்?” என்று கேட்கிறோம். ஆனால் உண்மையில் ஒரு சபை மட்டுமே இருக்கிறது. ஒன்றே ஒன்று. அமைப்புகள் பல இருக்கலாம்; ஆனால் சபை ஒன்று மட்டுமே. நான் இதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்: அவற்றுக்கு எதிராக எனக்கு எதுவும் இல்லை; அவை பெரிய பங்கு வகித் துள்ளன. இருப்பினும், இவைகள் அந்த ஒன்று அல்ல, அதுவல்ல. 77. “சபை” என்றால் “அழைக்கப்பட்டவர்கள்”, “பிரித் தெடுக்கப்பட்டவர்கள்” என்று பொருள். ஒரே நேரத்தில் இரண்டுபேர்கள் உங்களுக்குள் வாழ முடியாது; தேவனைச் சேவிக்க நீங்கள் உலக விஷயங்களுக்கு மரிக்க வேண்டும். நீங்கள் ஒரே நேரத்தில் தேவனையும் செல்வத்தையும் நேசிக்க முடியாது. உலக சிநேகம் விசுவாசியின் இருதயத் தில் இருக்கும் வரை, அவன் மற்றவர்களையும் வெளி யேற்றி, தேவன் தனக்கு கொடுத்த சிலாக்கியத்திலிருந்து தன்னையும் விலக்கி கொள்கிறான். தேவன் உங்களை உரிமையற்றவர்களாக வைத்திருக்க விரும்பவில்லை; அவர் மரணத்தின் மூலம் பெற்று தந்த ஒவ்வொரு உரிமையையும் நீங்கள் பெற வேண்டும் என்று விரும்புகிறார். சபைக்கு அவர் தந்த ஒவ்வொரு உரிமையையும் நீங்கள் அனு பவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவைகள் உங்களுக்குரியவை. 78. நான் என் சிறிய மகனுக்காக ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தால், அவன் அதை என் முகத்தின் மீது தூக்கியெறிந்து, “எனக்கு இது வேண்டாம்” என்றால் எப்படி இருக்கும்? அது நன்றியின்மையே. அதேபோல் என் சிறிய மகளுக்காக ஒரு பொம்மை வாங்கித் தந்தால், அவள் அதை எடுத்து என்னிடம் தூக்கி எறிந்தால்? அதுவும் போற்றுதற்குரியதல்ல. தேவன் நமக்கு கொடுத்த சிலாக்கியத் தின் கீழாக நாம் வாழ முற்படும் போது, நாமும் அவ் விதமே செயல்படுகிறோம். கிறிஸ்து இந்த ஈவுகளை நமக்குக் கிடைக்கச் செய்யவே மரித்தார். ஓ! நாம் வெவ் வேறு நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றி, பரிசுத்த ஆவியை அவருடைய முகத்திலேயே வீசியெறிந்து,.. இந்த மத உணர்வெல்லாம் எங்களுக்கு தேவையில்லை, நான் சபை யில் என் பெயரை பதிவு செய்கிறேன். நான் - நான் ஒரு...” என்று சொல்வது இன்று அவரை என்ன ஒரு மோசமான உணர்வுக்குள்ளாக்கும்! 79. நீங்கள் “சபையில் சேர” முடியாது; அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. நீங்கள் ஒரு அமைப்பில் சேர லாம்; ஆனால் சபையில் சேர முடியாது ஏனெனில் நீங்கள் சபைக்குள் பிறக்க வேண்டும். அதிலே சேர்ந்துகொள்ள முடியாது; நீங்கள் அதிலே பிறக்க வேண்டியவர்களாயிருக் கிறீர்கள். எல்லா விசுவாசிகளும் தேவனுடைய சபைக்குள் பிறக்கிறார்கள். “Church of God” என்ற ஸ்தாபனத்தில் அல்ல, ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபை, அதாவது மரித் தோரிலிருந்து உயிர்த்தெழுந்து நம்மிடையே வாழும் கிறிஸ்துவுக்குள். 80. பின்னர் அவர்கள் கூறும் போது நிச்சயமற்ற சத்தங்கள் உண்டாகின்றன: “நான் பெந்தெகொஸ்தே அசெம்பிளிஸ்.” “நான் பெந்தெகொஸ்தே யூனைடெட்.” “நான் பெந்தெகொஸ்தே Church of God.” “நான் பெந்தெ கொஸ்தே ஹோலினஸ்.” “நான் மெதடிஸ்ட்.” “நான் பேப்டிஸ்ட்.” “நான் பிரெஸ்பிடீரியன்.” இவை எல்லாம் தங்களது வரம்புக்குள் சரியே. 81. புனித தன்மையை கெடுக்கும் பொருட்டில் இதை நான் கூறவில்லை. தர்பூசணி சாப்பிடும் ஒரு கருப்பின மனிதன், அவனுக்கு ஒரு துண்டு தர்பூசணி பழத்தைக் கொடுக்க, அது வழுக்கிச் சென்று, அவன் வாய் நிறைய அதை சாப்பிட்டு, அதன் கொட்டையை உதட்டின் ஓரத்தில் துப்பின உடனே, “இது உனக்கு பிடித்திருக்கிறதா, மோஸ்?” என்றார்கள். 82. அவனோ, வெட்டப்பட்ட பழத்தின் மீதமுள்ள பெரியபகுதியை பார்க்க நேரிட்டு, “தலைவா, அது அருமை யாக இருந்தது, ஆனால் அங்கே அதைவிட இன்னும் சற்று அதிகமாக இருக்கிறதே” என்றான். அப்படித்தான் இந்த அமைப்புகளும். அவை நல்லவையே, ஆனால் அதைப் போன்றே இன்னும் அதிகம் இருக்கிறது. இன்னும் அதிகம். அதைத்தான் நாம் விரும்புகிறோம். ஆம், அதைப் போன்றே இன்னும் அதிகமாய். 83. “எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுக போகப்பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” “கடைசி காலத்தில் இருப்பதை பரிசுத்த ஆவியானவர் வெளிப் படையாக கூறுகிறார்” என்று இந்த அதிகாரத்தின் துவக்கத் தில் உள்ளதை கவனித்தீர்களா?. அதுதான் நிலைமை. மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர் களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்த மில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களா யும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தி யின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக் கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. இது தேவனுடைய வார்த்தை; அது நிறைவேறியே ஆக வேண்டும் “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர் களாயும்”. 84. நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் அந்த நிச்சய மான சத்தத்திலிருந்து விலகி, நிச்சயமற்ற சத்தத்தை எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் வந்து, “நாங்கள் சபை யில் சேர்ந்து விட்டோம், ஞானஸ்நானம் பெற்று விட்டோம், எங்கள் பெயரை பதிவேட்டில் சேர்த்துவிட்டோம்” என்று சொல்கிறார்கள். அது நிச்சயமற்ற சத்தம். 85. உலகிலேயே பெரிய வஞ்சகங்களில் ஒன்று என்ன வென்றால், உண்மையான சத்தம் போலத் தோன்றும் ஒரு சத்தம் இருக்கிறது; ஆனால் அது சரியான சத்தமாக இல்லாத அளவுக்கு சிறிய தவறு மட்டும் அதில் இருக்கும். இதுவரை சொல்லப்பட்ட மிகப் பெரிய பொய் என்பது, முழுக்க முழுக்க பொய்யானதை விட, கிட்டத்தட்ட அனைத்தும் உண்மையாக இருந்து, இறுதியில் ஒரு சிறு பொய் கலந்திருப்பது தான்.. சாத்தான் ஏவாளிடம் அப்படித் தான் சொன்னான்; அவள் அதினால் ஏமாற்றப்பட்டாள். அவள் ஏமாற வேண்டும் என்று நினைக்கவில்லை; ஆனால் அது மிகவும் உண்மையாகத் தோன்றியதால் ஏமாற்றப்பட்டாள். 86. அவர்கள் உங்களிடம், “சபையில் சேர்ந்தால் போதும்,” அல்லது “தண்ணீர் தெளித்துக் கொண்டால் போதும்,” அல்லது “ஒரு குறிப்பிட்ட முறையில் ஞானஸ் நானம் பெற்றால் போதும்,” அல்லது “இதைச் செய்தால் போதும்” என்று சொன்னால் அது போதாது, சகோதரனே. ஒரு மனிதன் ஜலத்தினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறக்க வேண்டும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும். அப்போது அவன் ஒரு நிச்சயமான சத்தத்தை உடையவனாயிருக்கிறான், அதுவே சரியானதாக தொனிக் கிறது. 87. அந்த சத்தம் உள்ளே வரும்போது, அது உங்கள் காதுகளின் கேட்கும் நிலையை மாற்றிவிடும். முன்பு நீங்கள் அதை கேட்க முடியாது; இப்போது கேட்க முடியும். யாரா வது தெய்வீக சுகமளிப்பு, தேவனுடைய வல்லமை பற்றி பிரசங்கித்தால், விருத்தசேதனம் இல்லாத காதுகளுடன் அமர்ந்து அதை கேட்டு, “என் போதகர் அதை நம்ப வில்லை; அது தீவிரமதவாதம் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறுவீர்கள். ஆனால் வேறு ஒரு சத்தம் வரும் போது பெரும் பலத்த காற்று வீசுவது போன்ற சத்தம் அது உங்கள் காதுகளை விருத்தசேதனம் செய்து திறக்கிறது; அப்பொழுது அந்த பலத்த வீசும் காற்றின் சத்தத்தை கேட்கும்போது, அது எவ்வளவு இனிமையான சத்தமாகிறது! 88. ஓ, முதலில் அது உங்கள் ஆத்துமாவுக்கு ஆனந்த ஊற்றுகளை கொண்டு வருகிறது; நீங்கள் உரக்க, “ஆமென்! அது சரி! பிரசங்கியுங்கள், சகோதரரே! அல்லேலூயா! அது நல்லது!” என்று சொல்லத் தொடங்குவீர்கள். பாருங்கள் அப்போது அது உங்களை அசைக்கத் தொடங்குகிறது; நீங்கள் முன்னேற ஆரம்பிக்கிறீர்கள். 89. ஆனால் இன்று நிலை என்ன? “சபையில் சேருங்கள்” என்பதுதான்.அது ஒரு நிச்சயமற்ற சத்தம். துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் அது 2 தீமோத்தேயு 3:7: “எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிறவர்கள்.” பாருங்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள், எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். சகோதரனே, நமக்கு வேதாகம கல்லூரி படிப்புகளும், பள்ளிகளும், Ph.D.களும், Dh.D.களும், D.D.D.களும், Q.S.T.களும், எல்லா வகை பட்டங்களும் இருக்கின்றன. ஆனால் “எப்போதும் கற்றுக்கொண்டே இருந்து, சத்தியத்தின் அறிவை அடைய முடியாதவர்கள்.” அது சரி. ஒருவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து, எங்கள் பிள்ளைகளை எங்கோ செமினாரிக்கு அனுப்பி, பெரிய பட்டம் அல்லது ஏதாவது ஒன்றை வாங்கித் தருகிறோம்; அவன் எல்லாவற்றையும் படித்து வெளியே வந்தாலும்.... இன்னும் ஏதோ தவறாகவே உள்ளது. 90. உங்களால் முடியாது... இப்போது, இன்று நமக்குத் தேவையானது என்னவென்றால், என் கூற்றை தெளிவாகச் சொல்கிறேன். இன்று, பிரங்கித்தல், ஒரு ஊழியக்காரன், ஒரு சுவிசேஷ பிரசங்கி, குறைகள் இல்லாத மனிதன் அல்ல, இருந்தாலும் அவன் இன்னும் ஒரு பிரசங்கியாராக இருக்க முடியும்; ஆனால் நாமோ, நாம் பெற்ற பட்டம், எப்படிப் பட்டப்படிப்பு பெற்றோம், எப்படிப் பைபிளைப் படித்து இதையெல்லாம் கற்றோம் என்பதன் பேரில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். 91. வேதத்தை பற்றி நீங்கள் எப்போதும் அறிந்ததை விட பிசாசு அதிகம் அறிவான் என்பதை இப்போது நான் சொல்கிறேன். அவன் அதைப் பற்றிய அனைத்தையும் அறிவான். நான் சந்தித்த சிறந்த பைபிள் மாணவர்களில் சிலர் அவிசுவாசிகளே; அவர்கள் அதைப் பற்றி உங் களுடன் வாதிடுவதற்காக இரவும் பகலும் அதை ஆராய்ந்து படிப்பார்கள். அது சரி. பைபிள் வாதிடுவதற் கானது அல்ல; வேதம் ஜீவிக்கப்படவேண்டும். பாருங்கள், அந்த விதையை பாழ் நிலத்தில் போட்டால் அது உயிர் பெறாது; ஆனால் அதை வளம் நிறைந்த நிலத்தில் போட்டால் அது உயிர்பெறும். 92. நீங்கள் வாசித்தீர்களா, இங்கே சில காலத்திற்கு முன் அவர்கள் எகிப்திலிருந்த களஞ்சியத்திலிருந்து சில கோதுமையை எடுத்தார்கள்; அது யோசேப்பு வைத்திருந் ததாம். நான்காயிரம் ஆண்டுகள் பழமையான சூரியகாந்தி விதையை நிலத்தில் பதித்தபோது அது சூரியகாந்தி செடியை முளைக்க செய்தது. ஆமென். கோதுமை மணி கோதுமை செடியை முளைக்க செய்தது. ஏன்? அது முளைப்புத் தன்மை உடையதாக இருந்தது; அந்த மூலக்கரு சாகாது, பாருங்கள், அது அதற்குள் இருக்கிறது. 93 அவர்கள் உங்களை எங்கே வைத்தாலும் பரவா யில்லை; நீங்கள் மறுபடியும் பிறந்தவராகவும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவராகவும் இருந்தால்—உங்கள் சிறிய விரல் நகத்தில் பிடிக்கத் தக்க அளவு சாம்பலும் மீதியிருக்காமல் போனாலும் நீங்கள் உயிர்த்தெழுதலில் மீண்டும் வெளிப்படுவீர்கள்; ஏனெனில் உங்களுக்குள் ஜீவன் இருக்கிறது. பரத்திலிருந்து வல்லமையால் அபிஷேகம் பெற்றிருக்கிறீர்கள்; உங்களுக்குள் ஜீவன் இருக்கிறது. ஒரு சத்தம் உண்டாயிற்று, என்ன நடந்தது என்று நீங்கள் அறிந்த ஒரு நிச்சயமான சத்தம்; நீங்கள் மரித்து மறுபடியும் பிறந்தீர்கள்; புதிய சிருஷ்டியாக ஆனீர்கள். 94. நிச்சயமற்ற சத்தங்கள், வேலைகளில் நிச்சய மின்மை, தேசிய விவகாரங்களில் நிச்சயமின்மை, அரசியலில் நிச்சயமின்மை, வீட்டில் நிச்சயமின்மை. அப்பொழுது நீங்கள் என்னிடம் “சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நீங்கள் எல்லாவற்றையும் நிச்சயமற்றவை என்று சொல்கிறீர்கள், நிச்சயமான ஒன்று கூட இல்லையா?” என்று கேட்கலாம். ஆம், நிச்சயமான ஒரு விஷயம் உண்டு. [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி]... அது ஒரு நித்தியமான சத்தியம். அது ஒரு நித்தியமான நிச்சயம். ஓ, அதிலிருந்து நீங்கள் ஒருபோதும் விலக முடியாது... [ஒலி நாடாவில் காலி இடம் — ஆசி]... “வானமும் பூமியும் ஒழிந்து போம்; ஆனாலும் என் வார்த்தைகள் ஒழிந்துபோகாது.” என்று (மத்தேயு 24 ஆம்) அதிகாரத்தில், இயேசு 35 ஆம் வசனத்தில் கூறினார். ஆகையால் அது நித்திய நிச்சயமானது. 95. இப்போது பாருங்கள், நாம் இனி தேச நிகழ்வு களிலும், வேலைகளிலும், அரசியலிலும், நம்முடைய ஸ்தாபனங்கள் முதலியவற்றிலும் நம்பிக்கை வைக்க முடியாது. ஆனால் நிச்சயமான ஒரு விஷயம் உண்டு, அது தேவனுடைய வார்த்தையும் தேவனுடைய வாக்குத்தத்தமும் ஆகும். தேவன் ஏதாவது சொன்னால், அது அதை என்றென்றைக்கும் தீர்த்துவைக்கும். 96. சில காலத்திற்கு முன்பு, தேவன் பல தவறுகள் செய்தார் என்று சொல்ல முயன்றார்கள். உங்களுக்கு தெரியும், தாவீது தன் சுரமண்டலத்தை வாசித்ததைப் பற்றி, தாவீதின் காலத்தில் சுரமண்டலம் என்ற ஒன்று இல்லை, அவர்களிடம் அப்படியொன்றும் இல்லை, என்று நிரூபிக்க முயன்றனர். ஆனால் இறுதியில், சுரமண்டலம் இருந்ததற் கான சான்றுகளை அவர்கள் தோண்டி கண்டுபிடித்தார்கள். 97. மேலும், ஆபிரகாம் தன் ஒட்டகங்களை எடுத்துக் கொண்டு கேரார் நோக்கிப் போனதை பற்றி, அங்கே ஒருபோதும் ஒட்டகங்கள் இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் இப்போது சமீபத்தில், அவர்கள் சில எலும்புகளை தோண்டிக் கண்டுபிடித்து, அங்கே ஒட்டகங்கள் இருந்தன என்பதை அறிந்தார்கள். பாருங்கள்? 98. ஆகவே அவர்கள், “வேதாகமம் உண்மையல்ல” என்று சொல்லி, அவர்கள் “ஏதேன் தோட்டம்” என்று அழைக்கப்படும் இடத்தைத் தோண்டி கண்டுபிடித்து, அது வெறும் பழைய நாகரிகத்தின் ஆரம்ப இடம் மட்டுமே என்று நிரூபிக்க முயன்றார்கள். ஆனால் வேதாகமத்தை தவறாக நிரூபிக்கத் தோண்டியபோது, ஒரு பாறையில் எழுதப்பட்டிருந்ததை அவர்கள் கண்டார்கள். அதில் ஏசாயா, எசேக்கியாவின் புண்களை குணமாக்கினான் என்று இருந்தது. அதை நிரூபிப்பதற்காக... 99. மேலும் அவர்கள், எரிகோ வீழ்ந்தது என்பதே இல்லை; அங்கே அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை என்றார்கள். அவர்கள் அங்கெல்லாம் தோண்டினார்கள்; மதில்கள் என்ற ஒன்றே இல்லை. பின்னர் ஒரு குறிப்பிட்ட அறிஞர் அங்கே சென்று ஆழமாகத் தோண்டினார். மீண்டும் மீண்டும் ஆழமாகத் தோண்டி, இறுதியில் அவர்கள் தோண்டியிருந்த இடத்திற்குக் கீழே இருபது அல்லது முப்பது அடி ஆழத்தில், அவை இருந்ததை கண்டார்கள். அவை ஒன்றின் மேல் ஒன்று விழுந்து கிடந்தன, வேதாகமம் சொன்னபடி அப்படியே இருந்தது. ஆகவே, தேவன் இறுதியில் சரியானவராக நிரூபணமானார். ஹøம்! 100. உங்களுடைய பெரிய, பெரிய, பெரிய தாத்தா ஒரு விமர்சகராயிருந்திருந்தால், “ஒரு குதிரை இணைக்கப் படா மல் ஒரு வண்டி நகரக் கூட முடியாது என்று சொல்லி யிருப்பார்.” ஆனால் நாமோ அதைப் பெற்றிருக்கிறோம். அதை பெற்றுவிட்டோம். அது உண்மை. தேவன் உரைத்த இந்த ஒவ்வொரு காரியங்களும் நித்திய சத்தியங்களாயிருக் கின்றன. 101. சில காலத்திற்கு முன்பு, வேதாகமத்தில் சாலமோன் சொன்ன “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்.” என்ற வசனம் கேள்விக் குள்ளாக்கப்பட்டது. அப்போது ஞானிகள், “பாருங்கள், மனித இருதயத்தில் சிந்தனை செய்யும் திறன் இல்லை. சாலமோன் “தலை”யைத்தான் குறிப்பிட்டார்” என்றார்கள். ஹø! அவர் “தலை”'யைக் குறிப்பிட்டிருந்தால், “தலை” என்று சொல்லிருப்பான். நான் வேதாகமம் எழுதப்பட்டிருக் கிறபடியே முற்றிலும் உண்மை என்று நம்புகிறேன். அது தேவனுடைய வார்த்தை என்று விசுவாசிக்கிறேன். அது தேவனே என்று விசுவாசிக்கிறேன். தேவன் தமது வார்த் தையை விட மேன்மையானவர் அல்ல. நீங்கள் உங்கள் வார்த்தையைவிட மேன்மையானவர் அல்ல. அந்த நாளில் உங்களை நியாந்தீர்க்க நிற்பது உங்கள் சொந்த வார்த்தையே. 102. இப்போது, சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிக்காகோவில், சகோதரர் ஜோசப் மாட்ஸன் போஸ் அவர்களின் சிறிய மகள் ஜாய்ஸ் அடுத்த மாதம் திருமணம் செய்ய இருக்கிறாள். அழகான சிறுமி. அவள் எப்போதும் என்னிடம் ஏதாவது சொல்லிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருப்பாள். எப்போதும் ஏதாவது சிறிய நகைச் சுவை சொல்லுவாள், எதையாவது பற்றி சின்ன கிண்டல் பேசுவாள். அவள் என்னிடம் “இன்று செய்தித்தாளில் வந்ததை கேள்விப்பட்டீர்களா?” என்று கேட்டாள். நான் “ஒரு நிமிடம், ஜாய்ஸ், இப்போது நீ என்ன சொல்லப் போகிறாய்? என்ன…?” என்று கேட்டேன். 103. அவள் “இல்லை, இது வேறு விஷயம், சகோதரன் வில்லியம் பிரன்ஹாம் அவர்களே நான் அதை கொண்டு வந்து உங்களுக்கு காட்டுகிறேன் என்றாள். நீங்கள் “மனிதன் தன் இருதயத்தில் சிந்திக்கிறான்” என்று சொன்னதை நான் கேட்டேன். நானும் அதை வேதாகமத் தில் வாசித்தேன். மனித இருதயத்தில் ஒரு சிறிய அறை இருக்கிறது. அதுவே ஆத்துமா தங்கும் இடம் என்று அறிவியல் கூறுகிறது.” இன்று அவர்கள் அதை கண்டு பிடித்து நிரூபித்துள்ளனர், அது வேறு எந்த இருதயத்திலும் இல்லை. மனித இருதயத்தில்தான் உள்ளது. மிருக இருதயத்தில் அது இல்லை” என்றாள். ஆகவே, “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ...” என்று தேவன் உரைத்தபோது அதை மிகச் சரியாக சொன்னார். பாருங்கள், இருதயத்தில் சிந்திக்கும் திறன் உள்ளது. 104. இப்போது, அனைவருக்கும் இப்படிப்பட்ட அனு பவம் இருந்திருக்கும். சில சமயங்களில் நீங்கள், “இது நடக்குமோ இல்லையோ எனத் தெரியவில்லை” என்று நினைப்பீர்கள். ஆனால் திடீரென்று உங்களுக்குள் ஏதோ ஒன்று, “இது நடக்கும்” என்று சொல்லும். மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை பொருட்படுத்தாமல், அது நடக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். நம் எல்லாருக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் உண்டு. அது உங்கள் இருதயம், இருதயம் சிந்தனை செய்யும் தருணம், உங்கள் இருதயம் உங்களிடம் சொல்லுகிறது. 105. இப்போது, மனம் தர்க்கம் செய்கிறது. ஆனால் இருதயம் தர்க்கம் செய்யாது. அது வெறுமனே விசுவாசிக் கிறது. நான் பேசுவதை கேட்போரில் ஒருவருக்காவது இதை நன்றாகப் புரிய வைக்க முடிந்தால், அதாவது, “உங்கள் அறிவு இதைக்குறித்து என்ன நினைக்கிறது என்பதல்ல” என்பதை நன்றாகப் புரிய வைக்க முடிந்தால், நான் ஒரு உண்மையான சுகமளிக்கும் ஆராதனையைக் கொண்டிருப்பேன். அங்கேதான் (தலையில்) பிசாசு தங்கி இருக்கிறான், அவன் அங்கிருந்து, “நான் - நான் வியாதி யாய் உள்ளேன், நான் சுகமாக முடியாது, என்னிடம் இன்னின்ன காரியம் இருக்கிறது, நான் இரட்சிக்கப்பட முடியாது, அவ்வளவாய் நான் காரியங்களை செய்துள் ளேன்” என்று காரணங்களை அடுக்குகிறான். 106. ஏதேன் தோட்டத்தில் மனிதன் இரண்டு பகுதி களாகப் பிரிக்கப்பட்டான். சாத்தான் அவன் தலையை எடுத்துக்கொண்டான், தேவன் அவன் இருதயத்தை எடுத்துக்கொண்டார் சாத்தானோ அவன் கவனத்தை சில காரியங்களை காணும்படி திருப்பி, “சரிதான், ஆனால் அவ்விதம் நடக்க வாய்ப்பில்லை, நான் அதற்கான காரணத்தை சொல்கிறேன்” என்கிறான். ஆனால் தேவனோ அவன் காரியங்களை விசுவாசிக்க வேண்டும் என்பதற்காக அவனுடைய இருதயத்தில் வாசம்பண்ணும்படி இருதயத்தை எடுத்துக் கொண்டார், அவனுடைய தலைக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அது சரி. ஆகவே நீங்கள் சிந்திப்பது இருதயத்தில்தான். இங்கிருந்து உண்மையான தெளிவான சத்தம் வருகிறது. அதாவது இருதயத்திலிருந்து. அங்குதான் தேவன் பேசுகிறார், இங்கே சாத்தான் பேசுகிறான். ஆகவே சாத்தான் சொல்வதைக் களைந்து, தெளிவான சத்தத்தை ஏற்றுக்கொள்வோம். அந்த நிச்சயமான சத்தத்தை, நிச்சய மான சத்தம் என்பது தேவன் நம்முடைய இருதயத்தில் பேசுவதுதான். அது உண்மை. தேவனுடைய வாக்குத் தத்தங்கள். 107. அடுத்த மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு நாம் சிலரை ஆராய்ந்து பார்ப்போம். அவர்கள் அவரு டைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொண்டபோது அவை நிஜங்களாயிருந்ததா இல்லையா என்று. அவருடைய வாக்குத்தத்தத்தை எடுத்துக் கொண்ட சிலர், அவர்கள் நிஜஸ்தர்களாக இருந்தார்களா, இல்லையா என்று பார்ப் போம். மனித புத்திக்குப் பொருந்தாதவற்றை நினைக்கவும் செய்யவும் தேவன் உங்களை நடத்துகிறார். அது உங்களுக்கு தெரியுமா? 108. இங்கே ஒரு சிறு பையன் ஒரு நாற்காலியில், சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான், ஒருவேளை அவன் அம்மாவும் அப்பாவும் அவனை கொண்டு வந்திருக்கலாம். அவனுக்காக மருத்துவர்கள் செய்யக்கூடியதெல்லாம் செய்துவிட்டார்கள். பாருங்கள்? அவர்கள், “இனி முடிந்து விட்டது” என்று சொல்கிறார்கள். இப்போது நீங்கள் அவர் சொல்வதைக் கேட்கிறீர்களானால், அது முடிந்ததே. ஆனால், இங்கே உள்ளே ஏதோ ஒன்று செயல்படத் தொடங்கினால், சகோதரனே, அப்படியானால் அது மாறுபடும். அது வேறு ஒரு சத்தம். 109. இப்பொழுது அந்த சத்தம், “முடிந்துவிட்டது” என்கிறது. ஆனால் இந்த சத்தம் ஒரு நிச்சயமுள்ள சத்தமாகும். இது அதை எதிர்க்கும். இப்பொழுது, அது எதைச் சார்ந்ததென்றால்… இது அதை மறுக்க முயற்சி செய்யும், அது இதை மறுக்க முயற்சி செய்யும். ஆனால், அது எதை சார்ந்ததென்றால், அது நீங்கள் எந்த ஒன்றுக்கு செவிசாய்க்கிறீர்கள் என்பதைப் பொருத்ததே. [சகோ. பிரன்ஹாம், தலையையும் இருதயத்தையும் குறிப்பிடுகிறார்.] அந்த சமயத்தில் இரட்சிக்கப்பட்ட அந்த இந்தியனைப் போல. ஒருவர் கேட்டார். “தலைவரே, எப்படி இருக்கிறீர் கள்?” 110. “நான் இரட்சிக்கப்பட்டதிலிருந்து என்னுள் இரண்டு நாய்கள் இருக்கின்றன. ஒன்று வெள்ளை. ஒன்று கருப்பு. வெள்ளை நாய் என்னை நன்மை செய்ய வைக்கிறது. கருப்பு நாய் என்னை தீமை செய்ய வைக்கிறது. அவை எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றன.” என்று அவர் சொன்னார். “அப்படியானால் எப்படி சமாளிக்கிறீர்கள்? எது ஜெயிக்கிறது, தலைவரே?” அவர் கேட்டார். 111. “தலைவன் எந்த நாய்க்கு அதிகமாக உணவளிக் கிறானோ அதுவே ஜெயிக்கும்” என்று அவர் சொன்னார். அதுதான் விஷயம். நீங்கள் காரணவாதத்துக்கு செவி கொடுப்பீர்களானால், இந்தப் பக்கம் எப்போதும் உங்களை ஜெயம்கொள்ளும். ஆனால் உங்கள் இருதயத்தில் செயல் படும் தெளிவான சத்தமான தேவனுடைய வார்த்தையைக் கேட்பீர்களானால், நீங்கள் இதை வெல்வீர்கள். நீங்கள் எதற்குத் தீனி போடுகிறீர்கள்? 112. விளங்காத சத்தத்தைக் கேட்காதீர்கள். ஏனெனில் எல்லா காலங்களிலும் தேவன் அதிசயங்களைச் செய்து, அறிவியல் அறியாத காரியங்களை நிகழ்த்தியுள்ளார் என்பதற்குத் தெளிவான சாட்சிகள் நமக்குண்டு. அது சரி. ஆகவே இவன் சொல்வதைக் கவனிக்காதீர்கள். இவன் பேசத் தொடங்கும்போது, அவனை பாதையிலிருந்து அகற்றிவிடுங்கள். சரி. 113. இப்போது, உதாரணமாக வேதாகமத்தில் இரண்டு அல்லது மூன்று பேரைப் பார்ப்போம் அவர்கள் தங்கள் காரணவாதத்தோடு பேசவில்லை. அவர்கள் தங்களுடைய இந்த நிச்சயமுள்ள சத்தத்தோடு பேசினார்கள். 114. தேவன் நோவாவைச் சந்தித்து, “நோவா, மழை பெய்யப் போகிறது. உன் குடும்பத்தை இரட்சிக்கும்படி நீ ஒரு பேழையை கட்ட வேண்டும்” என்றார். இப்போது, அதுவரை பூமியில் ஒரு துளி மழையும் பெய்ததில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? மழையே இருந்ததில்லை. இப்போது கற்பனை செய்து பாருங்கள். நீங்கள், “அப்பொழுது அறிவியல் முன்னேற்றம் இல்லை…” என்று சொல்லலாம். ஓ, இருந்தது காயீனின் வரிசையில் வந்தவர்கள் இருந் தார்கள். ஆம் ஐயா, அவர்கள் பெரிய அறிவியலாளர்கள். இன்று நமக்குள்ளதைவிட மேம்பட்ட அறிவியல் அவர் களிடம் இருந்தது மிக உயர்ந்த அறிவியல். 115. அந்த நாட்களில் அவர்கள் ஸ்பின்க்ûஸயும் (Spinx) பிரமிடுகளையும் கட்டினார்கள். இன்று நாம் அதைச் செய்ய முடியாது. அவர்களிடம் இருந்த கருவிகளும், திறமையும் நமக்குள்ள எதையும் விஞ்சியதாக இருந்தன. அணுசக்தியைத் தவிர அனைத்தையும் அவர்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். அவர்களிடமிருந்த பல காரியங்களைப் பற்றி நமக்கே ஒன்றும் தெரியாது. அந்த நாட்களில் அவர்கள் மம்மி (பதப்படுத்தப்பட்ட உடல்) செய்ய முடிந்தது. இன்று நாம் அதைச் செய்ய வேண்டு மென்றாலும் செய்ய முடியாது. இன்று அப்படி மம்மி செய்யும்படியான காரியம் நம்மிடம் இல்லை. ஆனால் அவர்கள் செய்தார்கள். பாருங்கள்? அவர்கள் உடல்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்தும் இன்றும் இயல் பாகத் தோன்றும் வகையில் பாதுகாத்தார்கள். அப்படிச் செய்யும்திறன் இன்று நமக்கில்லை. நீடித்த நிறமிகள் அவர்களிடம் இருந்தன. இன்னும் பல விஷயங்கள் அவர்களிடம் இருந்தன, நமக்கில்லை. அவர்களின் அறிவியல் நம்மைவிட மேம்பட்டிருந்தது. 116. இப்போது, ஒருவேளை அறிவியல் “நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உலகத்தின் எந்த இடத்திலிருந்து தண்ணீரானது வரப் போகிறது? நாங்கள் நட்சத்திரங்கள் வரை பார்க்க முடிகிறது. சந்திரன் வரை பார்க்க முடிகிறது. சூரியன் வரை பார்க்க முடிகிறது. இங்கே எங்களிடம் சந்திரனுக்கு செய்தி அனுப்பும் கருவிகள் இருக்கின்றன. நாங்கள் நட்சத்திரங்களையும் செவ்வாயையும் ஆராய்கிறோம். அப்படியானால் அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள், திரு நோவா அவர்களே ” என்று கேட்டிருக்கலாம். 117. “சரி, அது என்னவென்று நான் கூறுகிறேன். ஒரு நாள் ஓரு சத்தத்தைக் கேட்டேன். அது தேவனுடைய சத்தம். ஒரு பேழையை கட்டும்படி எனக்குச் சொன்னது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகம் எவ்வளவு நிச்சய மாக இருக்கிறதோ, அதுபோல தேவன் இதை நீரினால் அழிக்கப் போவதும் நிச்சயம். அந்த வானத்திலிருந்து மழை நேராக விழும். அதை மேலே வைக்க தேவனால் முடியும். அவர் அது வரும் என்று சொல்லியிருந்தால், அதற்கான வழியையும் அவர் உண்டாக்குவார்,” என்று அவன் சொன்னான். அது சரி. 118. அந்தச் சத்தம் நிச்சயமானது என்று அவன் உறுதியாக அறிந்திருக்காவிட்டால், முதல் விமர்சகர் வந்தவுடனே, “ஒருவேளை நான் தவறாகப் புரிந்து கொண்டேனோ” என்று அவன் சொல்லியிருப்பான். இன்று மக்கள் அப்படித்தான் செய்கிறார்கள். மருத்துவர், “உங்கள் உடல் நிலையில் சரியான முன்னேற்றம் இல்லை” என்று சொல்லும்போது, “ஒருவேளை நான் தவறாக புரிந்து கொண்டேனா, ஒருவேளை நான்தான்... ” என்று எண்ணலாம். ஓ! என்னே! பாருங்கள்! ஆனால் நீங்கள் மாத்திரம் அந்த நிச்சயமான சத்தத்தில் உறுதி கொண்டிருந்தால்! 119. “எக்காளம் விளங்காத சத்தமிட்டால் யுத்தத்திற்குத் தன்னை யார் ஆயத்தப்படுத்துவான்?” அது விளங்காததாக இருந்தால், ஒரு படைவீரன் என்ன செய்வான்? அவர்கள் யுத்தத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது எக்காளம் ஊதப்பட்டாலும், அது யுத்தத்திற்குச் செல்லும் வழக்கமான சத்தம்போல் இல்லாவிட்டால் அவன் பின்வாங்க வேண்டுமா, யுத்தத்திற்குப் போக வேண்டுமா, உட்கார வேண்டுமா, அல்லது உணவு சாப்பிட வேண்டுமா அல்லது படுத்துறங்க வேண்டுமா, எதையும் அறியமாட்டான். தொனியில் அது வித்தியாசத்தை காட்டாவிட்டால்.. 120. தேவனுடைய வார்த்தை எந்தத் தயக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. அது ஒரு தெளிவான சத்தத்தை அளிக்கிறது. தெளிவான சத்தம். தேவன் ஒருவரிடம் பேசும்போது அது தெளிவானதாக இருக்கிறது. வேறு யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை அறிவியல் என்ன சொன்னாலும், தேசம் என்ன சொன்னாலும், உலகம் என்ன சொன்னாலும், சபை என்ன சொன்னாலும், யார் என்ன சொன்னாலும் அது தெளிவானதே. தேவனுடைய வார்த்தை யானது ஒரு நிச்சயமுள்ள சத்தமாகும். அதற்கு செவி கொடுத்த, அதற்கு கீழ்ப்படிந்த ஒவ்வொரு நபரும் ஏதாவதொன்றை செய்தும் இருக்கிறார்கள். 121. இப்போது நோவா, தேவனால் எச்சரிக்கப்பட்ட பின் தூண்டப்பட்டு, தன் குடும்பத்தின் இரட்சிப்பிற்காக ஒரு பேழையை ஆயத்தப்படுத்தினான். அது ஒரு தெளிவான சத்தம். தேவன் “மழை பெய்யும்” என்று சொன்னார், அது பெய்தது. தப்பிக்கும் வழியை கண்டடைந்தவர்கள், அதனுள் சென்றார்கள். கண்டடையாதவர்கள் அழிந்து போனார்கள். 122. “மழை பெய்யும்” என்று சொன்ன அதே தேவன், “வானத்திலிருந்து அக்கினி விழுந்து உலகத்தை அழிக்கும், உங்களுக்காக ஒரு வழியானது ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதை ஏற்றுக்கொள்ளுவார்கள் தப்பிப்பார்கள். ஏற்றுக்கொள்ளாதவர்கள் அழிந்து போவார்கள்” என்றும் சொன்னார். பாவி பாவமுள்ள உலகத்தோடு அழிந்து போவான். மீட்கப்பட்டவன் பரிசுத்த ஆவியினால் மீட்கப் படுவான். 123. நோவா அந்தப் பேழையின் வாசலில் நின்று பூமிக்கு நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தான். ஏனெனில் அந்த மக்கள் தேவன் செய்யப்போகிற காரியத்தின் செய்தியை விசுவாசிக்கவில்லை. அவன் அந்தப் பேழை யின் வாசலில் நின்று நீதிமானாக்கப்படுதலை பிரசங்கிப் பதன் மூலம் தேவனுடைய கோபத்தை பூமிக்குக் கொண்டு வந்தான். வாசலில் நின்று தேவனுடைய வார்த்தையை அறிவித்தான். ஏனெனில் தேவன் ஒரு காரியத்தைச் செய்யப்போகிறார் என்று அது அவனுக்கு தெளிவான சத்தமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 124. இன்று இரவு, உங்கள் சகோதரனாக, நான் கிறிஸ்து இயேசுவாகிய இந்த பேழையின் வாசலில் நின்று கொண்டு, அவர் ஒரு இரட்சகர், சுகமளிப்பவர், வருகிற இராஜா என்று பிரகடனம் செய்கிறேன். வாசலில் நிற்கும் ஊழியக்காரர் களின் இந்தச் செய்திகள், ஜாதிகள்மேலும் உலகின்மேலும் நியாயத்தீர்ப்பில் தேவனுடைய கோபத்தை கொண்டு வரும். இது ஒரு நிச்சயமுள்ள சத்தம். நாம் அதை அறிவோம். அது தேவனுடைய வார்த்தை. இரட்சிப்பிற்காக கிறிஸ் துவைத் தேடாத எல்லோரும் அழிவார்கள். பாவம் செய்கிற வர்கள் பாவத்தோடு அழிவார்கள். உலகத்துக்குரியவர்கள் உலகத்தோடு அழிவார்கள். 125. நோவா தன் பேழையில் அதன்மீது பயணித்தான். ஏனெனில் தேவன் தப்பிப்பதற்காக ஆயத்தப்படுத்திய அந்த ஒரே வழியின் வாசலில் அவன் நின்றிருந்தான். இன்று நான் சொல்லுவது என்னவெனில், உங்கள் சபை உங்களை இரட்சிக்காது. உங்கள் கோட்பாடுகள் உங்களை இரட்சிக் காது. உங்களை இரட்சிக்க வேண்டியது தேவனே. பரிசுத்த ஆவியானவரே அதை செய்கிறார், மேலும் நீங்கள் கிறிஸ்து இயேசுவாகிய பேழைக்குள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ் நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள். “ஏனெனில் ஒரே ஆவி யினாலே நாம் எல்லாரும் ஒரே சரீரத்திற்குள் ஞானஸ் நானம் பெற்றோம்.” உங்களை இரட்சிக்கக்கூடிய ஒன்று அது மாத்திரமே. அதற்கு செவிகொடுங்கள்! விளங்காத சத்தமாகிய “நான் மெத்தடிஸ்ட்,”....... போன்றவற்றை ஏற்கா தீர்கள். “நான் மெதடிஸ்ட்,” “நான் பாப்டிஸ்ட்,” “நான் பெந்தெகொஸ்தே,” “நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன்…” அவற்றை ஏற்காதீர்கள். அவை விளங்காத சத்தங்கள். ஆனால் தேவன் உள்ளே வரும்போது, அது ஒரு தெளிவான சத்தம். நீங்கள் அதைப் பற்றி அறிவீர்கள். இந்த பூமியில் எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் அதைத் தெரிந்துகொண்டே இருப்பீர்கள். (அது நீங்கள் நிகழ்த்தும் ஒரு காரியம் அல்ல.) அது உங்களுக்கு நிகழும் ஒரு காரியம். 126. அது ஒரு தெளிவான சத்தம். அது வெளிப்படு வதற்குமுன், அது நிறைவேறுவதற்குமுன் நோவாவை மக்களின் கண்களில் பைத்தியக்காரனாக நடக்கச் செய்தது. அதுபோலவே இன்று கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியினால் பிறந்த சபையும் இருக்கிறது. அந்த ஜனங் களை மற்றவர்கள் பைத்தியக்காரர்கள் என்று நினைக்கிறார் கள். சிலர், “சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் இன்னும் பாப்டிஸ்ட்தானா?” என்று கேட்கிறார்கள். “இல்லை, நான் பெந்தெகொஸ்தே,” என்று நான் சொன்னேன். “என்ன?” “நான் பெந்தெகொஸ்தே,” என்று நான் சொன்னேன். “புரியவில்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” “நான் தேவனுடைய ஆவியினால் பிறந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன். நான் பெந்தெகொஸ்தே,” என்று நான் சொன்னேன். “அட, நீர் முற்றிலும் வழுவிப் போய்விட்டீர்,” என்று அவன் சொன்னான். 127 “இல்லை, நான் ஒரு தெளிவான சத்தத்தைக் கேட்டேன். அது இங்கிருந்து வந்தது இந்த வேதாகமத்தின் பக்கங்களிலிருந்து மணி ஓசையைப் போல் தெளிவாக ஒலித்தது. நான் அதை பெற்றபோது, என்ன நிகழ்ந்தது என்பதை நான் அறிவேன். நான் அங்கே இருந்தேன். அது நடந்தது எனக்குத் தெரியும்,” என்று நான் சொன்னேன். உறுதி! அது என்னை மரணத்திலிருந்து ஜீவனுக்குள் மாற்றியது. அது எனக்காக ஏதோ செய்தது. அது ஒரு தெளிவான சத்தம். 128. ஜனங்களின் பார்வையில் நான் பைத்தியமாக நடக்கிறேன் என்று எனக்குத் தெரியும். அதை பெற்றுள்ள நீங்களும் கூட மக்களின் பார்வையில் அப்படித்தான் தோன்றுவீர்கள். ஆனால் நாம் எங்கே நிற்கிறோம் என்று அறிவோம். நாம் எதை பற்றி பேசுகிறோம் என்றும் அறிவோம் அது உண்மையான சத்தம். வேதாகமத்தில் வந்த அதே வகை சத்தம்தான் இது. அது நம்மையும் அதேபோல் நடக்கச் செய்கிறது. அது கருப்பு நிறத்த வனையும், மஞ்சள் நிறத்தவனையும், பழுப்பு நிறத்த வனையும் அனைவரையும் ஒன்றுபோல நடக்கச் செய்யும். ஏனெனில் அது அதே சத்தம். ஆமென். ஒரு தெளிவான சத்தம். 129 எக்காளம் விளங்காத சத்தமிடுகிறது, நான் மெதடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரெஸ்பிடீரியன், பெந்தெகொஸ்தே, அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாம், அதில் எந்த நிச்சயமும் இல்லை. ஆனால் அந்த தெளிவான சத்தம் வரும்போது, நீங்கள் அதை அறிந்துகொள்வீர்கள். அது தெளிவான சத்தம். 130 இப்போது மழை பெய்யப் போகிறது என்று அங்கே நின்று பிரசங்கித்த நோவாவைப் பாருங்கள். மக்கள் அவனைப்பார்த்து சிரித்தார்கள். ஆனால் ஒருநாள் அது காட்சிக்கு வந்தது. அதுசரி. நோவா தொடர்ந்து வேலையை செய்து கொண்டே இருந்தான். அங்கேயே நின்று மரத் துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாகச் அடுக்கிக் கொண்டே இருந்தான். தொடர்ந்து வேலை செய்தான். பின்னர் அவன் பேழைக்கு பிசின் பூசினான். அதன் உள்ளும் புறமுமாய் கீல்பூசினான். 131. அது சித்தீம் மரத்தால் செய்யப்பட்டிருந்தது. கவனித்தால் அது மிக இலகுவான மரங்களில் ஒன்று பல்சம் (ஒரு வகை பிசின் தைல மரம்) விட இலகுவானது. அந்தப் பேழை அதனால் செய்யப்பட்டது. இந்தப் பேழையில் உள்ள மரத்துண்டுகளாகிய நீங்களும் அது போலவே இருக்கிறீர்கள். அது மெலிந்த, இலகுவான மரத் தால் செய்யப்படுகிறது. அதை அவர்கள் என்ன செய்கிறார் கள்? அதிலிருந்த சாறை முழுவதும் வெளியேற்ற வேண் டும். அதை இலகுவாக்கி, நன்றாக உலரச் செய்ய வேண் டும். முழுமையாக உலர்ந்தபின் அது வளையக்கூடியதா கிறது பின்னர் அதை பயன்படுத்தலாம். 132. நாமும் அதுபோலத்தான் சிறிது வளைந்தாலே உடைந்து போகிறோம். ஆனால் உங்களிலிருந்து உலகச் சாற்றை முழுவதும் வெளியேற்ற வேண்டும். உலகத்தின் சாற்றை உங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும். பின்னர் அதை நெருப்பின் மேல் பிடிக்க வேண்டும். நெருப்பே அந்தச் சாற்றை வெளியே இழுத்தெடுக்கும். இன்று நம்மிலிருந்து உலகச் சாறை வெளியேற்ற வேண்டுமெனில் அதுதான் தேவை என்று நான் சொல்கிறேன். 133. பின்னர் அவர்கள் என்ன செய்தார்கள்? ஒரு பசை கொடுக்கும் மரத்தை வெட்டி, அதை வெட்டி கீழே தள்ளு வதற்கு பதிலாக, அதை அடித்தார்கள், அதன் பிசினை முழுவதுமாக வெளியேற்றும்வரை அதை அடித்தார்கள். பின்னர் அந்த பிசினை எடுத்துச் சித்தீம் மரத்தின் மீது ஊற்றினார்கள். அது செய்யப்படும்போது மரத்தில் இருந்த எல்லா துவாரங்களும் அடைபட்டுவிட்டன. அது எஃகை விடவும் கடினமானதாக ஆனது. அது சரி. பின்னர் அது பேழையில் பொருத்தப்பட்டது. தேவன் அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசினார், அல்லது - அல்லது நோவா அதைச் செய்தான். உள்ளும் புறமுமாக அவன் அதை கீல்பூசினான். நல்லது. தேவன் அவனிடம் கட்டும்படி சொன்ன மிகச்சரியான முறை அதுவே. 134. இன்று நாமும் அதேபோலவே கட்ட வேண்டும். இந்த தண்ணீர்களையும் இதர காரியங்களையும் சபைக்குள் ஊற்றி அதை ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் முகம் குப்புறவோ அல்லது பின்புறமாகவோ, எப்படி ஞானஸ் நானம் பெற்றாலும் பயனில்லை, சிறிதளவும் பயன் இல்லை. நாம் சபை கோட்பாடுகளைப் பற்றி வாதிக்கிறோம். தெளிப்பது, ஊற்றுவது மற்றும் இதை, அதைக் குறித்து விவாதிக்கிறோம். ஆனால் இவைகளெல்லாம் இருந்தும் அதனால் என்ன பயன்? அது சரி. 135. நான் ஒரு சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். ஒரு முறை நான் என் சகோதரனுடன் பண்ணையின் பின்புறம் இருந்தபோது, ஒரு வயதான ஆமையை கண்டோம். அது கால்களை அப்படியே நகர்த்திக்கொண்டு நடப்பது விசித்திரமாகத் தோன்றும் என்பது உங்களுக்கு தெரியும். என் சகோதரனும் நானும், நாங்கள் பார்த்ததிலேயே அது மிகவும் வேடிக்கை யான உயிரினம் என்று நினைத்தோம். நான் அதற்கு அருகே சென்றவுடன் அது “சூஷ்!” என்று உடனே உள்ளே சுருண்டுக் கொண்டது. 136. அதுபோலத்தான், நீங்கள் சுவிசேஷத்தை உண்மை யாகப் பிரசங்கிக்கத் தொடங்கினால், அந்தப் பழைய ஆமைகளைப் போல சிலர் உடனே தங்கள் ஓட்டுக்குள் இழுத்துக்கொள்கிறார்கள், வேறு சபைக்குப் போய் விடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆம். 137 நான் அவனிடம் சென்று, “இதை நடக்கச் செய்ய முடியுமா என்று பார்ப்போம்,” என்று சொன்னேன். நாங்கள் அதை நெரித்தோம், முடிந்ததை எல்லாம் செய்தோம். ஆனாலும் அது நடக்கவில்லை. தள்ளினோம், அசைத் தோம் அது நடக்கவில்லை. நான் சென்று ஒரு குச்சியை எடுத்துவந்து அடித்தேன். இருந்தும் அது நடக்கவில்லை. அப்போது நான் சொன்னேன், “சரி…” அதுதான் அதை அடித்துக் கொண்டே இருப்பதினால் நடக்கச் செய்ய முடியாது. 138. பின்னர் நான், “சகோதரனே இதோ இதைப் பாருங் கள், நான் இதைச் சரிசெய்கிறேன்,” என்று சொன்னேன். நாங்கள் அங்கிருந்த ஊற்றுக்குப் போனோம். ஒரு நீர் நிறைந்த குழி இருந்தது. அதை அங்கே தண்ணீரில் தள்ளி மூழ்கடிப்பேன். அது நடக்கும்,” என்று சொன்னேன். அதை தண்ணீருக்குள் பிடித்துக் கொண்டிருந்தேன். சில குமிழ்கள் மட்டும் மேலே வந்தன. அதுமட்டும் தான், அப்படியே சும்மா இருந்தது. சகோதரனே, தண்ணீர் அதை நடக்கச் செய்யாது. 139. ஆனால் நான் அதை எப்படி நடக்கச் செய்தேன் தெரியுமா? ஒரு காகிதத் துண்டை எடுத்து சிறிய நெருப்பை ஏற்றி அதன் கீழே வைத்தேன். சகோதரனே, அப்போது அது நடந்தது. ஆம். 140. சபையைச் சரியாக நடக்கச் செய்யவும், தன்னை வெளிப்படுத்தச் செய்யவும் ஏதாவது இருக்குமானால், அது பரிசுத்த ஆவியும் அக்கினியும் உடைய ஞானஸ்நானமே. வானத்திலிருந்து தேவனால் இறங்கும் அந்த அக்கினி சபையைச் செவ்வைப்படுத்தும். இதைப்பற்றி சச்சரவோ, அதைப்பற்றி வாதமோ அல்ல. தேவனுடைய அக்கினியான அன்பின் ஞானஸ்நானம் இறங்கி, உங்கள் இருதயத்தி லிருந்த காரியங்களை எல்லாம் துடைத்தெறிந்து, உங்களை கிறிஸ்து இயேசுவில் புதிய சிருஷ்டியாக மாற்றும். பெண்கள் தங்கள் முடியை வளர விடுவார்கள். ஆண்கள் புகைபிடிப்பதை நிறுத்துவார்கள். இந்த எல்லா காரியங் களும் செம்மையாகிவிடும் அந்த அக்கினி அவர்கள் மீது இறங்கினால் போதும். உண்மை. 141. இப்போது நோவா இதைச் செய்தபோது அது மிகவும் விசித்திரமாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் அவன் அந்த தெளிவான சத்தத்தைக் கேட்டிருந்தான் அதுவே அவனுக்குத் தேவையானது. 142. இப்போது, இன்னொரு மனிதனை எடுத்துக்கொள் வோம். மோசே என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் வனாந்தரத்தின் பின்புறத்தில் இருந்தான்; உபதேசங் களினால் நிறைந்திருந்தான். எல்லா விஷயங்களின் உள்ளும் புறமும் அவனுக்குத் தெரிந்திருந்தது. உலகிலேயே புத்திசாலிகளாக இருந்த எகிப்தியர்களுக்குக் கூட அவன் வேதபாடம் கற்பிக்க முடிந்தது. ஆனால், ஒருநாள் அங்கே அவன் அக்கினியில் ஒன்றைக் கண்டான்; அது அவனுடைய கவனத்தை ஈர்த்தது. 143. இன்றைய தேவையும் அதுதான். அக்கினியில் எரியும் ஒரு சபை; எங்காவது இருக்கிற இந்த மோசேக் களை ஈர்க்கும்படியான ஒரு சபை; இந்தப் பாவிகளை ஈர்க்கும்படியான ஒன்று. ஈர்ப்பை உண்டாக்குவது அக்கினி தான். தெருவில் எங்காவது “தீ! தீ!” என்று ஒருவர் கத்தினால், எல்லாரும் தங்கள் வாகனங்களில் ஏறி அதை நோக்கி ஓடுவார்கள். அக்கினியில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. இன்றிரவு நமக்குத் தேவையானது பரிசுத்த ஆவியும் அக்கினியும் ஆகும்; அப்போதுதான் ஏதோ உண்மையான ஒன்றைக் காண்கிற விசுவாசி அதினால் ஈர்க்கப்படுவான். 144. பென் பெம்பெர்ட்டன் என்று பெயருள்ள என் பழைய நண்பர் ஒருவரை நான் நினைவுகூர்கிறேன். ஓ, அவர் சற்று சுவாரஸ்யமான நபர்! செயிண்ட் லூயிஸ் நகரத்தில் அவர் ஒரு கூடாரக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் அந்தக் கூட்டத்திற்கு வருவதில்லை. …ஆகையால் அவர் தெருவில் கொஞ்ச தூரம் ஓடி, நகரத்தின் நடுவிலேயே நின்று, “தீ! தீ! தீ! தீ!” என்று சத்தமாகக் கத்தினார். தெருவெங்கும் ஓடிக் கொண்டே, தன் தொப்பியை முடிந்தவரை உயரமாக வீசி னார். அங்கே ஒரு கூடாரம் இருந்தது; “இந்த மனிதனுக்கு என்ன ஆயிற்று?” என்று மக்கள் அனைவரும் ஓடிவந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அவர் அங்கே ஓடி வந்து, மேடையின் மீது குதித்து… மீண்டும் கீழே இறங்கி, ஒரு கோமாளிபோல் நடந்துகொண்டு, மறுபடியும் மேடை யின் மீது ஏறி, “பரிசுத்த ஆவியும் அக்கினியும்!” என்று சத்தமாகக் கூறினார். அதன் பிறகு தன்னால் முடிந்தவரை வல்லமையாய் பிரசங்கிக்க ஆரம்பித்தார். அதுதான்… பாருங்கள், ஏதோ ஒன்று கவனத்தை ஈர்க்கிறது. வழிதவறிப் போன மனிதனை ஈர்க்கிற மிகச்சிறந்த ஒன்று பரிசுத்த ஆவியும் அக்கினியும் ஆகும். அதைத்தான் தேவன் செய்தார். 145. இப்போது, மோசே தன்னால் அதைச் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. தன்னுடைய உபதேச அறிவினாலும் கல்வி நிலைப்பாட்டினாலும் அதை முயற்சி செய்தான்; ஆனால் அது செயல்படவில்லை. ஆனால் ஒருநாள் தேவன் அவனோடு பேசி, “மோசே, உன் பாதரட்சைகளை கழற்றி போடு. நீ எகிப்தில் ஒரு பிரபுவாக இருக்கிறாய் என்று நான் அறிவேன்; ஆனாலும் என் பார்வையில் நீ ஒன்றுமில்லை. உன் பாதரட்சைகளை கழற்றி போடு; நீ பரிசுத்த நிலத்தில் நிற்கிறாய். உன்னுள் இருக்கும் அந்த எல்லா காரியங்களையும் அகற்றி விடு,” என்றார். பின்னர் அவன் ஒரு சத்தத்தைக் கேட்டான். அவர், “என் ஜனங்களை விடுவிக்கும்படி நான் உன்னை அனுப்பப் போகிறேன்,” என்றார். இப்போது, அது விளங்காத சத்தமல்ல. 146. இப்போது, அது தெளிவான சத்தம் என்பதை மோசே எப்படி அறிந்தான்? அவன், “என்னோடு பேசுகிற வர் யார்? இது என்ன?” என்று கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஆனால், அவனோடு பேசிய அந்த சத்தம் வேதவாக்கியத்தோடு முற்றிலும் ஒத்திருந்தது. ஒரு சத்தம் தெளிவானதா அல்லது விளங்காததா என்பதை அறியும் வழி அதுதான். வேதவாக்கியத்திற்கு எதிராக உன்னோடு பேசுகிற சத்தமாக இருந்தால், அதைக் கேட்கவேண்டாம். ஆனால் அது வேதவாக்கியத்தின்படியானதாக இருந்தால், அது கேட்கப்படவேண்டும். ஏனெனில் அது தேவனுடைய சத்தம். பாருங்கள்? அவர், “என் ஜனங்களின் கூக்குரலை நான் கேட்டேன். என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். என் வாக்குத்தத்தத் தையும் என் உடன்படிக்கையையும் நான் நினைவுகூர்ந் தேன்,” என்றார். பாருங்கள்? 147. மோசே, “அது முற்றிலும் வேதவாக்கியத்தோடு ஒத்திருக்கிறது,” என்றான். இப்போது, நீங்கள் செய்ய வேண் டியது அதுதான். அது எப்படிப்பட்ட சத்தம் என்பதை கேளுங்கள்; அது வேத வாக்கியத்தின்படியான சத்தமா என்பதைப் பாருங்கள். அது வேத வாக்கியத்தின்படியான சத்தமாக இருந்தால், அது தெளிவான சத்தம்; ஏனெனில் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் சத்தியமானவை. 148. வேதாகமப் பள்ளியில் இருந்து வந்த ஒரு சிறிய பண்டிதன், “ஆஹா, தெய்வீக சுகமளித்தல் என்று ஒன்றே இல்லை; அவையெல்லாம் உணர்ச்சிகளின் தூண்டுதல்தான்,” என்று சொல்வதை நீங்கள் கேட்டால், சகோதரனே, அது வெறும் வெண்கலத்தின் ஓசையும் சத்தமிடும் கைத்தாளமும் தான்; அதைக் கேட்காதீர்கள். ஆம், ஐயா. 149. ஆனால் அவர், “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்,” என்று சொல் வதை நீங்கள் கேட்டால், அது ஒரு தெளிவான சத்தம். “உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே” என்பது தெளிவான சத்தம். பாருங்கள்? ஆகையால், விளங்காத சத்தத்தை அல்ல, தெளிவான சத்தத்தையே கேளுங்கள். 150. பின்னர் மோசே கீழே சென்று ஜனங்களை விடு வித்தான்; ஏனெனில் அவனுக்குக் கிடைத்தது தெளிவான சத்தம். அந்த இரவு ஜெபக்கூட்டத்தில் எபிரெயர்களும் ஒரு தெளிவான சத்தத்தைக் கேட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. “எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவர், அவருடைய வார்த்தையைத் தவிர வேறொன் றையும் நாம் ஏற்கமாட்டோம். எது நடந்தாலும் பரவா யில்லை; நாங்கள் அதற்கே உண்மையாய் நிலைத்திருப் போம்…” அது தெளிவான சத்தம். அது சரி. தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்திருந்தார்கள். 151. ஆபிரகாம் என்ற ஒரு விவசாயி, எழுபத்தைந்து வயதுடையவன், ஒருவேளை ஒரு புறஜாதியனாக இருந் திருக்கலாம். அவர்கள் எல்லா மூடநம்பிக்கைகளையும் வைத்திருந்த பாபேல் கோபுரத்திலிருந்து வந்தவன். ஆனால் ஒருநாள் அவன் வயலில் வேலைசெய்துக் கொண்டிருந்தபோது, ஒரு சத்தத்தைக் கேட்டான்; அது தெளிவான சத்தமாக இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தபின்பும், அந்த சத்தம் நிறைவேறுவதற்கான எந்த ஒரு சாத்தியக்கூறும் இல்லாதிருந்த போதிலும், ஆரம்பத்தில் விசுவாசித்ததைவிட இரட்டிப்பாகவே அவன் அதை விசுவாசித்தான். அதுதான். 152. தேவன், “ஆபிரகாமே, நீ ஒரு… நீ ஒன்றை பெறப்போகிறாய்… உன் மனைவி ஒரு குழந்தையைப் பெறப்போகிறாள். இப்போது அவளுக்கு அறுபத்தைந்து வயது, உனக்கு எழுபத்தைந்து வயது. ஆனால் நான் கர்த்தர். நான் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு, அதன் மூலம் உன்னை அநேக ஜாதிகளுக்கு தகப்பனாக ஆக்குவேன் என்றார். பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு அவர் அவனைச் சந்தித்து, அவன் பெயரை மாற்றினார். ஆபிராமென்ற பெயரிலிருந்து, ஆபிரகாம் என்று அழைத் தார்; தமது நாமத்தின் ஒரு பகுதியான “ஏலோஹிம்” என்பதிலிருந்து அவனுக்குக் கொடுத்தார். ஏனெனில் அவர் ஒரு பிதாவாக இருந்து, அவனை அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாக்கினார். 153. இப்போது, ஆபிரகாம் அந்த வாக்குத்தத்தத்தைத் தொடர்ந்து விசுவாசித்துக்கொண்டே இருந்தான். முதல் மாதம், இரண்டாம் மாதம், முதல் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டு, இருபத்தைந்தாம் ஆண்டும் கூட அவன் இன்னும் அதையே விசுவாசித்தான். வேதா கமம் சொல்லுகிறது. அவன் அவிசுவாசத்தினால் தேவனு டைய வாக்குத்தத்தத்தைப் பற்றி சந்தேகப்படவில்லை; மாறாக, தேவனைத் துதித்துக்கொண்டே விசுவாசத்தில் பலமாயிருந்தான். பாருங்கள்? அவன் தெளிவான சத்தத்தைக் கேட்டான். அது எவ்வளவு காலம் எடுத்தாலும் அதனால் எந்த வித்தியாசமும் இல்லை; முக்கியமானது அந்த சத்தம் சரியானதா என்பதே. ஓ! சபையே, இதை மட்டும் நீங்கள் பிடித்துக்கொண்டால் எல்லாமே முடிந்து விடும் என்று நான் சொல்லுகிறேன். உங்களால் மாத்திரம் அதை, அந்த தெளிவான சத்தத்தை, அது தேவன் என்பதை கண்டுகொள்ள முடிந்தால், பின்னர் காரியங்கள் வித்தியாசமானதாக இருக்கும். நமக்கு அது எப்படி தெரியும்? அவர் அப்படித்தான் சொன்னார். “ஆபிரகாமே, சாராளினால் உனக்கு இந்தக் குழந்தை பிறக்கும் என்று எப்படி அறிகிறாய்?” “தேவன் அப்படித்தான் சொன்னார். ” “ஆனால் பாரும், அவளுக்கு அறுபத்தைந்து வயதாகிறது. ” “அவளுக்கு அறுநூறு வயதாக இருந்தாலும் எனக்குப் பரவாயில்லை. எதுவாக இருந்தாலும் தேவன் அப்படித்தான் சொன்னார்” அதுவே எல்லாவற்றையும் முற்றுப்பெற செய்யும் 154. “சரி, அப்படியென்றால், நான் அடுத்த ஆண்டு வந்து அந்தக் குழந்தை எப்படி இருக்கிறது என்று பார்ப்பேன். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு உன் குழந்தையைப் பார்க்கத் திரும்பிவருகிறேன்.” “ஒன்பது மாதங்களில் அது இங்கே இல்லாமலும் இருக்கலாம்; ஆனால் அது வரும் என்று நான் விசுவாசிக் கிறேன். ஒன்பது மாதங்களில் வராவிட்டால், அடுத்த ஒன்பது மாதங்களில் இருக்கலாம். பாருங்கள்? “அது இங்கே இருக்கும், அவ்வளவுதான்.” 155. ஆண்டுகள் கடந்தன, இன்னும் ஆண்டுகள் கடந்தன. ஆனால் என்ன நடந்தது? அவன் இன்னும் பலமடைந்துகொண்டே, “தேவனுக்கு மகிமை! தேவன் அப்படிச் சொன்னார். ஓ, நான் முயன்றாலும் அதை அவிசு வாசிக்க முடியவில்லை!” என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஓ! 156. இங்கே உட்கார்ந்திருக்கும் சகோதரர் மற்றும் சகோதரி கிட் அவர்களை நான் இப்போது கவனித்தேன். சில காலத்திற்கு முன்பு அந்த வயதான மனிதர் இறக்கப் போகிறார் என்று ஒரு மருத்துவர் கூறினார். பாருங்கள்? அவரிடம் பிரியாவிடைபெற நான் என் காரை வேகமாக ஓட்டிச் சென்றேன். காலை அந்த அறைக்குள் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர், “இல்லை, அவர் மரிக்கமாட்டார்,” என்றார். இதோ, இப்போது அவர் இங்கே இருக்கிறார். அவர் இருபத்தைந்து பவுண்ட் எடை கூடிவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். அது தெளிவான சத்தம். என்னே, என்னே, என்னே! அப்படியானால், நீங்கள் அதை காண்கிறீர்களல்லவா? அது ஒரு தெளிவான சத்தம். நீங்கள் பாருங்கள், அது உறுதியான ஒன்று. தேவன் அப்படி சொன்னால், அது அப்படித்தான். 157. அன்றொருநாள், கலிபோர்னியாவிலிருந்து வந்தி ருந்தேன். இன்னும் என் பயணப்பெட்டிகளை உள்ளே கொண்டுவரவில்லை; இரண்டு மாதங்கள் முழுவதும் வீட்டி லேயே இருக்கவில்லை. இரண்டாவது பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது தொலைபேசி மணி அடித்தது. அது ஒரு பெண்மணி. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் மில்டவுன் பேப்டிஸ்ட் சபையின் போதகராக இருந்தபோது, அவர் எனக்கு நெருங்கிய தோழியாக இருந்தார். 158 அவளுக்கு இரண்டு அழகான மகள்கள் இருந் தார்கள். அவள், சகோதரர் ஹஃப் என்ற நல்ல மனிதரைத் திருமணம் செய்துகொண்டாள். அவர் ஒரு இயந்திர தொழி லாளி; ஒரு விபத்தில் அவரது கட்டை விரலும் மற்ற விரல் களின் சில பகுதிகளும் வெட்டப்பட்டிருந்தன. மிகவும் நல்ல சகோதரர். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள், இரட்டை குழந்தைகள், மேலும் இன்னொரு பெண் பிள்ளை, மொத்தம் மூன்று பிள்ளைகள். அந்த இரட்டை யர்கள் உறுதியான கிறிஸ்தவர்கள். அவர்கள் மஆஇ சபையைச் சேர்ந்தவர்கள்; ஆனால் உண்மையாகவே தேவனை விசுவாசித்தார்கள். ஒருநாள், பள்ளி செல்லும் ஒருவளுக்கு, சற்று தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. ஒரு பெண் இவளிடம், “நாங்கள் புகைபிடிப்பது போல நீ ஏன் புகைபிடிக்கவில்லை? நீ எங்களை விட சிறந்தவள் என்று நினைக்கிறாயா? ஏன் நடனங்களுக்கு வரவில்லை?” என்று கேட்டாள். 159. அவர்கள் நடனங்களுக்கு போவதில்லை, புகை பிடிக்கவோ, குடிக்கவோ செய்யவில்லை. அதற்காக மற்ற வர்கள் அவர்களை கேலி செய்தார்கள். ஆரோக்கியமான மனநிலையுள்ள பெண், “ஹ÷ம்! அவர்கள் ஆற்றில் குதித்து விடட்டும். நான் கிறிஸ்துவுக்குச் சேவை செய்கிறேன். அவர்களுக்கு அது தேவையில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்” என்றாள். 160. ஆனால் மற்றொரு பெண்ணோ, “ஓ! ஒருவேளை என்னால் அதைச் செய்யக் கூடும்” என்று சிந்திக்க ஆரம்பித்தாள். அதன் மூலம் அவளுக்குள் ஒரு மனக் குழப்பம் உருவானது; அவள் நரம்பு பலவீனமடைந்து, மனநிலை பாதிக்கப்பட்டாள். இரண்டு ஆண்டுகள் மனநல மருத்துவ நிலையிலேயே வைத்திருந்தார்கள். பலவிதமான மருந்துகளும் சிகிச்சைகளும் கொடுத்து மருத்துவரீதியாக குணப்படுத்த முயன்றார்கள். ஆனால், அது சரியாக வேலை செய்யவில்லை. 161. பின்னர் நான் வீட்டிற்கு வந்தபோது, அவர்கள், “சகோதரர் பிரன்ஹாம் அவர்களே, அவளை அங்கே இருக்கும் கத்தோலிக்க மருத்துவ நிலையத்தில் கொண்டு சென்றிருக்கிறார்கள். திங்கட்கிழமை அவளை மேடிசனுக்கு (அமெரிக்காவில் ஓர் இடம்) அனுப்பப்போகிறார்கள்,” என்றார்கள். அங்கே மெத்தை பதித்த சுவர்களுள்ள தனி அறை இருக்கிறது; அது மனநோயாளிகளுக்கானது. 162. அவளுக்கு பதினெட்டு வயது; மிகவும் அறி வார்ந்த பெண். எல்லாவற்றிலும் முழுமையை நாடுகிற தன்மை கொண்டவள். பதினெட்டு வயதிலேயே இசை கற்பிக்கிறாள்; ஓபராவும் இசை நாடகத்தைக் கூட (Opera) கற்பிக்கிறாள். இசை அமைப்புகளையும் கற்பிக்கிறாள். பாருங்கள்? மிகவும் புத்திசாலியான பெண். உண்மையான நல்ல கிறிஸ்தவப் பெண். இதெல்லாம் ஏன் அவளுக்கு ஏற்பட்டது என்று அவர்களால் புரிந்துகொள்ள முடிய வில்லை. 163. ஆகவே, அவளை அந்த தனிமைக் கூடத்தில் அடைக்கப்போகிறார்கள் என்று சொன்னபோது, அதுவே எல்லாம் முடிந்தது போல இருந்தது. எத்தனை மின்சார அதிர்ச்சி சிகிச்சைகள் கொடுத்தார்கள் என்பதையும், நான் மறந்துவிட்டேன். அது யூகத்தின் அடிப்படையில் செய்யப் படும் முயற்சிதான். அது அவளை இன்னும் மோசமாக ஆக்கிவிட்டது. பின்னர் மருத்துவர், “இவளை குறித்து எந்த நம்பிக்கையும் இல்லை. ஆகையால் திங்கட்கிழமை அவளை மேடிசனுக்கு அனுப்பப்போகிறோம்,” என்றார். 164. அப்போது அந்தச் சிறிய தாய், “சகோதரர் பிரன்ஹாம் இங்கே இருந்த நாட்களில், கிறிஸ்து சுகமளிப் பவர் என்று எங்களிடம் சொல்லிக்கொண்டிருந்ததை நான் நினைவுகூர்கிறேன்,” என்றாள். “அவரைப் பற்றிப் பத்திரி கைகளில் வந்த செய்திகளையும், பல விஷயங்களையும் நான் கேட்டிருக்கிறேன்.” அவர்கள் மிகவும் கிராமப்புறத்தில் வாழ்ந்த சாதாரண மக்கள். “நான் அவரை எப்படியாகிலும் சந்திக்க முடியுமானால்!” என்று அவள் சொன்னாள். ஆகவே அவர்கள் ஜெபர்சன்வில் அலுவலகத்திற்கு தொலைபேசியில் அழைத்தார்கள். நான் கலிபோர்னியாவில் இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட நாளில் வீட்டிற்கு வருவேன் என்றும் சொன்னார்கள். நல்லது, “அது எங்களுக்கு நன்மை தரும்” என்றார்கள். நான் வந்தது வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன்; திங்கட்கிழமை அவர்கள் அவளை அழைத்துச் செல்லப்போகிறார்கள். 165. ஆகவே அவர் மருத்துவரிடம் சென்று, நான் வந்து அவளை பார்ப்பதற்கான அனுமதியை கேட்டார். ஆனால் மருத்துவர், “இல்லை. வேண்டாம். அவளை உணர்ச்சிவசப்படுத்தாதீர்கள்,” என்றார். எந்த மனநல மருத்துவரும் மற்றவர்களும், இதற்காக எதுவும் செய்ய முடியாது என்றார்கள். 166. ஆனாலும் அவர்கள் மீண்டும் முயன்றார்கள். சகோதரர் ஹஃப் “பாருங்கள் இது ஒரு கத்தோலிக்க மருத்துவமனை, எங்கள் சகோதரர், நீங்கள் இறுதிச் சடங்கு செய்ய ஒரு பாதிரியாரை அழைப்பது போலத்தான் வருகிறார்.” என்றார். மருத்துவர், “சரி, அவரால் ஒன்றும் செய்ய முடியாது,” என்றார். “அந்தப் பிரசங்கியாரோடு என்னை பேசச்செய்யுங் கள்.” என்றார். அவர், “சரி,” என்று சொல்லி என் தொலைபேசி எண்ணைக் கொடுத்தார். அவர் அழைத்தபோது நான் வெளியே இருந்தேன். ஆகவே, “அவரை திரும்ப அழைக்கச் சொல்லுங்கள்,” என்று என் மனைவியிடம் கூறிவிட்டார். 167. நான் சனிக்கிழமை முழுவதும் அழைத்தேன்; இரவு முழுவதும் முயன்றேன்; சனிக்கிழமை நள்ளிரவு பன்னி ரண்டுமணி வரை முயன்றும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் என்னைத் தவிர்க்க முயற்சிக்கிறார் என்று புரிந்தது; நான் அங்கே வராதபடி தடுக்க முயன்றார். பின்னர் சகோதரர் ஹஃப் என்னை அழைத்து, “சகோதரர் பிரன்ஹாம் அவர்களே, அவர்கள் அவளை திங்கட்கிழமை அழைத்துச் செல்லப்போகிறார்கள்,” என்றார். நான், “சகோதரர் ஹஃப் அவர்களே, இப்படிச் செய்யுங்கள். அவருக்கு என்னைத் தெரியாது. ஆகவே, என்னை ஒரு சாதாரண பார்வையாளராக உள்ளே அழைத்துச் செல்லுங்கள். நான் வெறும் பார்வையாளராக உள்ளே வரட்டும்,” என்றேன். 168. அவர், “சரி,” என்றார். ஆகவே, அடுத்த நாள் என்னை ஒரு பார்வையாளராக அழைத்துச் செல்ல அவர் வந்தார். அவருடைய… அந்த இரட்டையர்களில் ஒருத்தி யும், இன்னொரு சிறிய பெண்ணும் என்னோடு காரில் ஏறினார்கள். நாங்கள் ஆற்றைக் கடந்து சென்றோம்; தாயும் தந்தையும் முன்னதாகவே காரில் சென்றார்கள். 169. வழியில் நான் அந்தப் பெண்களிடம் பேச ஆரம்பித்தேன். அவர்கள், “சகோதரர் பிரன்ஹாம் அவர்களே, ஒரு விசித்திரமான விஷயம்,” என்றார்கள். அந்த அழகான சிறிய பெண், “இன்றுக்காலை எங்கள் போதகர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி பிரசங்கிக்க ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று தலைப்பை மாற்றி, எண்ணெய் பூசி சுகமளித்தலைப்பற்றி பேச ஆரம்பித்தார்,” என்றாள். “அப்பாவும் அம்மாவும் அழ ஆரம்பித்தார்கள்; நாங்களும் அழுதோம். ஏனெனில் நீங்கள் வரப்போகிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஜனங்கள் எண்ணெயை பயன்படுத்தி, சுகமளித்தலை செய்யும் நடை முறை வேதாகமத்தில் உள்ளது என்பதாக அவர் கூறினார்” என்றாள். நான், “ஆமாம், சகோதரி நீ என்ன சொல்லுகிறாய் என்பதை நான் அறிவேன்” என்றேன். 170. அவள், “அது எங்களுக்காகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அந்த வழியாக எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது, என்று தேவன் எங்கள் போதகரின் மூலம் சொல்ல முயன்றாரா?” என்று கேட்டாள். நான், “நாம் அங்கே சென்றபிறகு பார்ப்போம். பரிசுத்த ஆவியானவர் என்ன சொல்லுகிறார் என்று காண்போம்,” என்றேன். 171 உங்களுக்கு தெரியும், அவர்கள் கதவைத் திறந்த போது, முதலில் கதவைத் திறந்து உங்களை உள்ளே அனுப்பிவிட்டு, மறுபடியும் பூட்டிவிடுவார்கள். பிறகு எலிவேட்டரைத் திறந்து, மேலே அழைத்துச் செல்வார்கள்; மீண்டும் அதை பூட்டிவிடுவார்கள். அங்கே இருக்கும் மக்களை, அடைத்து வைத்திருக்க இப்படித்தான் செய் வார்கள்; பின்னர் உங்களை அந்த அறைக்குள் அழைத்துச் செல்வார்கள். 172. அங்கே ஒரு அழகான சிறிய பெண் உட்கார்ந் திருந்தாள். பதினெட்டு வயது, இவ்வளவு உயரத்தில், மென்மையான பெரிய அழகான கண்கள் கொண்ட ஒரு இனிய குழந்தை. ஆனால் மிகவும் பரிதாபகரமான நிலை யில் இருந்தாள்; நான், “மார்கரெட், என்னை நினைவிருக் கிறதா?” என்று கேட்டேன். அவள், “ஓ… ஓ… ஓ!” என்றாள். 173. நான், “நான் சகோதரர் பிரன்ஹாம். என்னை நினைவிருக்கிறதா? நீ என்னை “பில்லி” என்று அழைப் பாய். நீங்கள் அங்கே வந்தபோது, நீ மிகவும் சிறியவளாய் இருந்தாய். நான் உன்னை கடைசியாக பார்த்தபோது, அந்தச் சிறிய உடைகளை அணிந்த குட்டிப் பெண்ணாக இருந்தாய். என்னை நினைவிருக்கிறதா?” என்றேன். அவள், “ஓ!” என்று சொல்லி, பெரிய கண்களால் அப்படியே என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 174. நான் மனதில், “ஓ தேவனே!” என்று நினைத்தேன். என் காலை படுக்கையின் ஓரத்தில் சாய்த்தபடி உட்கார்ந் திருந்தேன். அங்கே ஒரு மனிதன் தன் மனைவியை தாங்கிப் பிடித்தவராய் நின்றிருந்தார். அவள் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். இந்தப் பெண் இங்கே உட்கார்ந்திருந்தாள்; அவளுடைய தந்தை அவளருகில் நின்றிருந்தார்; தாய் படுக்கையின் மறுபுற மூலையில் உட்கார்ந்திருந்தாள். நாங்கள் அங்கே இருந்தபோது, நான் தொடர்ந்து, “கர்த்தாவே, நீர் ஏதாவது பேசுவீரா? ஏதாவது சொல்லுவீரா?” என்று எண்ணிக்கொண்டிருந்தேன். நான், “மார்கரெட், என்னை நினைவிருக்கிறதா?” என்று கேட்டேன். ஆனால் அவள் என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்; எதையும் அவளால் வெளிப்படுத்த முடிய வில்லை. 175. அவர்கள், “சகோதரர் பிரன்ஹாம் அவர்களே, அவள் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது இரத்தம் பற்றியும், சாலையில் நடந்த விஷயங்கள் பற்றியும், இப்படிப்பட்ட விஷயங்களைத்தான்,” என்றார்கள். “மிக விசித்திரமாக பேசுகிறாள். ” நான், “இது எவ்வளவு காலமாக இப்படியே இருக் கிறது? ” என்று கேட்டேன். அவர்கள், “இரண்டு வருடங்களாக, ” என்றார்கள். 176. நான் தொடர்ந்து அவளோடு பேசிக் கொண்டிருந் தேன். ஓ, ஆனால் தேவனுடைய கிருபை! சில நிமிடங் களில் பரிசுத்த ஆவியானவர் உள்ளே அசைவாட ஆரம் பித்தார். நான், “மார்கரெட், நீ என்னை அறியவில்லை. ஆனால்,” என்றேன், “நீ சிறுவயதிலிருந்தே, ஆண்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வயது வந்ததிலிருந்து, ஒரு பிரசங்கியாரைத் திருமணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உன் மனதில் இருந்தது. நீ ஒரு பிரசங்கியாரைத் திருமணம் செய்ய விரும்பினாய்” என்றேன். அப்போது அவள் சிரிக்க ஆரம்பித்தாள். அதை நான் கவனித்தேன். பாருங்கள், பரிசுத்த ஆவியானவர் அவளிடம் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். பின்னர் நான், “கர்த்தர் உரைக்கிறதாவது, இது முடிந்து விட்டது,” என்றேன். அதைச் சொன்ன உடனே, “நான் என்ன சொன்னேன்?” என்று நான் உள்ளத்தில் எண்ணிப் பார்த்தேன். 177. உங்களில் பலர் அணில்கள் பற்றிய சம்பவத் தையும் மற்ற காரியங்களையும் பற்றி வாசித்திருக்கிறீர்கள். நான், “இது முடிந்துவிட்டது,” என்றேன். பின்னர் மனதில், “சரி, அவர் அப்படிச் சொன்னால், நான் அதில் சரியாக நிற்கிறேன்,” என்று நினைத்தேன். நான், “ஹஃப் சகோதரரே, நான் ஏன் அப்படிச் சொன்னேன் என்று எனக்குத் தெரியாது; உங்களிடம் விளக்க முடியாது,” என்றேன். “நான் அதைச் சொன்னேன்; எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஆனால் கவனியுங்கள். அடுத்த சில மணி நேரங்களில் இங்கே ஒரு மாற்றம் ஏற்படும்,” என்றேன். அது மாலை சுமார் ஐந்து மணியளவு. “இன்னும் சில மணி நேரங்களில் இங்கே பெரிய மாற்றம் ஏற்படும்! ” என்றேன். 178. அந்தக் காலையிலேயே நான் சபையில், கூடாரத் தில் அவளைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். இப்போது இங்கே இருக்கும் கூடார உறுப்பினர்களில் சிலர், ஃபிரெட் சோத்மன் போன்றவர்கள், அப்போது அங்கே இருந்தார்கள் என்று நினைக்கிறேன், அல்லது கீழே இருந்து, அதை கேட்டவர்கள் இருந்தார்கள். ஓ, இங்கே உட்கார்ந்திருக்கும் இந்த சகோதரர்களும் அப்போது அங்கே இருந்தார்கள் என்று நான் நம்புகிறேன். நான் கூடார சபையில் அப்படிச் சொன்னதை இங்கே எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? ஆம், அவர்கள் இங்கே இருக்கிறார்கள். பாருங்கள்? நான், “ஜெபத்தில் இருங்கள்,” என்றேன். “ஏதோ ஒன்று நடக்கப் போகிறது; ஏதோ ஒன்று நடக்கப்போகிறது,” என்றேன். 179. நான் வெளியே வந்தபோது, அவர்கள் கதவு களைத் திறந்து என்னை வெளியே அனுப்பினார்கள். காரில் ஏறி மூலையைச் சுற்றிச் சென்றபோது நான், “பரலோகப் பிதாவே, நான் ஏன் அப்படிச் சொன்னேன்? ஏன் அப்படிச் சொன்னேன்?” என்று கேட்டேன். அது அணில்களைப்பற்றி சொன்னபோது நடந்ததுபோலவே இருந்தது; பின்னர் அவை தோன்றின. நான், “ஏதோ ஒன்று நடக்கப்போகிறது,” என்றேன். பின்னர் அடுத்த கூட்டத்திலும் அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது; இந்த கடைசி நிகழ்வும் அப்படி தான், எது என்ன நடக்கப்போகிறதோ அதுவே. 180. நான் வீட்டிற்கு வந்து உடையை மாற்றிக்கொண்டு மீண்டும் சபைக்குப் போகத் தயாரானபோது, சகோதரர் ஹஃப் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவர், “சகோதரர் பிரன்ஹாம் அவர்களே, இனி இதை என்னால் அடக்கிக்கொள்ள முடியவில்லை,” என்றார். “உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அங்கிருந்து சென்ற அரைமணி நேரத் திற்குப் பிறகு மருத்துவர்கள் உள்ளே வந்தார்கள்.” அவர், “மார்கரெட் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள்…” என்றார். 181. நான் அங்கே உட்கார்ந்திருந்தபோது, “மார்கரெட், கர்த்தர் உரைக்கிறதாவது, இது முடிந்துவிட்டது,” என்று சொன்னேன். அப்போது அவளுடைய தாய் திடீரென்று என் முழங்காலில் தட்டினாள். அவள் என்ன செய்கிறாள் என்பதையே அறியாமல், தன் மகளிடம், “தேனே, அவர் ஒருபோதும் தவறுவதில்லை! அவர் ஒருபோதும் தவறு வதில்லை!” என்று கூறினாள். பின்னர் நான் அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியே நடந்துசென்றேன். பிறகு சகோதரர் ஹஃப், என்னை அழைத்து, “சகோதரர் பிரன்ஹாம் அவர்களே, மருத்துவர்கள் உள்ளே வந்து, ‘இங்கே என்ன நடந்தது? இந்தப் பெண் முழுமையாக சுயநினைவுக்கு வந்துவிட்டாளே!’ என்று சொன்னார்கள்” என்றார். 182. அவர், “நாளை அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்போகிறோம். அவளை வீட்டிற்கு செல்ல அனு மதித்து விட்டார்கள். இப்போது அவள் முற்றிலும் இயல் பான நிலையிலும், மற்றவர்களைப் போல நலமாக இருக் கிறாள்,” என்றார். இன்று இரவு அவள் வீட்டிலே சந்தோஷ மாக இருக்கிறாள். ஏன் தெரியுமா? அது தெளிவான சத்தமாக இருந்தது. அதற்கு எதிராக எது இருந்தாலும் பரவாயில்லை; அது தெளிவான சத்தம். ஓ தேவனே, அந்த தெளிவான சத்தம்! 183. இன்னும் இரண்டு அல்லது மூன்று விஷயங்கள் மட்டும். சுமார் ஐந்து நிமிடங்கள். அந்த தெளிவான சத்தத்தைப்பற்றி நாம் எவ்வளவோ பேசிக்கொண்டே போகலாம். அன்றொருநாள் பாதையில் ஏதோ ஒன்று நடந்தது; அதே காரியம் தொடர்ந்து நடக்கிறது. இன்னும் அதிகமாக, அதிகமாக, அதிகமாக, அதிகமாக. ஏன்? அது தெளிவான சத்தம் என்பதாலே. அந்த நாளில் காட்டில், ஃபிரெட் சகோதரரே, டாம் சகோதரரே, மற்றவர்களே, லியோ சகோதரரே, நீங்கள் எல்லாரும் அங்கே இருந்தபோது, கர்த்தருடைய தூதன் அங்கே நின்று, “அந்த வார்த்தையைப் பேசு; அது நடப்பதைப் பார்,” என்று சொன்னார். அது விளங்காத சத்தமல்ல. அது ஒரு தெளிவான சத்தம். அது சத்தியம் என்பதை நான் அறிவேன். இதோ இந்த வேதாகமத்தை என் இருதயத்தின் மேல் வைத்து சொல்கிறேன். அது தேவன். நாம் முடிவுகாலத்தில் இருக்கிறோம். 184. இயேசு பூமியில் இருந்தபோது, அவரிடத்தில் எந்த விளங்காத சத்தமும் இருக்கவில்லை. அவர், “என் ஜீவனை கொடுக்க எனக்கு அதிகாரம் இருக்கிறது; அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது,” என்றார். அதில் எந்த விளங்காத தன்மையும் இல்லை; அது தெளிவான சத்தம். ஏன்? அவர் தேவனிடமிருந்து கேட்டிருந்தார். சரி. அல்லேலூயா! இப்போது எனக்கு உரக்க கத்த வேண்டும் போல இருக்கிறது. இப்போது நான் மிகவும் ஆவிக்குரிய உணர்வில் இருக்கிறேன். இப்போது நாம் எதிர்மறை பக்கத்திலிருந்து நேர்மறை பக்கத்திற்குள் வருகிறோம். ஒரு தெளிவான சத்தம். 185. “எக்காளம் விளங்காத சத்தம் கொடுத்தால், யார் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்வார்கள்?” ஆனால் எக்காளம் தொனித்துக் கொண்டிருக்கிறது. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். அது வேதவாக்கியத்தின்படி இருக்கிறது. “சாயங்கால வேளையில் வெளிச்சம் உண்டாகும்.” “இந்த அடையாளங்கள்…” இப்படியாகத்தான். அது இங்கே இருக்கிறது. எக்காளம் சரியான சத்தத்தை கொடுக்கிறது; ஆகையால் நாம் நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வோம். அது சரி. சகோதரனே, சகோதரியே, நாம் தயாராகுவோம்; ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. இயேசு, “என் ஜீவனை கொடுக்க எனக்கு அதிகாரம் இருக்கிறது; அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது,” என்றார். “ஒருவேளை செய்வேன். செய்வேன் என்று நம்புகிறேன்,” என்று அல்ல. அவர், “எனக்கு அதிகாரம் இருக்கிறது,” என்றார். ஆமென். அதுதான். 186. லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆனபோது, மார்த்தாள் அவரைச் சந்திக்க வெளியே வந்து, “கர்த்தாவே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் மரிக்க மாட்டான். ஆனாலும் இப்போதும் நீர் தேவனிடத்தில் எதை கேட்டாலும், தேவன் அதை உமக்குக் கொடுப்பார்,” என்றாள். இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக் கிறேன்,” என்றார். “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று நம்புகிறேன்” என்றல்ல. 187. “நானே.” ஆமென். “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசு வாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரிக்கமாட் டான். இதை விசுவாசிக்கிறாயா?” அதில் எந்த விளங்காத தன்மையும் இல்லை. “நானே.” “இருப்பேன், இருப்பேன் என்று நம்புகிறேன்” என்றல்ல. “நான் இப்போதும் அதுவே; எப்போதும் அதுவாகவே இருந்தேன்; என்றும் அதுவாகவே இருப்பேன். நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். இருக்கிறேன்! இருக்கிறேன்!” ஆம்.அதில் எந்த விளங்காத தன்மையும் இல்லை. “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” ஆமென். அதில் எந்த தயக்கமும் இல்லை. இப்போது நினைவில் கொள்ளுங்கள். “நான் போய் என்ன செய்ய முடியும் என்று பார்த்துவிட்டு வருகிறேன்,” என்று அவர் சொல்லவில்லை. 188. “நான் போய் அவனை எழுப்புவேன்.” அதில் எந்த விளங்காமையும் இல்லை. அது தெளிவான வார்த்தை. ஏன்? தேவன் அதை அவருக்குச் சொல்லியிருந்தார். “என் பிதா எனக்குக் காண்பிக்காமல் நான் எதையும் செய்வ தில்லை” என்று கூறுகிறார். அதுதான் காரணம்.. யோவான் 5.19-ல் மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிற தெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். ஆமென். இதில் எந்த தெளிவின்மையும் இல்லை. 189. “அவன் மரித்துவிட்டான், கல்லறையில் அழுகிக் கொண்டிருக்கிறான். ஆனால் நான் போய் அவனை எழுப்புவேன்.” ஆமென். “நான் போய் அவனை எழுப்பு வேன்.” அதில் எந்த தெளிவின்மையும் இல்லை. இதையும் நினைவில் கொள்ளுங்கள். “என்னிடத்தில் விசுவாசமாயிருக் கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” இதிலும் எந்த தெளிவின்மையும் இல்லை. தேவன் உண்மையுள்ளவரா யிருப்பது போலவே இது உண்மையானது. ஓ! அவர் உங்களை அறிந்திருக்கிறார் என்பதில் நீங்கள் களிகூர வில்லையா? உங்கள் பெயர் அவருடைய ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதில் நீங்கள் களிகூரவில்லையா? “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” ஆமென்! அல்லேலூயா! 190. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், நான் அவருக்குள் இருக்கிறேன்”. தேவன் அவரை உயிரோடெழுப்பினதால் அதை நிரூபித்தார்; அதுபோல என்னையும் எழுப்புவார். தேவனுடைய பார்வையில் நான் ஏற்கனவே உன்னதங்களிலே அவரோடேகூட உட்கார்ந் திருக்கிறேன்; உயிர்த்தெழுந்தவனாய் இருக்கிறேன். “எவர் களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியு மிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” ஆமென். சரியாக இப் பொழுதே, மகிமையை அடைகிற ஒரு - ஒரு படியில், கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் இருக்கிறோம், மகிமைப்படுத்தப்பட்ட நிலையில், நமக்குள் இருக்கும் உயிர்த்தெழும் வல்லமையைக் கொண்டு, பாவி என்ற ஒரு நிலையிலிருந்து ஒரு கிறிஸ்தவனாக மாற்றப்பட்டிருக் கிறோம்.ஓ! அதில் எந்த குழப்பமும் இல்லை, விளங்காத தன்மையும் இல்லை. 191. “உங்களுக்கு அது எப்படி தெரியும்?” அது எனக்குள் ஜீவிக்கிறது. உங்களுக்கு எப்படி தெரியும்? அது உங்களுக்குள்ளும் இருக்கிறது. ஆமென். அதனால்தான் இந்தக் காரியங்கள் நடக்கின்றன. அதில் எந்த விளங்காத தன்மையும் இல்லை. நாம் உயிரோடிருக்கிறதினால் மரணத்தை கடந்து ஜீவனுக்குள் வந்துவிட்டோம். “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடி ருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக் கும் மரியாமலும் இருப்பான்” என்றார். அவரை விசு வாசித்து அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கும், “நான் நித்தியஜீவனை அளிப்பேன்.” இப்போதே நமக்கு நித்திய ஜீவன் இருக்கிறது; கடைசி நாளில் நாம் உயிர்த்தெழுவோம். ஓ! அதுதான். அதில் எந்த விளங்காத தன்மையும் இல்லை. இல்லை, அது ஏற்கனவே முடிந்துவிட்டது. 192. “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான் கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன் பிதா எனக்குக் கொடுத்த யாவரும் என்னிடத்தில் வருவார்கள்.” இங்கே எத்தனை பேர் கிறிஸ்தவர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். சரி, நீங்கள் ஏற்கனவே மகிமைப்படுத்தப் பட்ட நிலையில் இருக்கிறீர்கள். ஆமென். “பிதா எனக்குக் கொடுத்த யாவரும் என்னிடத்தில் வருவார்கள். என்னிடத் தில் வருகிறவனை நான் எவ்விதத்திலும் வெளியே தள்ளமாட்டேன்; அவனுக்கு நித்தியஜீவனை அளித்து, கடைசி நாளில் அவனை எழுப்புவேன்.” “ஒருவேளை நான் எழுப்புவேன்” என்றா? 193. இல்லை, “நான் நிச்சயம் செய்வேன்,” என்றார். அது தெளிவான சத்தம். அது உறுதியானது. நாம் மகிமைப் படுத்தப்பட்ட நிலையில் வெளிப்படப்போகிறோம். “அழி வுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளும்.” அதில் எந்த விளங்காத தன்மையும் இல்லை. அப்படியிருக்க நாம் எதற்குப் பயப்பட வேண்டும்? ஓ, அல்லேலூயா! கலங்கு வதற்கும் பயப்படுவதற்கும் எதுவும் இல்லை. ஓ, என்னே! ஏன்? எந்த ஒன்றுமே நிச்சயமற்றது அல்ல. நாம் நிச்சயமுடையவர்களாயிருக்கிறோம். 194. “நான் அவனை எழுப்புவேன். இந்த சாவுக்கேது வாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும். நாம் எப்படிப்பட்ட சரீரத்தைப் பெறப்போகிறோம் என்பது இன்னும் வெளிப்படவில்லை; ஆனால் அவருடைய மகிமையான சொந்த சரீரத்தைப் போன்ற சரீரம் நமக் கிருக்கும் என்பதை நாம் அறிவோம். ஏனெனில் அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம்.” ஆமென். அதில் எந்த விளங்காத தன்மையும் இல்லை. “நாம் அவரைக் காண்போம்.” மகிமை! எந்த விளங்காத தன்மையும் இல்லை; எல்லாமே நிச்சயம். 195. ஓ, நீங்கள் விரும்பினால் அந்த விளங்காத சத்தத்தைப் பின்பற்றிக்கொள்ளலாம். ஆனால் நான் தெளி வான சத்தத்தைக் கொடுக்கும் சுவிசேஷ எக்காளத்தை விரும்புகிறேன். சுவிசேஷ எக்காளம் என்றால் என்ன? நற்செய்தி. அதுதான் சரி. அவர் இப்போது இங்கே இருக் கிறார். இப்பொழுது,... இதில் எந்த விளங்காத தன்மையும் இல்லை. சரி. 196. அவர், “லாசருவை என்ன செய்ய முடியும் என்று நான் போய் பார்க்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று கண்டுபிடிக்கிறேன். அவனை உயிர்த்தெழுப்ப முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கிறேன்,” என்று சொல்லவில்லை. “அவன் மீண்டும் உயிர்த்தெழுவான்,” என்றார். அது தெளிவானது; நேர்மறையானது. சரி, நீங்கள், “இப்போது நீங்கள் இயேசுவைப் பற்றியும், ஆபிரகாமைப் பற்றியும் பேசினீர்கள். ஆனால் உங்களைப் பற்றி என்ன?” என்று கேட்கலாம். 197. ஆம், நமக்கும் நிச்சயம் இருக்கிறது. “இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது; ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் உங்களோ டிருப்பேன்.” அது ஒரு நிச்சயம். உறுதியான நிச்சயம். “நான் இருப்பேன்.” “ஒருவேளை இருப்பேன். இருக்கக்கூடும்,” என்று அல்ல. 198. இல்லை, “நான் இருப்பேன்,” என்றார். அது நிச்சயம். “நான் உங்களோடிருப்பேன்; உங்களுக்குள்ளும் இருப்பேன்.” நீங்கள் விரும்பினால் அதை மதவெறி என்று சொல்லிக்கொள்ளலாம்; ஆனால் நான் இரட்சிக்கப்பட்டிருக் கிறேன் என்பது என்னைப் பொருத்தவரை உறுதியான சத்தம். ஆமென். “உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடிருப்பேன்; உங்களுக்குள்ளும் இருப்பேன்.” இது நீங்கள் அறிந்து கொள்ளும் ஒரு நிச்சயம். “நீ உறுதி கொண்டவனாயிருக்கிறாய் என்பதை எப்படி நீ அறிந்து கொள்வாய்?” 199. சரி, “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய் வீர்கள்.” அதுதான் அடையாளம். நான் உங்களோடிருக் கிறேன் என்பதை நிரூபிக்க ஒரு அடையாளத்தை உங் களுக்குக் கொடுப்பேன். அதில் எந்த விளங்காத தன்மை யும் இருக்கப் போவதில்லை. நீங்கள், “சரி, நான் வெறுமனே உணர்ச்சிவசப் பட்டிருக் கிறேனா அல்லது வெறுமனே தேவையற்ற பதற்றம் அடைந்திருக்கிறேனா என்பதை எப்படி அறிந்து கொள்வது?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்.” அதில் எந்த விளங்காத தன்மையும் இல்லை. 200. “நாம் கிறிஸ்தவர்கள் என்பதை எப்படி அறிய லாம்? உலகமெங்கும் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக் கிறோம், ஞானஸ்நானம் பெறுகிறோம், இதையெல்லாம் செய்கிறோம்; ஆனால் நாம் உண்மையாகவே கிறிஸ்த வர்கள் என்பதை எப்படி அறியலாம்?” “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். நான் உங்களுக்கு ஒரு நிச்சயத்தை, ஒரு தெளிவான சத்தத்தை, ஒரு தெளிவான அடையாளத்தை கொடுப்பேன்.” 201. ஆனால், இப்போது இப்படிதான் இருக்கின்றது: போதகர் ஒருவர் உங்களை பார்த்து, “வாருங்கள், எங்கள் சபையில் சேர்ந்து கொள்ளுங்கள்; எங்கள் விசுவாச அறிக் கையை (Creed) ஒப்பியுங்கள், அல்லது ஞானஸ்நானம் பெறுங்கள், அல்லது தெளிக்கப்படுங்கள், அல்லது ஊற்றப் படுங்கள்,” என்று சொல்வார். இன்னும் சில விஷயங் களையும் சொல்வார். “அவ்வளவுதான் போதும்” என்பார் கள். ஆனால் இயேசு அதைப்பற்றி ஒன்றும் சொல்ல வில்லை. அது விளங்காத சத்தமாகும். 202. நீங்கள், “என் தாய் இந்தச் சபையைச் சேர்ந்தவர்” என்று சொல்லலாம். அது நல்லதே. “நான் முன்னதாக சென்று உறுதிப்படுத்துதல் சடங்கை செய்து விட்டேன். (Confirmed)” என்றும் சொல்லலாம். அதுவும் சரிதான். ஆனால் அவை மட்டும் போதாது; அவைகளும் இன்னும் விளங்காதவைகளே. 203. இயேசு, “நான் உங்களுக்கு ஒரு தெளிவான அடையாளத்தைக் கொடுக்கப் போகிறேன் என்றார். இந்த அடையாளங்கள்.” மார்க்கு 16-ல், தமது சபைக்குச் சொன்ன கடைசியான வார்த்தைகளில், “நீங்கள் உலகெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்றார். எவ்வளவு தூரம்? உலகெங்கும். எத்தனை பேருக்கு? சர்வ சிருஷ்டிக்கும். இன்னும் கோடிக்கணக் கானோர், பில்லியன் கணக்கானோர் இதைக் கேளாமல் இருக்கிறார்கள். அது முடிவுபெற்ற பணியல்ல. “அது சீஷர்களோடு முடிந்துவிட்டது” என்று சிலர் கூறுகிறார்கள். 204. இல்லை, இல்லை. இதோ தெளிவான சத்தம்: “உலகெங்கும், எல்லா சிருஷ்டிக்கும்.” அது நிச்சயம். சுவிசேஷம் பிரசிங்கிக்கப்படும்போது இந்த அடையாளங் கள் பின்தொடரும். “ஒருவேளை தொடரலாம்” என்றல்ல, அவைகள் நிச்சயம் தொடர வேண்டியவைகள். “அவைகள் பின்தொடரும்..” அது நிச்சயமுள்ளது. ஓ! ஓ! சகோதரனே என் இருதயத்தில் ஓர் பெந்தேகோஸ்தவனாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆம்.. ஐயா. 205. ஓ, இந்த அடையாளங்கள் நிச்சயமாகத் தொடரும்! அது உறுதியானது. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுத்தாலும் அல்லது சாவுக்கேதுவான எதை யாவது குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள்; அவர்கள் சொஸ்தமாவார்கள்.” இவை உறுதியான அடையாளங்கள். “நோவாவின் நாட்களில் இருந்ததுபோல...” “நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதை எப்படித் அறிந்துகொள்ளலாம்? ஆண்டவரே, கடைசி நாட்களில் என்ன நடக்கும்? நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதை எப்படித் அறிந்துகொள்ளலாம்?” “லோத்தின் நாட்களில் நடந்தது போலவே நடக்கும்.” “அப்படியே நடக்கும்!” “ஒருவேளை அப்படி நடக்கலாம்” என்று அல்ல. அல்லது, “அந்த நேரத்தில் அப்படி நடக்க வேண்டும்” என்றும் அல்ல. 206. இல்லை, “அப்படியே நடக்கும்.” அதே ஆவியா னவர் மனித மாம்சத்தில் வாசம்பண்ணி, இருதயத்தின் எண்ணங்களைப் பகுத்தறிந்து, தமக்குப் பின்னால் இருந் தவர் யார் என்பதைக் கூறினார். நான் என்ன சொல்கிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். “லோத்தின் நாட்களில் இருந்தது போலவே இருக்கும்.” யாரோ ஒருவர் எழும்ப வேண்டும்; ஏதோ ஒன்று அதைச் செய்ய வேண்டும். 207. ஆனால் கடைசி நாட்களில் சபை எப்படியிருக்கும் என்பதையும் அது கூறுகிறது. சபை வெதுவெதுப்பாகி, விசுவாசத்திலிருந்து விலகிப்போகும். அது அப்படித்தான் இருக்கும்; அதைத் தடுக்க முயற்சிப்பதில் பயனில்லை. அது நடக்கும். ஆனால் அதற்குள்ளும் சிலர் இருப்பார்கள். ஏழு சபைக்காலங்களில், லவோதிக்கேயா சபைக்காலத்தில் மட்டுமே இயேசு தமது சபைக்கு வெளியே நின்று, கதவைத் தட்டிக்கொண்டு, மீண்டும் உள்ளே வர முயற்சிப் பவராகக் காணப்பட்டார். அது சரியே. ஏழு சபைக்காலங் களில் அப்படிக் காணப்பட்ட ஒரே சபைக்காலம் அதுதான். ஆம், ஐயா. பெந்தெகொஸ்தே என்று சொல்லப்படுகிற லவோதிக்கேயா சபைக்காலத்தில் அவர்கள் இவ்வளவு அதிகமான விசுவாச அறிக்கைகளையும் (Creeds), ஸ்தாபனங்களையும் உருவாக்கிவிட்டதால், இயேசுவை வெளியே தள்ளிவிட்டார்கள். அவர் கதவின் வெளியே நின்று தட்டிக்கொண்டிருந்தார். [சகோதரர் பிரன்ஹாம் மீண்டும் மீண்டும் கதவைத் தட்டும் சத்தத்தைச் செய்கிறார்.] 208. “நான் நேசிக்கிற யாவரையும் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்.” இப்போது, உங்கள் தலைமுடியை வளர விட வேண்டும், சிகரெட் புகைப்பதை நிறுத்த வேண்டும், குறுகிய ஆடைகளை அணிவதை நிறுத்த வேண்டும், இவ்வாறான எல்லா காரியங்களையும் விட்டு, கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டுமோ, அப்படி வாழ வேண்டும் என்று நான் சொல்லும்போது, என்மேல் கோபப் படாதீர்கள். பாருங்கள், “நான் நேசிக்கிற யாவரையும் சிட்சித்து கடிந்து கொள்கிறேன்; ஆகையால் பக்தி வைராக் கியமாயிருந்து மனந்திரும்பு” என்று அவர் கூறினார். அவர் சொன்னது, ‘மேலும், எவன் கதவைத் திறந்து என்னை உள்ளே வரவிடுகிறானோ, அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடே போஜனம் பண்ணுவேன்; அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான். நீ கதவைத் திறந்தால் மட்டும் போதும், நான் உள்ளே பிரவேசிப்பேன்’ என்றார். “ஒருவேளை வருவேன்; அதைப்பற்றி யோசித்துப் பார்ப்பேன்” என்று அல்ல. “நான் வருவேன்.” “கதவைத் திறக்கிற ஒவ்வொருவரிடத்திலும் நான் பிரவேசிப்பேன்.” ஓ, அவை தெளிவான சத்தங்கள்! எனக்கு அது மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கிறதல்லவா? ஆம், ஐயா. நீங்கள், “சரி, சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நான் என்ன செய்தேன் தெரியுமா? நான் சென்று சபையில் சேர்ந்துவிட்டேன்; இப்போது நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்று விசுவாசிக்கிறேன்” என்று சொல்லலாம். 209. அது அப்படியல்ல, பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு “நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். ” என்று கூறினான்: “ஒருவேளை நீங்கள் பெறலாம்” என்று அல்ல. இல்லை, இல்லை 210. “ஒருவேளை” அல்ல. “நீங்கள் பெறுவீர்கள்.” ஏனெனில், “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வர வழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.” இது நிச்சயமானது. 211. “அவரை ஏற்றுக்கொண்டவர்களெல்லாருக்கும், தேவனுடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுத்தார். ” (தேவனுக்கே மகிமை!) தேவனுடைய பிள்ளைகள்! விசுவாசித்தவர்கள் சபையோடு சேர்க்கப்பட்டார்கள். சபைக் குள் நீங்கள் எப்படிப் பிரவேசிக்கிறீர்கள்? “ஒரே ஆவி யினாலே நாம் எல்லாரும் ஒரே சரீரத்திற்குள் ஞானஸ் நானம் பெற்றோம்.” இதில் விளங்காமை ஒன்றுமில்லை. இது உறுதியானது, தெளிவான சத்தம். லியோ, நான் இங்கே இரண்டு அல்லது மூன்று ஒலி நாடாக்களை நிரப்பிவிட்டேனா? நான் இங்கேயே நிறுத்திவிடுகிறேன். இல்லையென்றால், உங்களை பாதி இரவு வரை இங்கேயே வைத்திருப்பேன். 212. எபிரெயர் 13:8 ன் படி, “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” அது சரிதானே. அவர் கொஞ்சம் மட்டும் அப்படியிருப்பார்,” அல்லது “சில விஷயங்களில் மட்டும் அப்படியிருப்பார்” என்று அல்ல. “அவர் மாறாதவராய் இருக்கிறார்.” இதில் எந்த நிச்சய மின்மையும் (குழப்பமும்) இல்லையே? ஒன்றுமிலை. சரி. 213. “என்னை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” இதில் நிச்சயமின்மை ஒன்றுமில்லை. “என் வார்த்தைகளைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசு வாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” இதில் நிச்சயமின்மை (குழப்பமும்) ஒன்றுமில்லை. அது சரிதானே? அது தேவனுடைய வாக்குத்தத்தம். தேவனை நோக்கிய மனந்திரும்புதல், பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுதல், தெய்வீக சுகமளித்தல், மற்றும் இவை அனைத்தும் நிச்சய மானவை; அவை தேவனுடைய வாக்குத்தத்தங்கள். “விசு வாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். ” 214. இப்போது நீங்கள், “சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நான் அசெம்பிளீஸ் சபையைச் சார்ந்தவன்” என்று சொல்லலாம். அது நல்லது. மற்ற எந்தச் சபையில் சார்ந்திருப்பதைப்போலவே, அசெம்பிளீஸ் சபையைச் சார்ந்திருப்பதிலும் எனக்கு மகிழ்ச்சியே. அது ஒரு நல்ல சபை. எனது மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒன்றாக இருப்பது அஸம்ப்லிஸ் ஆப் காட் சபை. 215. “நான் “சர்ச் ஆப் காட்” (Church of God) சபையை சார்ந்தவன்” என்று நீங்கள் சொல்லலாம். நல்லது, நானும் அப்படித்தான். “சர்ச் ஆப் காட்” சபையை சார்ந்தவன்; அசெம்பிளீஸ் சபையை சார்ந்தவன். பாருங்கள். “சர்ச் ஆப் காட்” சபையும் எனது பெரிய ஆதரவாளர்களில் ஒன்றாக இருக்கிறது. 216. “நான் ஃபோர்ஸ்கொயர் (Foursquare) சபையைச் சார்ந்தவன்” என்று நீங்கள் சொல்லலாம். நல்லது, நானும் அப்படித்தான். பாருங்கள். அது ஒரு நல்ல சபை. அவர்கள் ஒரு சிறந்த மக்கள் கூட்டம். உண்மையில், அவை அனைத்திற்குள்ளும் ஒரே ஒரு சபை மட்டுமே இருக்கிறது; அவை அனைத்தும் சேர்ந்து ஒரே சபையாக இருக்கின்றன. ஆனால் அந்தக் குழுக்கள் நல்லவையே. பாருங்கள். 217. “நான் யுனைடெட் (United) சபையைச் சார்ந்தவன்” என்று நீங்கள் சொல்லலாம். நிச்சயமாக, நானும் அப்படித் தான். பாருங்கள். அவர்கள் நல்ல, அருமையான சகோதரர் கள். சரி. நானும் அவர்களைச் சேர்ந்தவன். ஏனென்றால், அவர்கள் இருக்கும் அதே சபையில்தான் நானும் இருக்கிறேன். ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப் பட்டவர்கள், ஏனெனில் ஒரே ஆவியினாலே நாம் எல்லாரும் ஒரே சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றோம். அது சரிதானே? இப்போது, அது நிச்சயமற்ற சத்தமல்ல. அது 1 கொரிந்தியர் 12-ஆம் அதிகாரம் கூறுகிற சத்தியம், “ஒரே ஆவியினாலே நாம் எல்லாரும் ஒரே சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றோம்; அந்தச் சரீரத்தின் அவயவங் களாயினோம். ” ஆமென். 218. இப்போது, இதுதான் விஷயம்: அந்த நாளில், இயேசு ஆடுகளை, வெள்ளாடுகளிடமிருந்து பிரிப்பேன் என்று கூறினார். ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளும் இருக்கும் என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணினார். மேலும், புத்தியுள்ள கன்னிகைகளும் புத்தியில்லாத கன்னிகைகளும் இருப்பார்கள் என்றும் அவர் வாக்குத் தத்தம் பண்ணினார். அவர்கள் அங்கே இருப்பார்கள். அவர் கூறிய ஒவ்வொரு காரியமும் நிச்சயமானவை. இன்றிரவு, எந்தச் சந்தேகத்தின் நிழலும் இல்லாமல், நான் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்திருக்கிறேன் என்பதை அறிந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன். நீங்கள் அதை நேசிக்கிறீர்களா? அதை விசுவாசிக்கிறீர்களா? 219. இப்போது, நான் நிற்பது அங்கேதான். முடிவாக ஒரு குறிப்பைக் கூறுகிறேன். சில நிமிடங்களுக்கு முன்பு நான் குறிப்பிட்ட என் நண்பரான பால் ரேடர், அவர் மரணமடையும்போது கூறிய ஒரு சம்பவம் இது. ஒருமுறை பால் ரேடர் கூறினார்: அவர் ஓரிகனிலிருந்து வந்தவர்; அதுதான் அவரது சொந்த ஊர். அவர் மரங்களை வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஒரு முறை, கனவில், அவரது மேற்பார்வையாளர் (Boss) ஒரு குறிப்பிட்ட மரத்தை குறிப்பிட்ட அளவு வெட்டும்படி அவரை அனுப்பினார். அவர் அந்த மரத்தை வெட்டிவிட்டு, கோடாரியை மரக்கட்டையில் வைத்தார். 220. மனிதனுடைய வலுவான தசைகள் அவனுடைய முதுகில் இருக்கின்றன. ஆனால் ஒரு கனமான பொருளைத் தூக்கும்போது, அவன் கால்கள், கைகள், முதுகு ஆகிய அனைத்தையும் பயன்படுத்துகிறான். உடலின் மற்ற எந்தப் பகுதியையும் விட முதுகு அதிக வலிமையுடையது. ஆகவே, அவர் அந்த மரக்கட்டையைப் பிடித்து, முழங் கால்களை நெருக்கமாக வைத்து, இழுத்தார், போராடினார், மீண்டும் போராடினார், தொடர்ந்து முயன்றார். ஆனால் இறுதியில் அவரால் மேலும் ஒரு அங்குலம்கூட நகர்த்த முடியவில்லை. அவர் முற்றிலும் களைத்துப்போய்விட்டார். “நான் முற்றிலும் வலுவிழந்துவிட்டேன்; அசையக்கூட முடியாத அளவுக்கு பலவீனமாகிவிட்டேன்” என்று அவர் சொன்னார்: 221. அப்போது என்ன நடந்துகொண்டிருந்தது என்றால், அவர் வெளிநாட்டில் மிஷனரி ஊழியம் செய்து கொண்டிருந்தார். அவர் மிகவும் தொலைவான ஒரு பகுதியில் இருந்தார். அங்கே “கருநிற சிறுநீர் காய்ச்சல்” (Blackwater Fever) என்று அழைக்கப்படும் ஒரு கடுமையான நோய் பரவியிருந்தது. பால் ரேடருக்கும் அதுதான் ஏற்பட்டது என்று நினைக்கிறேன். அங்கு மருத்துவர் யாரும் இல்லை; எந்த மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை. மேலும், உங்களில் பலர் அறிந்திருப்பதுபோல, பால் ரேடர் தெய்வீக சுகமளித்தலை உறுதியாக விசுவாசித்தவர். அவர் ஒரு சிறந்த மனிதர். 222. ஒரு முறை, பில்லி சண்டே அவர்கள் சிகாகோவில் சில கூட்டங்களை நடத்த வந்திருந்தார். அந்தக் கூட்டங்கள் சிக்காகோ சுவிசேஷ கூடாரத்தில் (Chicago Gospel Tabernacle) நடைபெற்றன. அப்போது பால் அங்கே பிரசங்கித்துக்கொண்டிருந்தார். பில்லி சண்டே சுமார் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் பிரசங்கித்தார். பின்னர் அவரிடம் புதிய பிரசங்கங்கள் இல்லாமல் போயின. ஆனால் பால் அங்கே ஏற்கனவே ஆறு அல்லது எட்டு மாதங்களாக தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருந் தார். அதனால் பில்லி சண்டே அவரிடம்: “பால், உமக்கு எப்போது பிரசங்கப் பொருள் தீர்ந்து போகும்? ” என்று கேட்டார். 223. அதற்கு பால் ரேடர், “குழாயில் (Hose) ஒரு மடிப்பு ஏற்பட்டால் மட்டுமே” என்று பதிலளித்தார். அதாவது, தண்ணீர் வரும் குழாயில் ஒரு மடிப்பு விழுந்துவிட்டால், நீரின் ஓட்டம் தடைபடுவது போல, அவருடைய ஆவிக்குரிய பாதையில் (Supply Line) தடை ஏற்படும்போது தான் பிரசங்கம் நிற்கும் என்று அவர் கூறினார். ஏதோ ஒரு காரியம் அந்த பாதையை அடைத்துவிட்டால் மட்டுமே அது நடக்கும். அவர் “நான் வெறுமனே பிரசங்க மேடைக்கு செல்வேன்.. என்று சொன்னார். உங்களில் பால் ரேடரை அறிந்தவர்கள் இருந் தால், அவர் எப்படி பிரசங்கிப்பார் என்பதை அறிவீர்கள். அவர் ஆதியாகமத்தில் ஆரம்பித்து வெளிப்படுத்தின விசேஷம் வரை, வேதாகமம் முழுவதும் பயணித்துப் பிரசங்கிப்பார். அவர் மேடையில் எழுந்து பேசத் தொடங்கு வார்; ஒரு செய்தி அவரைப் பற்றிக்கொண்டவுடன், அதையே மையமாக வைத்து வல்லமையோடு பிரசங்கத்தைத் தொடர்வார். 224. பின்னர் அவருக்கு அந்த கருநிற சிறுநீர் காய்ச்சல் (Black Water Fever) ஏற்பட்டது. அவர் மரித்துக் கொண்டிருப்பதாக எல்லோரும் நினைத்தனர். அவர் தனது மனைவியிடம், “என் அருகில் நின்று ஜெபித்துக் கொண்டிரு” என்றார். அறை மேலும் மேலும் இருண்டு கொண்டே போனது. இறுதியில் எல்லாமே மறைந்து போனது. அப்போதுதான் அவர் இந்தக் கனவைக் கண்டார். அந்தக் காய்ச்சல் தன்னை மிகவும் பலவீனப்படுத்தி விட்டதால், தான் முற்றிலும் சக்தியிழந்துபோயிருந்ததாக நினைத்ததாக அவர் சொன்னார்: பிளாக்வாட்டர் காய்ச்சல் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்; பொதுவாக அந்த நோயிலிருந்து உயிர் பிழைப்பது கடினம். ஆனால் அவர் எப்போதும் தேவனை விசுவாசித்து, அவர்மேல் நம்பிக்கை வைத்திருந்தார். ஆகையால், அவரது மனைவி தன் கைகளை அவர்மேல் வைத்து ஜெபித்துக்கொண்டிருந்தார். மேலும், அவர்கள் இருந்த இடத்திலிருந்து வெளியே வருவதற்கே பல நாட்கள் தோணியில் (Canoe) பயணம் செய்ய வேண்டியிருந்தது. 225. பின்னர் அவர், தான் ஒரு மரக்கட்டையைத் தூக்க முயற்சித்துக்கொண்டிருப்பதாகக் கனவு கண்டார். முயன்று முயன்று, இறுதியில் முற்றிலும் களைத்துப்போனார். தன்னுடைய சக்தி முழுவதும் தீர்ந்துபோய்விட்டது. அவர் மிகவும் சோர்வடைந்ததால், உட்கார்ந்து ஒரு மரத்தில் சாய்ந்துகொண்டு, “என்னால் இனி முடியாது. இந்த மரக்கட்டையைத் தூக்க முடியவில்லை. என்னுடைய எல்லா பலமும் எங்கே போய்விட்டது? ஒரு காலத்தில் இந்த மரக்கட்டையை ஒரே கையால் முதுகில் தூக்கிக்கொண்டு இங்கிருந்து நடந்துசென்றிருப்பேன். சிறிய மரமே, இங்கிருந்து போய்விடு! ” என்று கூறினார். அவர் மிகவும் வலிமையான மனிதர். அவர் தொடர்ந்து, “இதைவிடப் பெரிய மரங்களைக்கூட நான் எளிதாகத் தூக்கிச் சென்றிருக் கிறேன். ஆனால் இப்போது அங்கே உட்கார்ந்தபடி அழுதுகொண்டிருந்தேன். ‘என்னுடைய எல்லா பலமும் போய்விட்டது. இனி என்னால் எதுவும் செய்ய முடியாது. என் பலம் தீர்ந்துவிட்டது’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன்” என்றார். அப்போது அவரது முதலாளி (Boss) அருகில் வருகிற சத்தத்தைக் கேட்டார். அவர் வந்து “பால், என்ன பிரச்சனை? ” என்று கேட்டார். 226. “அந்த முதலாளியின் குரல் நான் கேட்டதிலேயே மிக இனிமையான குரலாக இருந்தது.” என்று பால் சொன்னார்: அதற்கு அவர், “எனக்கு எல்லாம் முடிந்து போய் விட்டது, என்னிடம் இனி பலமே இல்லை. என்னால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது. இந்த மரக் கட்டையைத் தூக்க முடியவில்லை. அதை நகர்த்தக்கூட முடியவில்லை” என்று கூறினார். 227. அதற்கு அவர் “பால், எதற்காக இதனோடு இவ்வளவு போராடிக் கொண்டிருக்கின்றீர்? ” என்று சொல்லி அங்கே சுட்டிக்காட்டி “உன் அருகிலேயே ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறதே! அந்த மரக்கட்டையை ஆற்றில் தள்ளிவிட்டு, அதன் மேல் ஏறி அமர்ந்து கீழே செல்லலாமே? முகாம் (Camp) அந்த மலைக்குக் கீழேதானே இருக்கிறது. நீ அந்த நீரோட்டத்தோடு நேராக முகாமுக்கே சென்று விடலாம். ” என்றார். மேலும், “அதை ஆற்றில் உருட்டிவிடு. பிறகு அதன்மேல் ஏறிக்கொள். நீ அதைச் சுமக்க வேண்டியதில்லை; அது உன்னைச் சுமந்துகொண்டு செல்லும். ” என்று கூறினார்: 228. அதற்கு அவர், “நல்லது, இதை நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததே இல்லையே!” என்றார். பின்னர் அவர் திரும்பிப் பார்த்தபோது, அந்த முதலாளி யார் என்பதை உணர்ந்தார். அது அவருடைய நிஜ முதலாளி யாக இருந்தார். அவர் அந்த மரக்கட்டையை நீரில் தள்ளி, அதன் மேல் ஏறி அமர்ந்தார். அவர் மிகுந்த மகிழ்ச்சி யடைந்தவராய், நீரைத் தூற்றி வாரி, “நான் அதன்மேல் சவாரி செய்கிறேன்! நான் அதன்மேல் சவாரி செய்கிறேன்! நான் அதன்மேல் சவாரி செய்கிறேன்! ” என்று உரக்கக் சத்தமிட்டுக்கொண்டே நீரோட்டத்தின் வழியாக அழகாக முகாமை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். தொடர்ந்து, “நான் அதன்மேல் சவாரி செய்கிறேன்!” என்று மகிழ்ச்சியுடன் சத்தமிட்டுக்கொண்டே சென்றார். 229. பின்னர் அவர் கண்விழித்தபோது, அறையின் நடுவில் நின்றுகொண்டிருந்தார். அவரது மனைவி ஒரு மூலையில் இருந்தார்; அவர் திடீரென்று எழுந்தபோது அவரைத் தள்ளிவிட்டிருந்தார். அவர் முழு சத்தத்தோடு “நான் அதன்மேல் சவாரி செய்கிறேன்! நான் அதன்மேல் சவாரி செய்கிறேன்! நான் அதன்மேல் சவாரி செய்கிறேன்! ” என்று சத்தமிட்டுக்கொண்டிருந்தார். 230. சகோதரனே, இன்றிரவு அதுதான் உண்மை. ஒரு நாள், இயேசு கிறிஸ்து என்னை நேசிக்கிறார் என்பதை நான் அறிந்தேன். நான் அவருடைய பிள்ளையாகப் பிறக்கும்படி நியமிக்கப்பட்டவன் என்பதை உணர்ந்தேன். அவர் என்னை அழைத்து, எனக்கு நித்திய ஜீவனைக் கொடுத்தார். என்னுடைய மரணம் எப்போது வரும் என்று எனக்குத் தெரியாது. அதைப் பற்றி நான் கவலைப்படுவதுமில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். இந்தப் புத்தகத்தில் அவர் வாக்குத்தத்தம் செய்த ஒவ்வொரு வார்த்தையின்மேலும் நான் சவாரி செய்கிறேன்! நான் அதன்மேல் சவாரி செய்கிறேன்! “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமென்பது, அதனை விரும்புகிற அனைவருக்குமானது; வருகிற எவரும் அதைப் பெற்றுக் கொள்ளலாம். தெய்வீக சுகமளித்தலும் எல்லோருக்கு மானது; அதனை விரும்புகிற எவரும் வந்து தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 1. இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே அந்த இரத்த வெள்ளத்தில் பாவிகள் மூழ்கும்போது, அவர்களுடைய எல்லா பாவக்கறைகளும் நீங்கிவிடுகின்றன. 2.சிலுவையில் மரித்துக் கொண்டிருந்தகள்ளன், அந்த இரத்த ஊற்றைக் கண்டு மகிழ்ந்தான்; அவனைப்போல் தகுதியற்றவனாகிய நானும், என் எல்லா பாவங்களையும் அதில் கழுவிக்கொள்ள முடியும் 3.விசுவாசத்தினால் உமது காயங்களிலிருந்து பாயும் அந்த இரத்தப் பெருக்கை நான் கண்டது முதல், மீட்கும் உமது அன்பே என் பாடலாகவும் செய்தியாகவும் இருந்து வருகிறது; நான் மரிக்கும் வரையும் அப்படியே இருக்கும். 4. பின்னர், இன்னும் உயர்ந்ததும் இனிமையானதுமான பாடலால், இரட்சிக்கிற உமது வல்லமையை நான் பாடுவேன்; இந்த ஏழையின் தடுமாறிப் பேசும் நாவு கல்லறையில் அமைதியாக கிடக்கும் போது கூட 231. நான் அதன்மேல் சவாரி செய்கிறேன், சகோதரனே, நான் அதன்மேல் சவாரி செய்கிறேன். நான் பெந்தெ கொஸ்தே மக்களிடையே வந்தபோது, பாப்டிஸ்டுகளிடத்தில் இருப்பதுபோலவே, அவர்களிடத்திலும் பல்வேறு ஸ்தாபனங்கள் இருந்தன. நான் அவற்றில் எதனுடனும் சேரவில்லை. அந்தக் குழுக்களுக்கு நடுவில் நின்றேன். இரு தரப்பினரும், எல்லாக் குழுக்களிலும் உள்ளவர்களும் சகோதரர்களே என்பதை அறிந்திருந்தேன். அவர்களில் ஒவ்வொருவரையும் இவ்வாறு என் கரங்களால் அணைத்துக்கொண்டேன். அவர்கள் என்னுடைய சகோதரர் கள். நான் அதன்மேல் சவாரி செய்கிறேன். 232. அண்மையில், டெக்சாஸின் Beaumont நகரில், ஒரு குறிப்பிட்ட ஸ்தாபன சபை என்னுடைய கூட்டங்களுக்கு நிதி ஆதரவளித்தது. எழுபத்திரண்டு சபைகள் அந்தக் கூட்டங்களை ஆதரித்தன. ஒரு பெரிய கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னுடன் மேடையில் ஒரு சகோதரர் அமர்ந்திருந்தார். அப்போது அந்த மாவட்டப் திருச்சபை மூப்பர் (District Presbyter) என்னை அழைத்து, “சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, தவறான முறையில் ஞானஸ்நானம் பெற்ற ஒரு மனிதரை நீங்கள் மேடையில் வைத்திருந்தீர்கள். அதை நீங்கள் எப்படி செய்தீர்கள்? இதை நான் ஏற்க முடியாது. ” நான், “ஏன்? ” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர் நம்முடையவர் அல்ல. அவர் நம்முடைய குழுவைச் சேர்ந்தவராக இருக்க முடியாது” என்றார். அதற்கு நான் “ஆனால் அவர் என்னுடைய சகோதரர்” என்றேன். 233. அப்போது அவர், “நாங்கள் என்ன செய்தோம் தெரியுமா? ஒரு சிறிய கோட்டை வரைந்து, உங்களை எங்களிடமிருந்து வெளியேற்றிவிட்டோம்” என்றார். 234. அதற்கு நான், “இப்போது நான் உங்கள் கோட்டுக்கு மேலாக இன்னொரு கோட்டை வரைந்து, உங்களை மீண்டும் உள்ளே சேர்த்துக்கொள்கிறேன்” என்றேன். “உங்களை நான் மீண்டும் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நீங்கள் என் சகோதரர்!” நான் அதன்மேல் சவாரி செய்கிறேன். அவர்கள் என்ன விசுவாசிக்கிறார்கள் என்பது எனக்கு முக்கியமல்ல. நான் விசுவாசிப்பது என்னவென்றால்: இயேசு கிறிஸ்து பிரிக்கப்பட்டவர் அல்ல என்பதே.நாம் அனைவரும் ஒரே சரீரம்; ஒரே நம்பிக் கையில், ஒரே போதனையில், ஒரே அன்பில் ஒன்றாயிருக் கிறோம். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நான் அதன்மேல் சவாரி செய்கிறேன். 235. இன்றிரவு நீங்கள் அதன்மேல் சவாரி செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் நோய்வாய்பட்டிருக்கிறீர்களா? தேவையின் மத்தியில் இருக்கிறீர்களா? இங்கே ஏதாவது ஒரு பாவி இருந்து, தன் கையை உயர்த்தி, “சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, எனக்காக ஜெபியுங்கள், தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் நான் சவாரி செய்ய விரும்புகிறேன் என்கிறீர்களா. ‘என் வார்த்தைகளைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு’ என்று அவர் கூறியிருக்கிறார். அந்த வாக்குத்தத்தத்தின் மேல் நான் சவாரி செய்ய விரும்பு கிறேன். இப்போதே ஒரு நிலைப்பாட்டை எடுக்க விரும்பு கிறேன்” என்று சொல்வீர்களா? உங்கள் கையை உயர்த் துங்கள்.“எனக்காக ஜெபியுங்கள்” என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்றாக இருக்கிறது. உங்களை ஆசீர்வதிப்பாராக 236. இங்கே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெறாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? “சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, அந்த வாக்குத்தத்தம் எனக் குரியது என்பதை நான் அறிவேன் என்று சொல்லுங்கள். அப்போஸ்தலர் 2:38-ல், நான் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ் நானம் பெற்றால், பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.” மேலும் மார்க்கு 16-ல்: “நீங்கள் உலகமெங்கும் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கி யுங்கள். விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறவன் இரட்சிக் கப்படுவான்; விசுவாசியாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” என்று அவர் கூறியிருக்கிறார். உங்கள் கரங்களை உயர்த்தி, “பரிசுத்த ஆவி எனக்கு வாக்குத் தத்தமாக அளிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு அது தேவை. தேவன் அதை எனக்குக் கொடுக்கும் வரை, அந்த வாக்குத்தத்தத்தின் மேல் நான் சவாரி செய்யப்போகிறேன்.” என்று சொல்லுங்கள். நன்று. தேவன் உங்களை ஆசீர் வதிப்பாராக. 237. இங்கே எத்தனை பேர், “சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நான் நோயுற்றிருக்கிறேன்” என்று சொல்லு கிறீர்கள்? ஒருவேளை மருத்துவரின் பார்வையில் உங்கள் நிலை குணப்படுத்த முடியாததாக இருக்கலாம். எனக்குத் தெரியாது. மருத்துவர் உங்களைக் குணப்படுத்த முடியாது; அவர் உதவ முடியும், சிகிச்சை அளிக்க முடியும், தேவன் குணமாக்கும் வரை உங்களுக்கு ஆதரவளிக்க முடியும். ஆனால் உண்மையாக குணமாக்குகிறவர் ஒருவரே. அவர் தேவன். பலவிதமான சிகிச்சை முறைகள் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு தீர்வு மாத்திரமே உண்டு, அது தேவன் மூலமாக மாத்திரமே. ஏனெனில் “உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே. ” என்று அவர் கூறியிருக்கிறார்: 238. “சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நான் நோய்வாய்பட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்த எல்லா வழிகளையும் முயற்சித்துவிட்டேன். ஆனால் இதிலிருந்து விடுபட முடியாததுபோல் தெரிகிறது. ஆனால் இன்றிரவு, அவர் என் எல்லா நோய்களையும் குணமாக்குகிற கர்த்தர், என் மீறுதல்களுக்காக அவர் காயம்பட்டார்; அவருடைய தழும்புகளால் நான் குணமானேன். நான் அதை விசுவாசிக் கிறேன். அந்த வாக்குத்தத்தத்தின் மேல் நான் சவாரி செய்யப்போகிறேன், நான் என் கையை உயர்த்துகிறேன், சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நான் அவருடைய வாக்குத்தத்தத்தின் மேல் சவாரி செய்யும்படி என்னை நினைவுகூருங்கள்” என்பீர்களா? அல்லேலூயா! இதுதான் அது. 239. இப்போது கேளுங்கள், நண்பரே. நான் உங்களிடம் ஒரு காரியத்தைச் சொல்ல விரும்புகிறேன். என்னிடம் உண்மையை மட்டும் சொல்லுங்கள். அது எப்படி தோல்வியடைய முடியும்? எல்லா புத்தியுடனும் நான் உங்களை கேட்கிறேன்: அது எப்படித் தோல்வியடைய முடியும்? நீங்கள் ஒரு பாவியாக இருந்து, தேவன் உங்களை இரட்சிக்கும்படி கேட்டால், அவர் உங்களை இரட்சிப்பதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதுமட்டு மல்ல, நீங்கள் இரட்சிக்கப்படும் பொருட்டு கிறிஸ்துவை மரிக்கும் படியாக அனுப்பினார். அப்படியிருக்க, நீங்கள் இரட்சிக்கப் படாமல் போவது எப்படி? எங்கே நீங்கள் தோல்வியடைய முடியும் என்று சொல்லுங்கள். ஒரே காரணம் என்ன வென்றால், அது இங்கே (தலையில்) இருக்கிறது; இங்கே (இருதயத்தில்) இல்லை. 240. நீங்கள், “பரிசுத்த ஆவி எனக்குரியது. நான் மனந்திரும்பியிருக்கிறேன், என் பாவங்களை அறிக்கை யிட்டிருக்கிறேன், கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறேன், ஞானஸ்நானம் பெற்றிருக்கிறேன், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற நான் ஆயத்தமாக இருக்கிறேன்” என்று சொல்லியும், நீங்கள் அதை இன்னும் பெறாததற்கான ஒரே காரணம், இங்கே (தலையில்)ஏதோ தவறு இருக்கிறது என்பதுதான். அது சரியே. நீங்கள் சரியான விதமாகச் சிந்திக்கவில்லை. ஆனால் அது இங்கிருந்து (இருதயத்தி லிருந்து) வந்தால், நீங்கள் அதை இப்போதே பெற்றுக் கொள்வீர்கள். 241. நீங்கள், “சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நான் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிறேன். அவரை என் சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்கிறேன். அவர் என் மீறுதல் களுக்காகக் காயம்பட்டார்; அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்” என்று சொல்லுகிறீர்கள். ஓ, சகோ தரனே, அதுவே முடிவானது. அதுவே முழுக் காரியமும். ஒரே விஷயம் என்னவென்றால், அது இருதயத்தில் (Down Here) இருந்தால் அது உண்மை; அது மனதில் மட்டும் (up Here) இருந்தால் அது உண்மையல்ல. அது உண்மையல்ல என்றால், தேவன் பொய்யராகக் காணப்படுவார். அப்படி யானால், அவர் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்குத் தத்தத்தை அளித்தவராகிவிடுவார். அவர் அந்த வாக்குத் தத்தத்தை மற்றவர்களுக்கு நிறைவேற்றுகிறார் என்றால், உங்களைப் பற்றி என்ன? அது சரிதானே? அதைச் சிந்தித்துப் பாருங்கள். 242. நீங்கள், “எனக்கு பரிசுத்த ஆவி வேண்டும்” என்று சொல்கிறீர்கள். அவர் அதை விரும்புகிற எவருக்கும் கொடுக்கிறார். அது சரிதானே? “நான் இரட்சிக்கப்பட வேண்டும்” என்று சொல்கிறீர்கள். “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப் படுவான். ” அதுதான். பாருங்கள், பிரச்சனை இங்கே (மனதில்) இருக்கிறது. இந்த இடத்தைச் சாத்தான் பயன்படுத்த அனுமதிப்பது நீங்கள்தான். 243. தேவன் ஒரு முடிவை எடுத்துவிட்டால், ஒவ்வொரு முறையும் அதே முடிவிலேயே நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் கேட்கும் காரியத்தைப் பற்றியதாக இருந்தால், அவர் முதல் மனிதனை விசுவாசத்தின் அடிப்படையில் இரட்சித்திருந்தால், இரண்டாவது மனிதனை யும் அதே அடிப்படையில் தான் இரட்சிக்க வேண்டும். அவரிடம் வருகிற ஒவ்வொருவரையும் அதே அடிப்படை யில் தான் அவர் இரட்சிக்க வேண்டும். [[ஒலி நாடாவில் காலி இடம்.] நான் அதன்மேல் சவாரி செய்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். நீங்கள் உங்கள் முழு இருதயத் தோடும் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் எழுந்து நில்லுங்கள். 244. இங்கே இருக்கிற ஒவ்வொரு பாவிக்கும் நான் சவால் விடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்கள் பாவங்களை தேவனிடம் வருந்தி அறிக்கையிடுங்கள், இயேசுவை இப்போதே உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். 245. இங்கே இரட்சிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு விசுவாசிக்கும் நான் சவால் விடுகிறேன். இப்போதே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவர் உங்களை பரிசுத்த ஆவியால் நிரப்பும்படி அனுமதியுங்கள். அவர் தர விரும்பும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பாவத்தை அறிக்கையிடுங்கள். அவரிடம் மன்னிப்பை கோருங்கள். 246. “சகோதரன் பிரன்ஹாம், நான் ஏற்கனவே ஒரு கிறிஸ்தவன்” என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால் உங்கள் பாவத்தை அறிக்கையிடுங்கள். உங்கள் பாவம் என்ன? அது அவிசுவாசம். உண்மையில், அடிப்படையான பாவம் அதுதான். அவிசுவாசம். உங்களை தேவனுடைய வாக்குத்தத்தத்திலிருந்து விலக்கி வைத்திருப்பது உங்கள் அவிசுவாசம்தான். இங்கே இருக்கும் ஒவ்வொரு நோயுற்றவரும், “அவருடைய தழும்புகளால் நாம் சுகமடைந்தோம்” என்ற வாக்குத்தத்தத்தின் மீது உங்கள் விசுவாசத்தை அறிக்கை யிடுங்கள். பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். 247. இங்கே எத்தனை விசுவாசிகள் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். இப்போது, பாவிகள் என்று கைகளை உயர்த்தியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கருகில் இருக்கும் ஒருவர்மேல் உங்கள் கைகளை வையுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை; மேடையிலோ, கூட்டத்திலோ இருந்தாலும். [ஒலி நாடாவில் காலி இடம்.] “…அவர்களுக்கு குணமாகுதல் தேவைப்பட்டால், ஆண்டவரே, அதை அவர்களுக்கு அருளும். ” ஜெபிப்போம். 248. எங்கள் பரலோகப் பிதாவே, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தக் கட்டுகளை நாங்கள் உடைக்கிறோம். ஒவ்வொரு பிசாசின் வல்லமையையும் உடைக்கிறோம். கிறிஸ்துவின் நீதியை உரிமைகோருகிறவர் களாக விசுவாசத்தினால் அதை தகர்க்கிறோம். இன்றிரவு இந்தச் சபையைப் பற்றியிருக்கும் ஒவ்வொரு சாத்தானின் பிடியையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தகர்த்து, அவன் இங்கிருந்து வெளியேறும்படி செய்யும். ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பிரசங்கிக்கப்பட்டுள்ளது; தேவனுடைய வல்லமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 249. சாத்தானே, அவர்களை விட்டு அகன்று போ! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! ஆமென்